ஜாதகத்தில் மாந்தி கிரகத்தால் ஏற்படும் தோஷங்கள் நீக்குவதற்கான பரிகாரங்கள்

mandhi

நமது நாட்டில் பொதுவாக குழந்தை பிறந்து ஒரு வருடம் அல்லது ஐந்து வருடத்திற்கு பிறகு ஜாதகம் எழுதுவது பல ஆண்டு காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த ஜாதகத்தில் ஒவ்வொரு கிரகமும் பலவிதமான பலன்களை அந்த ஜாதகருக்கு வாழ்வில் உண்டாக்குகிறது. இதில் சக்தி வாய்ந்த கிரகமாக கருதப்படும் சனி கிரகத்தால் பாதகமான பலன்கள் ஏதும் இருக்கக்கூடாது என்பதே பலரின் விருப்பமாக இருக்கிறது. அந்த சனிக்கிரகத்தின் தொடர்புடைய ஒரு கிரகம் தான் மாந்தி கிரகம். இந்த மாந்தி கிரகம் பற்றி பெரும்பாலானவர்களுக்கு அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த மாந்தி கிரகத்தால் நம் ஜாதகத்தில் ஏற்படக்கூடிய பலன்கள் என்ன என்பது பற்றியும், அந்த மாந்தி கிரகத்தின் தோஷம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரங்கள் பற்றியும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.

astro wheel 1

ஜோதிட சாஸ்திரத்தின் படி மாந்தி கிரகம் சனி கிரகத்தின் உபகிரகமாகவும், சனி பகவானின் மைந்தன் என்றும் சொல்லப்படுகிறது. மாந்தி கொடிய பாவ கிரகமாகும். மாந்தி ஒரு நபரின் ஜாதகத்தில் எந்த வீட்டில் இருக்கிறதோ, அந்த ஸ்தானம் பாதக ஸ்தானமாகிறது. அந்த ஸ்தான அதிபதியும் பாதகாதிபதியாகிறார். மாந்தி இருக்கும் நட்சத்திரமும் பாதகமாகிறது.

ஜாதகத்தில் மாந்தி தான் இருக்கும் வீட்டில் இருந்து 2, 7, 12 ம் இடங்களை பார்க்கும். மாந்தியின் பார்வை பதியும் வீடுகளும் தோஷத்தை பெறுகிறது. உதாரணமாக மாந்தி லக்னத்திற்கு நான்காம் வீட்டில் இருந்தால் ஜாதகருக்கு மனை தோஷம் ஏற்படுகிறது. இதன் காரணமாக ஜாதகரின் வீட்டில் தெய்வ சக்தி குடியிருக்காது. வீடு களையிழந்து போய்விடும். அவ்வீட்டிலிருப்பவர்களுக்கு சுக வாழ்க்கை அமையாது. தொடர்ந்து வீண் வம்பு வழக்குகள் , மருத்துவ செலவுகள் ஏற்பட்டு கொண்டிருக்கும். குடும்பம், தொழில்,அந்தஸ்து முதலியவற்றில் பாதிப்பு இருக்கும்.

sani bagavaan temple

ஜாதகத்தில் ஐந்தாம் வீட்டில் மாந்தி இருந்தால் பிரேத சாபம் ஏற்படும். ஆறில் மாந்தி இருந்தால் தீராத கடன் உண்டாகும். எழலில் மாந்தி கணவன் – மனைவி உறவு பாதிப்படையும். ஒன்பதில் மாந்தி இருந்தால் அவருக்கு கடந்த ஜென்ம பாவங்களால் இந்த ஜென்மத்தில் உண்டாகும் தோஷங்களை குறிக்கும். இது போன்று இது போன்று எண்ணற்ற கெடுபலன்கள் மாந்தியால் ஏற்படுகின்றது.

- Advertisement -

homam

இத்தகைய கொடுமையான மந்தி தோஷம் நீங்கி வாழ்வில் நன்மைகள் ஏற்பட திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் திருக்கோயிலுக்கு சனிக்கிழமை தினத்தில் சென்று, அங்கிருக்கும் பத்ரகாளி அம்மனை வணங்க வேண்டும். அம்மனை வணங்கிய பிறகு, அங்கிருக்கும் மாந்தீஸ்வரரை வழிபடுவது எப்படிப்பட்ட மாந்தி தோஷங்களையும் நீக்கும் சிறந்த பரிகாரமாக இருக்கிறது. மேலும் மாந்தியல் ஏற்படும் கேடுப்பலன்களை நீக்க நீங்கள் வசிக்கும் இடத்திலோ அல்லது அருகிலுள்ள ஆலயத்திலோ மஹா மிருத்யுஞ்சய யாகம், சுதர்சன யாகம் செய்து, யாக கும்ப நீரில் ஸ்நானம் எனப்படும் குளியல் செய்வதால் நீங்கும். தரமான கனக புஷ்பராக கல்லை, வெள்ளி மோதிரத்தில் பதித்து, உங்கள் கைகளில் எப்போதும் அணிந்து கொள்ள வேண்டும்.

இதையும் படிக்கலாமே:
வெளிநாடு செல்ல மனக்குறைகள் தீர இவற்றை செய்யுங்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Mandhi dosham pariharam in Tamil. It is also called as Mandhi graha in Tamil or Sani bhagavan in Tamil or Jothida pariharam in Tamil or Mandhi dosham neenga in Tamil.