இந்த 1 மந்திரத்தை 108 முறை சொன்னால் எந்த கிரக தோஷமும் உங்களை ஒன்றும் செய்யாது. அதனால் ஏற்பட்டு கொண்டிருக்கும் பாதிப்புகளும் உடனே நீங்கும்.

navagraham-vinayagar

நவக்கிரகங்களால் நமக்கு ஏற்படும் துன்பங்கள் குறைவதற்கு இந்த ஒரு மந்திரம் உச்சரித்தால் போதுமானது என்றே கூறலாம். அந்த அளவிற்கு சக்தி வாய்ந்த இந்த மந்திரத்தை வட இந்திய மக்களால் பெருமளவு உபயோகிக்கப்பட்டு வருகிறது. அங்கிருக்கும் மக்கள் அதிகாலையில் இந்த மந்திரத்தை 108 முறை உச்சரித்து பலன் பெற்று வருகின்றனர். என்ன மந்திரம் அது? எப்படி உச்சரிக்க வேண்டும்? என்பதைப் பற்றிய சில தகவல்களை இப்பதிவில் காணலாம்.

navagragam

நம்மில் பலருக்கும் நவக்கிரகங்களால் தோஷம் உண்டாகி இருக்கும். அதனால் சில பிரச்சினைகளை நாம் அன்றாட வாழ்வில் சந்தித்து வருகின்றோம். சிலர் தாம் எந்த கிரகத்தால் தோஷம் ஏற்பட்டுள்ளது என்பதை அறிந்து வைத்திருப்பார்கள். சிலருக்கு அதை பற்றிய தகவல்கள் தெரியாமல் இருக்கலாம்.

இப்படியாக எந்த கிரக தோஷம் உங்களுக்கு இருந்தாலும் சரி இந்த மந்திரத்தை உச்சரித்து வந்தால் முழுமையாக கிரகதோஷம் நீங்கும். அதனால் வரும் பாதிப்புகள் விரைவில் வெகுவாகக் குறைந்துவிடும்.

இந்த மந்திரத்தை காலையில் எழுந்து குளித்து முடித்து விட்டு சூரிய உதயமாகும் வேளையில் 6 மணிக்கு உள்ளாக சூரிய பகவானை பார்த்து இருகரம் கூப்பி சூரிய நமஸ்காரம் செய்வது போல் 108 முறை உச்சரிக்க வேண்டும். அதன்பின் நீங்கள் உங்கள் வேலைகளை பார்க்க ஆரம்பிக்கலாம். இந்த மந்திரத்தை ஞாயிற்றுக்கிழமை அல்லது அமாவாசை தினத்தில் இருந்து ஆரம்பிப்பது நல்ல பலனைத் தரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

- Advertisement -

மந்திரம்:
ஓம் நமோ பகவதே பாஸ்கராய
மம சர்வ க்ரஹானாம்
பீடா நாஷனம் குரு குரு ஸ்வாஹா!!

thiyanam-mantra

இந்த மந்திரத்தை உங்களுக்காக நீங்கள் உச்சரிக்கும் பொழுது மேலே உள்ள படி உச்சரிக்க வேண்டும். மற்றவர்களின் நலன் கருதி நீங்கள் உச்சரிக்க வேண்டும் என்றால் ‘மம’ என்ற இடத்தில் அவர்களின் பெயரை போட்டுக் கொள்ள வேண்டும். அல்லது உங்களின் குடும்பத்திற்காக நீங்கள் இந்த மந்திரத்தை சொல்வதானால் குடும்பத்திற்கு என்று இருக்கும் பொது பெயரை, குடும்ப பெயரை ‘மம’ என்பதற்கு பதிலாக போட்டுக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
நினைத்ததை, நினைத்த உடனேயே சாதிக்க வேண்டுமா? இந்த மந்திரத்தை உச்சரித்தால் போதுமே!

இது போன்ற மந்திரங்கள் பலவற்றை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Navagraha dosha remedies in Tamil. Graha dosham in Tamil. Graha dosha nivarana mantra. Navagraha dosha mantra. Navagraha mantra in Tamil.