பலநாள் கஷ்டத்திற்கு 1 நாளில், 1 நிமிடத்தில் தீர்வு. ஒரு கைப்பிடி அளவு கல்லுப்பை இப்படி செஞ்சு பாருங்க! கஷ்டம் தண்ணீரோடு கரைந்து போகும்.

salt
- Advertisement -

மனிதனாக பிறந்து விட்டால் தீராத மன குழப்பத்திற்கு, குறையே இருக்காது. எந்த நேரமும் நம்முடைய மனம் ஏதாவது ஒரு பிரச்சனையை நினைத்து குழப்பிக் கொண்டே தான் இருக்கும். இந்த மனதை சரிசெய்ய என்னதான் செய்வது? நினைத்ததை, நினைத்த நேரத்தில் வெளியே பேசிவிட்டால் மனதில் பயமும் இருக்காது. வாழ்க்கையில் பிரச்சனையும் இருக்காது. ஆனால் சில சமயங்களில் மனது சரி என்று சொல்வதை மூளை ஏற்பது இல்லை. மூளை சரி என்று சொல்வதை மனது ஏற்பது கிடையாது. இந்த குழப்பத்திற்கு இறுதிவரை தீர்வே கிடையாதா? என்று குழம்புபவர்களுக்கு மன நிம்மதியை தேடி தரக்கூடிய தாந்திரீக ரீதியான ஒரு பரிகாரத்தை பற்றிதான் இன்று தெரிந்து கொள்ள போகிறோம்.

sad

நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் இந்த பதிவை தொடர்ந்து படித்து பயன் பெறலாம். நம்பிக்கை இல்லாதவர்கள் பதிவை தொடர்ந்து படிப்பதில் எந்த பிரயோஜனமும் இல்லை. நம்பிக்கை இல்லாமல் இந்த பரிகாரத்தை செய்தாலும் அதில் ஒரு துளி அளவும் உங்களுக்கு பலன் கிடைப்பதற்கு வாய்ப்பு இல்லை.

- Advertisement -

முதலில் நம் மனதில் இருக்கக்கூடிய பாரத்தை மனதில் இருக்கக்கூடிய கஷ்டத்தை யாராவது ஒரு நபரிடம் பகிர்ந்துகொண்டு விட்டாலே போதும். மன பாரம் குறைந்து விடும். மன இறுக்கம், மன அழுத்தம் வெளியே சொல்லமுடியாத துன்பங்கள் இவைகளை வெளிப்படுத்தாமல் அழாமல் மனதிற்குள்ளேயே அடக்கி வைத்திருப்பதால் தான் நமக்கு உடல்ரீதியாகவும் பிரச்சனை வருகின்றது. மனரீதியாகவும் பிரச்சினை வருகின்றது.

salt1

முடிந்த வரை உங்களுக்கு உள்ள பிரச்சனையை உங்களுக்கு மிகவும் பிடித்த ஒரு நபரிடம் பகிர்ந்து கொள்வது நல்லது. அப்படி முடியாத சூழ்நிலையில் ஒரு வெள்ளைக் காகிதத்தை எடுத்து உங்களது பிரச்சனை அனைத்தையும் எழுதி விடுங்கள். அந்த காகிதத்தில் எழுதியதைப் படித்து ஒருமுறை மனதார அழுதாலும் சரிதான்.

- Advertisement -

அதன் பின்பு ஒரு டம்ளர் நிறைய நல்ல தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் அளவு கல் உப்பை போட்டு கரைத்துக் கொண்டு உங்கள் முன்னால் வைத்து விடுங்கள். உப்பைக் கரைக்கும் போது உங்கள் கஷ்டங்கள் கறைந்ததாக நினைத்துக்கொள்ள வேண்டும்.

writing

அதன் பின்பு உங்கள் கஷ்டங்களை எழுதி வைத்திருக்கும் காகிதம் இருக்கிறது அல்லவா? அதை எடுத்து உங்களால் முடிந்தவரை சுக்குநூறாக கிழிப்பது என்று சொல்வார்கள் அல்லவா அப்படி கிழித்து அந்த காகிதத்தை, அந்த உப்பு தண்ணீரில் போட்டு விடுங்கள். அதன் பின்பு அந்த தண்ணீரை எங்காவது கொட்டி விட வேண்டியதுதான். கழிவறையில் மட்டும் கொட்டி விடாதீர்கள் வேறு ஏதாவது இடத்தில் கொட்டி விடுங்கள்.

water

இப்படி இந்த பரிகாரத்தை முழுமனதோடு செய்யும் பட்சத்தில் உங்கள் மனது உங்களை அறியாமலேயே லேசாக தொடங்கும். எழுதிய காகிதத்தை மட்டும் மற்றொருவர் படிப்பதற்கு முன்பு கிழித்து விடுங்கள். உங்கள் கஷ்டங்கள் எழுதிவைத்த காகிதத்தை அடுத்துவார்கள் படித்தால் உங்களை நிச்சயம் பைத்தியக்காரர் என்று தான் நினைப்பார்கள். ஆனால் இந்த பரிகாரம் பைத்தியக்காரத்தனம் அல்ல.

water1

ஒரு முறை முயற்சி செய்து பார்த்தவர்களுக்குத் தான் தெரியும். இதில் எத்தனை ரகசியங்கள் அடங்கியுள்ளது என்று. உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள். மன அழுத்தமுள்ள நேரத்தில் நீங்கள் தவறான பாதைக்குச் செல்லாமல் தவறான முடிவை எடுக்காமல் வாழ்க்கையை நல்ல திசைக்குத் திருப்ப இந்த பரிகாரம் உங்களுக்கு துணையாக நிற்கும் என்ற நம்பிக்கையோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -