இதை மட்டும் பார்த்தால், இனி நீங்கள் ஆயுசுக்கும் மாம்பழமே சாப்பிட மாட்டீங்க!

mango-juice4
- Advertisement -

மாம்பழமாக சாப்பிட மாட்டீங்க ஆனால், மாம்பழ ஜூஸ் செய்து குடிப்பீர்கள். கடைகளில் பாட்டிலில் விற்கும் மேங்கோ ஜூஸ் போலவே, வீட்டிலேயே ஜூஸ் தயார் செய்து குடிக்கலாம். இப்போது மாம்பழ சீசன். மலிவான விலையில் மாம்பழம் கிடைக்கும். வெயில் காலத்திற்கு ஜில்லுன்னு ஒரு ஜூஸ் எப்படி செய்வது என்பதை பற்றி தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த ரெசிபி தெரிந்த பின்பு உங்களுக்கு மாம்பழம் சாப்பிடும் ஆசையே வராது. மாம்பழ ஜூஸ் குடிக்கும் ஆசையில் தான் அதிகமாக இருக்கும். உங்களுக்கும் வீட்டில் மேங்கோ ஜூஸ் போட்டு குடிக்க ஆசையா இருந்தா, ரெசிபியை ஃபுல்லா படிச்சு தெரிஞ்சுக்கோங்க.

mango-juice3

நன்றாக பழுத்த 2 மாம்பழங்களை எடுத்து தோல் சீவி வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். இரண்டு மாம்பழத்திற்கு 1/2 துண்டு மாங்காய் கட்டாயம் தேவைப்படும். ஒரு முழு மாங்காயில் ஒரு பாதியை மட்டும் வெட்டி தோல் சீவி அதையும் பொடியாக வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இதில் அளவுகள் என்று பார்த்தால் மாம்பழம் – 400 கிராம், மாங்காய் – 100 கிராம், சர்க்கரை – 100 கிராம், தண்ணீர் தேவையான அளவு இந்தப் பொருட்கள் மட்டுமே போதும். உங்களுடைய மாம்பழம் மிகவும் இனிப்பு சுவையோடு இருந்தால் சர்க்கரையின் அளவை கொஞ்சம் குறைத்துக் கொள்ளலாம்.

mango-juice

அடுப்பில் ஒரு அடி கனமான பாத்திரத்தை வைத்து, வெட்டி வைத்திருக்கும் மாம்பழ துண்டுகளையும், வெட்டி வைத்திருக்கும் மாங்காய் துண்டுகளை சேர்த்து, இதோடு 100 கிராம் அளவு சர்க்கரையையும் சேர்த்து, 2 கப் அளவு தண்ணீரை ஊற்றி நன்றாக வேக வைக்க வேண்டும். உங்கள் வீட்டில் தண்ணீர் குடிக்கும் சொம்பில் தாராளமாக இரண்டு சொம்பு தண்ணீர் ஊற்றலாம்.

- Advertisement -

அடுப்பை மிதமாக வைத்து சர்க்கரை தண்ணீரில் மாங்காயும் மாம்பழமும் 15 நிமிடங்கள் வேக வேண்டும். ஒரு மூடி போட்டு வேக வைத்துக் கொள்ள வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து விடுங்கள். இப்போது உங்களுக்கு சர்க்கரை கொழகொழவென மாறி, மாம்பழமும் மாங்காய் நன்றாக வெந்திருக்கும். இது நன்றாக ஆரட்டும்.

mango-juice2

ஆறிய பின்பு இந்த மாம்பழத்தில் இருக்கும் சர்க்கரை தண்ணீரை மட்டும் ஒரு வடிகட்டியில் வடித்து, சக்கரை தண்ணீரை ஒரு பெரிய பௌலில் வைத்துக் கொள்ளுங்கள். மீதமிருக்கும் மாம்பழத்தினை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ள வேண்டும். இந்த அரைத்த விழுதினை மீண்டும் வடிகட்டியில் போட்டு வடிகட்டி, வரும் சாரினை, தனியாக சர்க்கரை தண்ணீர் வடித்து வைத்திருக்கின்றோம் அல்லவா அதோடு கலந்து விட வேண்டும்.

mango-juice5

வடிகட்டியில் ஒரு கரண்டியை வைத்து நன்றாக அழுத்தம் கொடுத்தால்தான், மாம்பழ விழுதில் இருந்து சக்கையை மட்டும் தனியாக எடுக்க முடியும். தேவைப்பட்டால் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கலந்து நன்றாக சாரை மட்டும் தனியாக எடுத்து விடுங்கள்.

mango-juice6

இப்போது உங்களுக்கு திக்காக மாம்பழ ஜூஸ் கிடைத்திருக்கும். இதில் 2 கப் அல்லது 3 கப், உங்களுக்கு எவ்வளவு தண்ணீர் தேவையோ அதை ஊற்றி நன்றாக கலந்து ஃப்ரிட்ஜில் வைத்து, கிளாஸில் ஊற்றி பரிமாறி பாருங்கள். கடையில் கிடைக்கும் அதை மேங்கோ ஜூஸ் சுவையில் சூப்பரான சுலபமான மேங்கோ ஜூஸ் தயார். உங்களுக்கு இந்த குறிப்பு படுத்திருந்தால் கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -