மனதில் உறுதி வேண்டும் – பாரதியார் கவிதை

bharathiyar kavithai manathil urudhi

மனதிலுறுதி வேண்டும்,
வாக்கினி லேயினிமை வேண்டும்;
நினைவு நல்லது வேண்டும்,
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;
கனவு மெய்ப்பட வேண்டும்,
கைவசமாவது விரைவில் வேண்டும்;
தனமும் இன்பமும் வேண்டும்,
தரணியிலே பெருமை வேண்டும்.
கண் திறந்திட வேண்டும்,
காரியத்தி லுறுதி வேண்டும்;
பெண் விடுதலை வேண்டும்,
பெரிய கடவுள் காக்க வேண்டும்,
மண் பயனுற வேண்டும்,
வானகமிங்கு தென்பட வேண்டும்;
உண்மை நின்றிட வேண்டும்.
ஓம் ஓம் ஓம் ஓம்

மனதில் உறுதி வேண்டும் என்று தொடங்கும் இந்த கவிதைக்கு பல இசையமைப்பாளர்கள் மெட்டிசைத்து இதை பாடல் ஆக்கி உள்ளனர். அதில் குறிப்பிடும்படி சொல்ல வேண்டுமானால் சிந்து பைரவி என்ற திரைப்படத்தில் இசைஞானி இளையராஜாவின் இசையில் இந்த கவிதை பாடலாக உருப்பெற்றது. அந்த பாடல் மேலே இணைக்கப்பட்டுளளது . அதே போல இந்த கவிதையின் தலைப்பில் திரைப்படமும் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே:
பக்தி் – பாரதியார் கவிதை

English Overview :
Here we have Bharathiyar Kavithaigal with title Manathil Urudhi Vendum. This is a very famous poem it is converted as a song in the film Sindhu Bhairavi. Here we have Manathil Urudhi Vendum lyrics in Tamil.