உங்களுக்கு தீராத மன உளைச்சல், கோபம், மன கஷ்டம், எதுவாக இருந்தாலும் அதை தீர்க்க ஒரு ஏலக்காய் போதும்! நிலை தடுமாறும் போது இப்படி செய்து பாருங்கள்.

elakai
- Advertisement -

எதிர்பாராத சில சமயங்களில், எதிர்பாராத சந்தர்ப்பங்களின் மூலம், தேவையற்ற பிரச்சினைகளில் நாம் சிக்கிக் கொள்வோம். குடும்பத்தில் உறவினர்களுக்குள் பிரச்சினையாக இருக்கலாம், அல்லது அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களிடம் மனஸ்தாபமாக இருக்கலாம். செய்யாத தவறுக்கு வீண் பழி சுமக்கும் தர்மசங்கடம் கூட சில சமயங்களில் வரலாம். சில சமயங்களில் எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது. ஆனால், நம்முடைய மனம் எதையோ இழந்தது போல இருக்கும். இனம் புரியாத பயமும் சில சமயங்களில் வந்து நம் மனதை துன்புறுத்தும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் நம்மை நாமே எப்படி அமைதிப்படுத்திக் கொள்வது? நம் நிலைமையை எப்படி இயல்பான நிலைக்கு திருப்புவது? இதற்கான தீர்வை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

sad-crying4

ஒரு மனிதனுக்கு அதிகப்படியான கோபமும், ஆத்திரமும், தன்னிலை மறந்து, தன்னை அறியாமல் வரவே கூடாது. அப்படியே சூழ்நிலை உங்களை, கோபப்பட வைத்தாலும், ஆத்திரமூட்டினாலும் அதைக் கட்டுப்படுத்த வேண்டிய மனப்பக்குவம் உங்களுக்கு கட்டாயம் இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால், அதிகப்படியான கோபம் உங்களையும், உங்களது வாழ்க்கையையும் கொஞ்சம் கொஞ்சமாக அழிப்பதை விட, உங்களை சுற்றியிருப்பவர்களின் வாழ்க்கையை அது மோசமாக பாதித்துவிடும்.

- Advertisement -

முடிந்தவரை எப்படிப்பட்ட சூழ்நிலையிலும், எப்படிப்பட்ட பிரச்சனையிலும் நிதானமாக சிந்தித்து பழகுவது தான் நல்லது. சரிங்க! கண்ட்ரோல் பண்ண முடியாத கோபம், கண்ட்ரோல் பண்ண முடியாத அழுகை, பெரிய கஷ்டத்தில் சிக்கிக் கொண்டீர்கள், என்ன செய்வது? கோபம் வரும் நேரத்தில், அழுகை வரும் நேரத்தில், மன உளைச்சலாக இருக்கும் நேரத்தில், முதலில் எந்த ஒரு முடிவு எடுப்பதையும் தள்ளிப் போட வேண்டியது மிக மிக அவசியம். முடிந்தவரை அனாவசியமாக கோபத்தில் வார்த்தைகளை யாரிடமும் கொட்டி விடக்கூடாது. அமைதி காப்பது தான் முதல் மருந்து.

angry

இரண்டாவது உங்களது மனதை அமைதிப்படுத்தி உங்களுக்கு பிடித்த இஷ்ட தெய்வத்தை வேண்டி, அந்த இஷ்ட தெய்வத்தின் பெயரை உச்சரித்துக் கொண்டே இருப்பது. கண்களை மூடி மனதை அமைதிப்படுத்தி மனதை ஒருநிலைப்படுத்த வேண்டும். இப்படி உங்களது மனதை ஆன்மீகத்தில், தியானத்தில் ஈடுபடுத்தி விட்டீர்கள் என்றால் தானாக அடுத்த 15 லிருந்து 20 நிமிடத்திற்குள் கோபம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்துவிடும்.

- Advertisement -

அதன் பின்பு, ஈஸியான ஒரு டிப்ஸ்! இரண்டு ஏலக்காய்களை வாயில் போட்டு அடக்கிக் கொள்ளுங்கள். அந்த உமிழ்நீரை மட்டும் விழுங்க தொடங்குங்கள். உங்கள் கடவாபல் இடுக்கில் வைத்து, கடித்துக்கொண்டால் கூட போதும். உங்கள் தொண்டைக்குள் அந்த உமிழ் நீர் இறங்கும் போது, உங்களின் கோபம் மன உளைச்சல், அழுகை தேவையற்ற மன பயம் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிக்கும்.

நம்ப முடியவில்லையா? கோபமும், அழுகையும் உங்கள் வாழ்க்கையில் வரும் போது இந்த டிப்ஸை ட்ரை பண்ணி பாருங்க. எப்போதுமே உங்க பாக்கெட்ல, பர்ஸ்ல இரண்டு ஏலக்காய் வச்சிக்கோங்க. அலுவலகத்தில் பிரச்சனை என்றாலும் அல்லது வெளியே செல்லும் இடத்தில் எதிர்பாராமல் உறவினர்களிடத்திலோ அல்லது உங்கள் நெருங்கிய நண்பர்களிடத்தில் கூட பிரச்சனை வரலாம்.

- Advertisement -

கணவன் மனைவிக்குள், அம்மா பையன், மாமியார் மருமகள், எப்படிப்பட்ட சண்டையாக இருந்தாலும் சரி உங்களின் மனநிலை சரியில்லாத சமயத்தில் இரண்டு ஏலக்காய்களை வாயில் வைத்துக்கொண்டாள் உங்களது மனது லேசாக்கும். தன்நிலை தடுமாறி, தேவையற்ற சமயங்களில், தேவையற்ற முடிவுகளை எடுத்து சிக்கல்களில் சிக்கிக் கொள்ளாமலிருக்க இது ஒரு சிறப்பான டிப்ஸ். தேவைப்பட்டால் யூஸ் பண்ணி பாருங்க!

இதையும் படிக்கலாமே
வறுமையை விரட்டி அடிக்கும் இந்த 2 பொருளை உங்கள் வீட்டு பூஜை அறையில் பயன்படுத்தி வாருங்கள்! வீட்டில் தரித்திரம் குடி கொள்வதற்கு வாய்ப்பே இல்லை.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -