ஒருவருடைய வாழ்க்கையில் நடக்கக்கூடிய முக்கியமான நிகழ்வுகளில் ஒன்று தான் திருமணம், குழந்தை பாக்கியம், சொத்து சுகம் வாங்குவது போன்றவை. இவை அனைத்திற்கும் காரண கர்த்தாவாக திகழக் கூடியவர் செவ்வாய் பகவான். செவ்வாய் பகவானின் அருள் இருப்பவர்களுக்கு தான் திருமணம் விரைவில் நடைபெறும். திருமணத்தில் எந்த பிரச்சனைகளும் ஏற்படாது. கணவன் மனைவி ஒற்றுமையுடன் வாழ்வார்கள், குழந்தை பாக்கியமும் கிடைக்கும். இதோடு மட்டுமல்லாமல் சொத்துக்கள் வாங்குவதற்கும் சொத்துக்களில் இருக்கக்கூடிய வில்லங்கம் நீங்குவதற்கும் செவ்வாய் பகவானின் அருள் என்பது வேண்டும். அப்படிப்பட்ட செவ்வாய் பகவானின் அருளை பெறுவதற்கு செய்ய வேண்டிய வழிபாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
மங்களங்களைத் தரும் மங்களகாரகன் வழிபாடு
புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய செவ்வாய்க்கிழமை என்பது மிகவும் விசேஷகரமான கிழமையாக திகழ்கிறது. அந்த கிழமையில் செவ்வாய் பகவானை நாம் வழிபாடு செய்வதன் மூலம் நமக்கு பல நன்மைகள் உண்டாகும். இந்த செவ்வாய் பகவானின் வழிபாட்டை ஆலயத்தில் எப்படி செய்வது என்றும் வீட்டில் எப்படி செய்வதும் என்றும் தான் இந்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
ஒருவருடைய வாழ்க்கையில் சுபகாரியம் நடக்க வேண்டும் என்றால் முதலில் அவருடைய ஜாதகத்தை பார்த்து அதில் சனி, சுக்கிரன், குரு, செவ்வாய் இவர்கள் எந்த இடத்தில் இருக்கிறார்கள் என்பதை தான் முதலில் பார்ப்பார்கள். அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கிரகங்கள் ஒன்றாக திகழ்வதுதான் செவ்வாய் பகவான். செவ்வாய் பகவானை வழிபாடு செய்யும்பொழுது திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும் என்றும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்றும் சொத்துக்கள் வாங்கும் நிலை உண்டாகும் என்றும் கூறப்படுகிறது. மேற்சொன்ன இந்த விஷயங்களில் ஏதாவது தடைகள் இருக்கும் பட்சத்திலோ அல்லது செவ்வாய் பகவான் ஜாதகத்தில் சரியில்லாமல் இருந்தாலும் இந்த வழிபாட்டை செய்யலாம்.
இந்த வழிபாட்டை புரட்டாசி செவ்வாய்க்கிழமை ஆரம்பிப்பது என்பது மிகவும் விசேஷம். செவ்வாய்க்கிழமை அன்று அருகில் இருக்கக்கூடிய முருகன் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். அங்கு முருகப்பெருமானுக்கு முன்பாக ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்து, செவ்வரளி மலர்களை அவருக்கு வாங்கி கொடுத்து அவரை 21 முறை வலம் வர வேண்டும். அடுத்ததாக அங்கு இருக்க கூடிய நவகிரகங்களில் வீற்றிருக்கக்கூடிய செவ்வாய் பகவானுக்கு ஒரு சிறிய சிவப்பு துணியை எடுத்து அதில் சிறிதளவு துவரம் பருப்பை சேர்த்து சிவப்பு நூலால் மூட்டையாக கட்டிக் கொள்ள வேண்டும். அந்த மூட்டையை அகல் விளக்கில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். எப்படி சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றுவோமோ அதே போல் செவ்வாய் பகவானுக்கு துவரை தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும்.
அன்றைய தினத்தில் சிவப்பு நிற ஆடைகளை அணிந்து கொள்வது என்பது கூடுதல் பலனை தரும். இப்படி காலையில் செய்து முடித்துவிட்டு மாலையில் வீட்டில் இருக்கக்கூடிய முருகப்பெருமானின் படத்திற்கு செவ்வரளி மாலையை சூட்டி அவருக்கு முன்பாக துவரம் பருப்பு சுண்டல், துவரம் பருப்பு பாயாசம் போன்றவற்றை நெய்வேத்தியமாக வைத்துவிட்டு செவ்வாய் பகவானின் 108 போற்றிகளை கூற வேண்டும். 108 போற்றிகள் தெரியாது என்பவர்கள் “ஓம் அங்காரகாய நமஹ” என்னும் மந்திரத்தை 108 முறை கூறலாம். இப்படி தொடர்ச்சியாக 48 செவ்வாய்க்கிழமை அல்லது 21 செவ்வாய்க்கிழமை செய்யும்பொழுது செவ்வாய் பகவானால் ஏற்படக்கூடிய நன்மைகள் அனைத்தையும் பெற முடியும்.
திருமணத்திற்காக இந்த வழிபாட்டை செய்பவர்கள் முருகப்பெருமானின் பாதத்தில் தாலி சரடை வைத்து வழிபாடு செய்ய வேண்டும். குழந்தை பாக்கியத்திற்காக வழிபாடு செய்பவர்கள் முருகப்பெருமானின் பாதத்தில் தொட்டிலை வாங்கி வைத்து வழிபாடு செய்ய வேண்டும். சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்று வழிபாடு செய்பவர்கள் சிறிய அளவிலான வீட்டை முருகப்பெருமானின் பாதத்தில் வைத்து வழிபாடு செய்ய வேண்டும். வழிபாட்டை நிறைவு செய்த பிறகு இந்த பொருட்களை அருகில் இருக்கக்கூடிய முருகப்பெருமானின் ஆலயத்தில் இருக்கக்கூடிய தல விருச்சத்தில் கொண்டு சென்று வைத்து விட வேண்டும்.
இதையும் படிக்கலாமே: வெற்றி தரும் வெற்றிலை மாலை
பல மங்களகரமான நிகழ்வுகள் நம் வாழ்வில் நடப்பதற்கு காரணமாக இருக்கக்கூடிய செவ்வாய் பகவானை இந்த முறையில் வழிபாடு செய்து அனைத்து விதமான நன்மைகளையும் பெறுவோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.