ஒரே மாதத்தில் இரண்டு அமாவாசை வருகிறதா? வீட்டில் நல்ல காரியம் செய்யும் முன்பு இதை அறிந்துகொள்வது நல்லது

chithra pournami
- Advertisement -

வானியல் சாஸ்திரத்தின்படி சந்திரனின் 16 தேய்பிறை திதிகள், 16 வளர்பிறை திதிகள் சேர்ந்ததே ஒரு மாதம் என நமது முன்னோர்கள் கணக்கிட்டுள்ளனர். பொதுவாக ஒவ்வொரு மாதத்திலும் ஒரு பௌர்ணமி திதி, ஒரு அமாவாசை திதி வரும். ஆனால் சில சமயங்களில் ஒரே மாதத்தில் இரண்டு 2 அமாவாசை மற்றும் 2 பௌர்ணமி திதிகள் வந்து விடும். இதில் 2 அமாவாசை திதிகள் வருகின்ற மாதங்களில் பொதுவாக யாரும் சுபகாரியங்களை மேற்கொள்ள மாட்டார்கள். இத்தகைய மாதங்களில் சுபகாரியம் செய்யலாமா? அப்படி சுப காரியங்கள் செய்ய வேண்டியிருந்தால் அதற்கான பரிகாரங்கள் என்ன? என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

ஒரே மாதத்தில் 2 அமாவாசை திதி வருகின்ற மாதத்தை “மலமாதம்” என ஜோதிட சாஸ்திரம் கூறுகின்றது. இத்தகைய மல மாதத்தில் புதுமனை புகுவிழா, நிச்சயதார்த்தம், திருமணம், நிலைவாசல் படி ஸ்தாபித்தல், புது கிணறு வெட்டுதல் போன்ற எத்தகைய சுப காரியங்களையும் செய்ய மாட்டார்கள். ஆனால் ஒரு சிலருக்கு இப்படி 2 அமாவாசை ஒரே மாதத்தில் வருகின்ற மல மாதத்தில் சுபகாரியம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அதிலும் குறிப்பாக திருமணம் போன்ற சுப காரியத்தை செய்ய வேண்டிய நிலையில் இருப்பவர்களுக்கு மிகவும் கவலையை கொடுக்கும். இப்படி மல மாதத்தில் திருமணம் செய்ய வேண்டி இருப்பவர்கள் கீழ்க்கண்ட சில எளிய பரிகாரங்களை செய்வதால் மல மாதத்தில் திருமணம் செய்வதால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும்.

- Advertisement -

இரண்டு அமாவாசை ஒரே மாதத்தில் வருகின்ற மல மாதத்தில் திருமணம் செய்ய இருப்பவர்கள் திருமணத்தன்று காலையில் தாளிக்காட்டுவதற்கு முன்பாகவே அருகில் உள்ள சிவன் கோயிலில் மணமக்கள் பெயரில் அர்ச்சனை செய்து, அந்த கோயிலில் கொடுக்கப்படும் பிரசாதமான திருநீறு, குங்குமத்தை மணமக்களுக்கு பூசி விட வேண்டும். மேலும் அக்கோயிலில் நவக்கிரக சந்நிதியில் இருக்கின்ற சூரியன் மற்றும் சந்திரனுக்கு மணமக்களின் பெயர், நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும். கோயிலுக்கு கொடுத்த பூஜை பொருட்களை எக்காரணம் கொண்டும் வீட்டிற்கு எடுத்து வரக்கூடாது. இந்த பரிகாரத்தை புதுமனை புகுவிழா போன்ற மற்ற சுபநிகழ்ச்சிகள் செய்பவர்களும் செய்யலாம். இந்த பரிகாரத்தை செய்வதால் சிவபெருமான் அருளால் மல மாதத்தில் சுபகாரியம் செய்வதால் ஏற்படும் தோஷ பாதிப்பிலிருந்து மணமக்கள் காக்கப்படுகின்றனர்.

பொதுவாக அனைத்து ஊரிலும் ஒரு சிவன் கோயில் இருக்கும். எனினும் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் சிவன் கோவில் இல்லை என கூறுபவர்கள், தங்கள் வீட்டு பூஜை அறையிலேயே சிவபெருமானை வேண்டி திருநீறு மற்றும் குங்குமத்தை மணமக்களுக்கு பூசி, திருமண சுப காரியத்தை நடத்தலாம். திருமணம் முடிந்த பிறகு சிவபெருமான் அருள் புரியும் ஏதேனும் ஒரு கோயிலுக்கு மணமக்கள் ஒன்றாக சென்று அர்ச்சனை செய்து வழிபட்டு வர வேண்டும்.

அயல் நாட்டில் வசிப்பவர்கள் மல மாதத்தில் திருமண சுப காரியத்தை நடத்தும் முன்பாக மணமக்கள் மற்றும் மணமக்கள் வீட்டார்கள் அனைவரும் ஒன்றாக அதிகாலை சூரிய தரிசன வழிபாடு செய்வதால் மலமாதத்தில் ஏற்படுகின்ற தோஷம் குறையும்.

- Advertisement -