இன்று பவுர்ணமி! சந்திர தரிசனத்தின் போது இந்த 1 வரி மந்திரத்தை உச்சரித்தால் போதும். சிக்கலான பிரச்சனைகளை கூட, சுலபமாக சமாளிக்க, மன தைரியம் வரும்.

chitra-pournami

மனிதர்களுக்கு எப்போதுமே இக்கட்டான சூழ்நிலையில், மனம் தடுமாறும். குழப்பங்கள் நிறைந்த இந்த வாழ்க்கையில், சங்கடங்கள் வரும் போது தான் நம்முடைய மனது தெளிவாக இருக்க வேண்டும். ஆனால் நிறைய பேர் பிரச்சினையின் சிக்கிக் கொள்ளும்போது, இக்கட்டான சூழ்நிலை வரும்போது, மனக்குழப்பத்தில் தடுமாற்றத்தில் அவசரத்தில் என்ன முடிவு எடுப்பது என்று தெரியாமல், தவறான சில முடிவுகளை எடுத்து கஷ்டத்தில் சிக்கிக் கொள்கிறார்கள். எப்பேர்ப்பட்ட சூழ்நிலையிலும் உங்களுடைய மனம் தெளிவாக இருக்க, சிக்கலான பிரச்சனைகளை கூட சுலபமாக சமாளிக்க சந்திர பகவானை பௌர்ணமி தினத்தில் எந்த மந்திரத்தை சொல்லி எப்படி வழிபட வேண்டும். தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

moon

பௌர்ணமி தினத்தில் சந்திர பகவானை மாலை நேரத்தில் வழிபாடு செய்ய வேண்டும். பௌர்ணமி தினத்தில் மாலை 6 மணி அளவில் பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து விடுங்கள். குறிப்பாக சந்திரன் உதயமாகும் நேரம் என்பது 6.00 மணிக்கு மேலாகத் தான் இருக்கும். இந்த சந்திர உதயத்தின் போது சந்திர பகவானின் ஒளி உங்கள் மீது படும் படியான வெளி இடங்களில் நீங்கள் இருக்க வேண்டும். அதாவது மொட்டை மாடி பால்கனி போன்ற இடங்களில் சந்திர தரிசனம் செய்யலாம்.

சந்திர தரிசனம் செய்யச் செல்லும் போது உங்களுடைய கைகளில் ஒரு கைப்பிடி அளவு பச்சரிசியை எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும். சந்திர ஒளி கிடைக்கும் இடத்தில் சம்மணம் போட்டு அமர்ந்து கொள்ளுங்கள். உங்களுடைய இரண்டு உள்ளங் கைகளில் பச்சரிசியை வைத்துக்கொண்டு கையேந்தி சந்திர பகவானை இரு கண்களாலும், மனதார தரிசனம் செய்து, உங்களுடைய மனக்குழப்பம் தீர வேண்டும், உங்களுக்கு இருக்கக்கூடிய அனைத்து கஷ்டங்களும் தீர வேண்டும், என்று வேண்டிக் கொள்ளுங்கள்.

pray

எக்காரணத்தைக் கொண்டும் உங்களுக்கு நடுக்கமும் தடுமாற்றமும் வாழ்க்கையில் வந்துவிடக்கூடாது. மன தைரியத்தோடு இருக்க வேண்டும். என்ற பிரார்த்தனையை சந்திரபகவானிடம் வையுங்கள். அதன் பின்பு கையிலிருக்கும் பச்சரிசியை ஒரு சிறிய தட்டில் கொட்டி உங்கள் முன்பு வைத்துக்கொள்ளுங்கள்.

- Advertisement -

தரையில் அமர்ந்து, கண்களை மூடி தியானம் செய்த நிலையில் ‘ஓம் ஹ்ரீம் வம் சந்திர தேவாய நமஹ!’ இந்த மந்திரத்தை குறைந்த பட்சம் 108 முறை, அதிகபட்சம் உங்களால் எத்தனை முறை முடியுமோ அத்தனை முறை உச்சரித்து சந்திர பகவானை மனமுருகி தரிசனம் செய்தாலே போதும். உங்களுடைய மனக்குழப்பம் தீரும். மனம் தெளிவு பெறும். நினைத்த காரியத்தை நினைத்த மார்க்கத்தில் சாதித்துக் கொள்ள கூடிய திறமை உங்களிடம் தானாகவே வந்துவிடும். முகம் அழகு பெறும்.

அழகு என்பது நீங்கள் வெள்ளையாவதை குறிப்பதில்லை. குழப்ப நிலையில் இருந்த உங்களது முகம் திடீரென்று பிரகாசமாக மாறும். உங்களின் மனது குழப்ப நிலையில் இல்லை என்பதை உங்களது முகம் சொல்லிவிடும். சரி வெளியில் செல்ல முடியாதவர்கள் என்ன செய்வது. வீட்டிற்குள்ளேயே பூஜை அறையில் சந்திர பகவானை நினைத்து இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம்.

உங்கள் கையில் வைத்திருந்த பச்சரிசியை காக்கை குருவிகளுக்கு சாப்பிட போடலாம். மிக்ஸியில் அரைத்து கோல மாவில் கலந்து கோலமாக போட்டாலும் தவறு கிடையாது. மாதம் தோறும் வரக்கூடிய பவுர்ணமி தினத்தில் மேல் சொன்ன விஷயங்களை பின்பற்றி வந்தால், வாழ்க்கையில் பல பிரச்சினைகளை நீங்கள் சுலபமாக தீர்த்து விடுவீர்கள். வாழ்க்கை இன்பமாக மாறும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.