நாம் எடுக்கக்கூடிய ஒவ்வொரு முடிவுக்கும் ஒவ்வொரு விதமான விளைவுகள் உண்டாகும். நல்ல விதத்தில் முடிவெடுத்தோம் என்றால் நல்ல விளைவுகளும் தவறான முடிவை எடுக்கும் பொழுது தவறான விளைவுகளும் ஏற்படும். இந்த முடிவை எடுப்பதற்கு நமக்கு உறுதுணையாக இருக்கக்கூடியது நம்முடைய மனமும் மதியும்தான். பல நேரங்களில் மதியை விட மனம் தான் முடிவெடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அப்படிப்பட்ட மனதை ஆட்டி வைக்கக்கூடிய ஒரு கிரகமாக திகழ்பவர்தான் சந்திர பகவான். சந்திர பகவானுக்கே தோஷத்தை நிவர்த்தி செய்தவர் தான் சிவபெருமான். அதனால் மனம் ரீதியான எந்த பிரச்சனைகள் இருந்தாலும் நாம் மனதால் விரும்பியது நமக்கு கிடைக்கவும் தீர்க்கமான முடிவை எடுக்கவும் சோமவாரத்தில் வரக்கூடிய பிரதோஷ நாள் அன்று செய்ய வேண்டிய ஒரு பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
மனம் தெளிவு பெற பரிகாரம்
நமக்கு எவ்வளவுதான் இக்கட்டான சூழ்நிலை இருந்தாலும் அந்த சூழ்நிலையை சமாளித்து ஒரு சரியான முடிவை எடுத்தால்தான் நம்முடைய வாழ்க்கை சிறப்பாக அமையும். அந்த நேரத்தில் மனம் தடுமாறி தவறான முடிவை எடுத்து விட்டோம் என்றால் நம் வாழ்க்கையே மாறிவிடும். நம்முடைய வாழ்க்கையில் பலவிதமான முடிவுகளை எடுத்து அதனால் கஷ்டப்பட்டு கொண்டு இருப்போம். அந்த கஷ்டங்கள் அனைத்திலும் இருந்து விடுபடவும் இனிமேல் எடுக்கக்கூடிய முடிவுகள் தெளிவான முடிவுகளாக அமையவும் செய்ய வேண்டிய ஒரு எளிமையான பரிகாரத்தை தான் இப்பொழுது பார்க்க போகிறோம்.
சந்திர பகவானுக்குரிய கிழமையாக திகழ்வது திங்கட்கிழமை. திங்கட்கிழமையில் சந்திர பகவானின் தோஷத்தை நீக்கக்கூடிய சிவபெருமானுக்குரிய பிரதோஷமும் சேர்ந்து வருகிறது. மேலும் இன்றைய தினம் சிவராத்திரி என்பதால் இன்றைக்கு நாம் செய்யக்கூடிய எந்த ஒரு பரிகாரமாக இருந்தாலும் அது பல மடங்கு வெற்றியைத் தரும் என்றே கூறலாம். சந்திர பகவானுக்குரிய தானியமாக திகழ்வது பச்சரிசி. இந்த பரிகாரத்தை செய்வதற்கு நமக்கு பச்சரிசி மட்டும் இருந்தால் போதும். வேறு எதுவும் தேவையில்லை. இந்த பரிகாரத்தை யார் வேண்டுமானாலும் செய்யலாம். எப்படிப்பட்ட சூழ்நிலையில் வேண்டுமானாலும் செய்யலாம் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இரவு படுக்கச் செல்வதற்கு முன்பாக வலது கையில் ஒரு ஸ்பூன் அளவிற்கு பச்சரிசி எடுத்துக்கொண்டு நீங்கள் படுக்கும் இடத்தில் வந்த அமர்ந்து கொண்டு முழு மனதோடு சிவபெருமானுடைய “ஓம் ஸ்ரீ சந்திர சோமேஸ்வராய நமஹ” என்னும் மந்திரத்தை குறைந்தபட்சம் ஐந்து நிமிடத்தில் இருந்து பத்து நிமிடம் வரை கூற வேண்டும். பிறகு நீங்கள் எடுத்த தவறான முடிவுகளால் என்னென்ன பிரச்சனைகள் வந்ததோ அந்த பிரச்சினைகள் அனைத்தும் தீர வேண்டும், திரும்பவும் எந்தவித தவறான முடிவுகளையும் எடுக்கக் கூடாது, எந்த ஒரு முயற்சியை செய்வதாக இருந்தாலும் மன தெளிவோடு ஒருநிலைப்பட்டு செய்ய வேண்டும் என்று முழு மனதோடு சிவபெருமானை வேண்டிக் கொள்ளுங்கள்.
பிறகு அந்த பச்சரிசியை ஒரு பேப்பரில் மடித்து உங்களுடைய தலையணைக்கு கீழ் வைத்துவிட்டு படுத்து உறங்குங்கள். மறுநாள் காலையில் எழுந்து இந்த பச்சரிசியை எடுத்து காக்கா, குருவி, எறும்புகளுக்கு தானமாக போட்டு விட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் சந்திர பகவானால் நமக்கு ஏற்பட்ட தோஷங்களாக இருந்தாலும் சரி நாம் எடுத்த முடிவுகளால் நமக்கு ஏற்பட்ட பிரச்சினைகளாக இருந்தாலும் சரி அவை அனைத்தும் நீங்கி நாம் நினைத்தது போல் நம்மால் வாழ முடியும்.
இதையும் படிக்கலாமே: பண பிரச்சனையை தீர்க்கும் குபேர சனீஸ்வரர்
ஒரே ஒரு ஸ்பூன் பச்சரிசி வைத்து முழு மனதோடு சிவபெருமானை நம்பி இந்த ஒரு பரிகாரத்தை இன்று இரவு செய்பவர்களுக்கு அவர்கள் மனம் தெளிவாக சிறப்பான முடிவுகளை சரியான நேரத்தில் எடுத்து வாழ்க்கையில் வெற்றி பெறுவார்கள் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.