நீங்கள் எப்போதும் மன மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா? இந்த 1 பொருளை முகர்ந்து பார்த்தாலே போதும்.

nanaari

எந்த ஒரு காரியத்தை நாம் தொடங்குவதற்கு முன்பாகவும் அதை மனநிறைவோடு செய்ய வேண்டும் என்று சொல்லுவார்கள். மனநிறைவோடு சேர்த்து, அந்த காரியத்தை தொடங்கும் போது, நமக்கு மன மகிழ்ச்சியும் இருக்க வேண்டும். வேண்டாவெறுப்பாக எந்த ஒரு செயலைத் தொடங்கினாலும், அந்த செயல் நிச்சயம் வெற்றி அடையாது. வீட்டிலிருந்து வெளியே கிளம்பும்போது வீட்டில் நிம்மதி நிலவவேண்டும். சந்தோஷம் இருக்க வேண்டும். அதை தவிர்த்து, எப்போதும் சண்டை, எப்போதும் மனைவியின் தொல்லை, குழந்தைகளின் தொல்லை, பிக்கல் பிடுங்கல் இருந்து கொண்டே இருந்தால், வெளியே செல்பவர்களால் நிச்சயமாக மன நிம்மதியோடு வேலை செய்ய முடியாது.

happy

மன நிம்மதி இல்லை, சந்தோஷம் இல்லை என்றால் வாழ்க்கையில் பிரச்சினை மட்டுமே மிஞ்சும். ஆக உங்களுக்கு எவ்வளவு தான் கடன் பிரச்சினைகள் இருந்தாலும், எவ்வளவு தான் பண பிரச்சனை இருந்தாலும், எவ்வளவுதான் தொழில் ரீதியாக பிரச்சனை இருந்தாலும் சரி, உங்களது மனதை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள பாருங்கள்.

கோடி கோடியாக பணத்தை வைத்திருப்பவர்கள் எல்லாம், ‘சந்தோஷம்’ என்ற ஐந்தெழுத்து வார்த்தையை அனுபவிக்க முடியாமல் இன்றளவும் தவித்து வருகிறார்கள். அந்த சந்தோஷம்  நம்மிடம் நிறைய இருக்கிறது என்று முதலில் மகிழ்ச்சியாக இருக்கப் பழகிக் கொள்ளுங்கள். சரி, ஆன்மீக ரீதியாக நம்முடைய மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள ஒரு சிறிய பரிகாரத்தை பற்றித்தான் இப்போது தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

nanaari1

நம்முடைய முன்னோர்கள் நமக்காக விட்டுச் சென்ற பல மூலிகை வேர்கள் இருக்கின்றது. ஒவ்வொரு வேருக்கும் ஒவ்வொரு மகிமை. அப்படிப்பட்ட ஒரு சக்தி வாய்ந்த மகிமை வாய்ந்த வேர் தான் நன்னாரி வேர்! இந்த நன்னாரி வேர் நாட்டுமருந்துக் கடைகளில் கிடைக்கும். மிகவும் மலிவாக கிடைக்கும். அதை வாங்கி உங்களுடைய வீட்டில் சிறு சிறு துண்டுகளாக வெட்டி ஒரு டப்பாவில் போட்டு சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

தினமும் உங்களுடைய வீட்டில் சாம்பிராணி தூபம் போட்டு அதில் இந்த நன்னாரி வேரை போட்டு, வீடு முழுவதும் காண்பிப்பது மிகவும் நல்லது. வீட்டில் உள்ள உறுப்பினர்கள் இந்த நன்னாரி வேர் புகையை முகர்ந்தால் அவர்களுடைய மனது இயற்கையாகவே சந்தோஷமாக இருக்கும். மனம் அமைதி பெறும். மன நிம்மதி கிடைக்கும்.

நன்னாரி வேரை தூபம் மட்டும் போடாமல், அந்த வேரை பயன்படுத்தி ஜூஸ் ஏதாவது போட்டு குளித்தால் உடலுக்கு நல்ல குளிர்ச்சியைக் கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சில ரோட்டோர கடைகளில் எல்லாம் நன்னாரி சர்பத் என்றே கிடைக்கும். அதை சில பேர் வாங்கிக் குடிக்க மாட்டார்கள். அதுவும் இல்லாமல் அதில் எசன்ஸ் தான் கலப்பார்கள். உங்களுடைய வீட்டிலேயே நன்னாரி வேரை வாங்கி வைத்து தண்ணீரில் போட்டு ஊறவைத்து அந்த தண்ணீரை குடித்து வரலாம் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று.

pray

இப்படி நன்னாரிவேரை உள்ளுக்கும் எடுத்துக்கொள்ளலாம். சுவாசிக்கவும் செய்யலாம். இரண்டுமே உங்களுக்கு வாழ்க்கையில் நன்மை தரக்கூடியது. சாதாரணமாக நமக்கு கிடைக்கக்கூடிய வேர்களில் அதி அற்புத பலன்கள் கண்ணுக்கு தெரியாமல் மறைந்து தான் இருக்கின்றது. நன்னாரி வேரை நீங்கள் பயன்படுத்தி பாருங்கள். நிச்சயமாக உங்களுடைய வாழ்க்கையில் நல்ல மாற்றம் ஏற்படும் என்ற கருத்துடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.