மாம்பூ சட்னி செய்முறை

mampoo chutney
- Advertisement -

மாம்பழத்தை விரும்பி சாப்பிடும் அளவிற்கு யாரும் மாம்பூவை சாப்பிட மாட்டார்கள். ஆனால் மாம்பழத்தில் இருப்பதைப் போலவே பல மடங்கு அற்புத சத்துக்கள் நிறைந்ததாக தான் மாம்பூ திகழ்கிறது. இந்த மாம்பூவில் அதிக அளவு துவர்ப்பு சக்தி இருக்கிறது. இது உடலுக்கு மிகவும் தேவையான ஒரு சுவையாக திகழ்கிறது. இந்த மாம்பூவை நாம் ஏதாவது ஒரு வகையில் நம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் மாம்பூவை வைத்து எப்படி சட்னி செய்வது என்றுதான் பார்க்கப் போகிறோம்.

மாம்பூவில் தாது உப்புக்களும், வைட்டமின்களும் அதிக அளவில் இருக்கின்றன. மாம்பூவை நாம் சாப்பிடுவதன் மூலம் மூல நோய்கள் தீரும். தொண்டை வலியால் பாதிக்கப்படுபவர்கள் மாம்பூ தண்ணீரை கொப்பளிப்பதன் மூலம் தொண்டை வலி சரியாகும். மாம்பூவை சாப்பிடுவதன் மூலம் வயிற்றுப்போக்கு குணமாகிறது. வாய்ப்புண் மற்றும் வயிற்றுப் புண் போன்ற பிரச்சனைகளும் நீங்குகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு அவர்களின் சர்க்கரை அளவை குறைப்பதற்கு மாம்பூ பெரிதும் உதவுகிறது.

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • சின்ன வெங்காயம் – 10
  • காய்ந்த மிளகாய் – 3
  • தேங்காய் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்
  • மாம்பூ – ஒரு கப்
  • வெல்லம் – ஒரு ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • புளி – நெல்லிக்காய் அளவு
  • எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்
  • கடலைப்பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன்
  • இஞ்சி – சிறிய அளவு
  • பூண்டு – 4 பல்

செய்முறை

முதலில் மாம்பூவை மட்டும் தனியாக பிரித்து தண்ணீர் ஊற்றி அலசி சுத்தம் செய்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு கடாயை அடுப்பில் வைத்து கடாய் சூடானதும் அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் கடலைப்பருப்பை சேர்க்க வேண்டும். பிறகு காய்ந்த மிளகாய் சேர்த்து வறுக்க வேண்டும்.

கடலைப்பருப்பு லேசாக நிறம் மாறியதும் அதில் சின்ன வெங்காயத்தை சேர்க்க வேண்டும். அதனுடன் பூண்டு, இஞ்சி இரண்டையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு மாம்பூவை அதில் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பிறகு தேங்காய் துருவலையும் அதனுடன் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். கடைசியாக வெல்லம் மற்றும் புளியை அதில் சேர்த்து லேசாக இரண்டு கிண்டு கிண்டி அடுப்பிலிருந்து இறக்கி ஆற வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இவை அனைத்தும் நன்றாக ஆரிய பிறகு மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான அளவு உப்பையும் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த இந்த சட்னியை ஒரு கிண்ணத்தில் மாற்றி விட்டு தாலிக்கும் கரண்டியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு, கருவேப்பிலை இவற்றை சேர்த்து தாளித்து நாம் தயாரித்து வைத்திருக்கும் சட்னியில் ஊற்றி விட வேண்டும். சுவையான மாம்பூ சட்னி தயாராகிவிட்டது

இதையும் படிக்கலாமே: முருங்கைப்பூ புலாவ் செய்முறை

பழங்களில் எந்த அளவிற்கு சத்துக்கள் இருக்கிறதோ அதேபோலதான் அதனுடைய பூக்களிலும் சத்துக்கள் இருக்கும் என்பதை உணர்ந்து நம்மால் இயன்ற அளவு இயற்கையிலேயே கிடைக்கக்கூடிய இந்த பூக்களையும் நம் உணவில் சேர்த்து ஆரோக்கியத்தை வலுப்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -