இறை வழிபாடு நமக்கு பணத்தை கொடுக்க வேண்டாம். சொத்து சுகத்தை வாரி வழங்க வேண்டாம். நகைகளை கொட்டிக் கொடுக்க வேண்டாம். கொஞ்சமாக மன நிம்மதியை மட்டும் கொடுத்தால் போதும் என்று நினைப்பவர்கள், உங்களில் எத்தனை பேர் இருக்கிறீர்கள். அளவோடு பணம் இருந்து, நிறைவான மன நிம்மதியை கொடுத்த அந்த இறைவனுக்கு நன்றி சொல்பவர்கள், இன்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
வெறும் பணத்தை மட்டுமே குறிக்கோளாக வைத்துக் கொள்ளாமல், குடும்ப நலனுக்காக, குடும்ப சந்தோசத்திற்காக ஆரோக்கியத்திற்காக, மன நிம்மதியை கேட்டு தவிப்பவர்களுக்கு இந்த ஆன்மீகம் சார்ந்த வழிபாடு ஒரு நல்ல வழியை காட்டி தரும்.
மன நிம்மதி தரும் நரசிம்மர் வழிபாடு
மன நிம்மதி இல்லாமல் இரவு தூங்க முடியவில்லை. சந்தோஷம் இல்லை. சிரிப்பு இல்லை. இந்த வழிபாட்டை செய்தால் மனது உடனடியாக லேசாகும் என்றால், இதற்கு ஏதாவது ஒரு வழிபாடு இருந்தால் சொல்லுங்களேன். கவலையே படாதீங்க. இன்று செவ்வாய்க்கிழமை. பிரதோஷ நேரமான மாலை 4:30 மணியிலிருந்து 6:00 மணிக்குள் இந்த வழிபாட்டை வீட்டில் இருந்து செய்தாலும் சரி, அல்லது லட்சுமி நரசிம்மர் சன்னிதானத்திற்கு சென்று செய்தாலும் சரி, உங்களுடைய மனது உடனடியாக லேசாகும்.
மேலே குறிப்பிட்டுள்ள நேரத்தில், பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள். ஒரு டம்ளர் பானகம் நெய்வேதியம் வைத்துவிட்டு, லட்சுமி நரசிம்மரை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். லட்சுமி நரசிம்மரின் திரு உருவப்படம், கட்டாயம் பூஜை அறையில் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பெருமாளையே லட்சுமி நரசிம்மராக பாவித்து பூஜை அறையில் அமர்ந்து, இந்த மந்திரத்தை 108 முறை சொல்லுங்கள். மந்திரத்தை கடகடவென உச்சரித்து முடிக்க கூடாது. மந்திரத்தை பொறுமையாக சொல்ல வேண்டும்.
லட்சுமி நரசிம்மர் மந்திரம்
ஓம் நமோ லக்ஷ்மி நரசிம்மாய நமஹ !
உங்கள் பிரச்சினையை இறைவனிடம் சொல்லி இந்த மந்திரத்தை 108 முறை உச்சரித்து முடிக்கும்போது, உங்கள் மனக்கவலையானது குறைவதை உங்களால் உணர முடியும். இந்த பூஜையை செய்து முடிப்பதற்குள், உங்களுடைய மனது லேசாக மாறி இருக்கும். மனதில் 50 கிலோ பாரத்தை தூக்கி வைத்தது போல கஷ்டம், மன அழுத்தம், மன பாரத்தை குறைத்து மனதை லேசாக்கி கொள்ள, இந்த வழிபாட்டை செய்து பாருங்கள்.
உங்கள் மனது பூ போல லேசாக மாறும். முழு நம்பிக்கையோடு இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும். எல்லா பிரச்சனைகளையும் அந்த நரசிம்மர் பார்த்துக் கொள்வார். கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரக்கூடிய தெய்வம் இந்த நரசிம்மர். மற்ற தெய்வங்கள் எல்லாம் நேரம் காலம் பார்த்து அவதாரம் எடுத்து பூமிக்கு வந்தார்கள்.
இதையும் படிக்கலாமே: ருண ஹரண கணபதி மந்திரம்
ஆனால் பிரகலாதன், கூப்பிட்ட உடனேயே அவதரித்த கடவுள் இந்த நரசிம்மர். நம்முடைய கஷ்டங்கள் தீர இவர் உடனடியாக ஏதாவது ஒரு ரூபத்தில் அவதாரம் எடுத்து வந்து நமக்கு உதவி செய்வார் என்பது தான் இந்த வழிபாட்டிற்கு பின்னால் மறைந்திருக்கும் நம்பிக்கை. உங்களுக்கும் நம்பிக்கை இருந்தால் இதை பின்பற்றி பலன் பெறவும்.