பெண்களுக்கு வெற்றியை தேடித்தரும் மந்திரம்.

praying women

பெண்களின் மனதில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக இருக்கும். ஆனால் சூழ்நிலை காரணமாகவும், இவர்கள் பெண்கள் என்ற காரணத்திற்காகவும் சில வாய்ப்புகள் பெண்களுக்கு கிடைப்பதில்லை. அப்படியே சில அரிதான வாய்ப்புகள் கிடைத்தாலும், வீட்டின் பெரியோர்களின் கட்டாயத்தினால் அந்த வாய்ப்புகளை விட்டுவிட வேண்டிய சூழ்நிலை பெண்களுக்கு ஏற்பட்டு விடும். பெரியோர்களின் கூற்றிலும் சில உண்மைகள் இருக்கத்தான் செய்கிறது. இந்த காலகட்டத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு மிகக் குறைவு என்ற காரணத்தால் பெரியவர்கள் இந்த கட்டுப்பாட்டினை பெண்களுக்கு விதிக்கின்றார்கள். இப்படி எல்லா வகையான தடைகளில் இருந்தும் வெளியில் வந்து பெண்கள் மேற்கொள்ளும் முயற்சியில் வெற்றி அடைய வேண்டும் என்றால் அம்பாளின் இந்த மந்திரத்தை தினந்தோறும் 108 முறை உச்சரித்தாலே போதும். பெண்களுக்கான வெற்றி மந்திரம் இதோ.

 women

ஓம் விஜய சக்தியே நமஹ
ஓம் ஜெய சக்தியே நமஹ

கல்வியில் வெற்றியை அடைய வேண்டும் என்றாலும், நீங்கள் செய்யும் தொழிலில் வெற்றியை அடைய வேண்டும் என்றாலும், குடும்பத்தலைவிகளாக இருந்தால் உங்கள் குடும்பத்தை நன்றாக வழிநடத்த வேண்டும் என்றாலும் இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம். பெண்களின் எல்லா வகையான முன்னேற்றத்திற்கும் இந்த மந்திரமானது மிகவும் உபயோகமாக இருக்கும். வெற்றி பெறுவதில் உண்டாக்கக்கூடிய தடைகளை தகர்த்தெறியும் சக்தி இந்த மந்திரத்திற்கு உண்டு. இதை தொடர்ந்து நம்பிக்கையுடன் உச்சரித்து வருபவர்கள் அனுபவப்பூர்வமாக உணரலாம்.

இதையும் படிக்கலாமே
மனபயம் நீங்கி தைரியமாக செயல்பட வைக்கும் வாராஹி மந்திரம்

இது போன்ற மந்திரங்கள் பலவற்றை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Pengal vetri pera mantra in Tamil. Pengalukkana mantra in Tamil Pengalukkana manthiram in Tamil. Mantra for womens in Tamil. Mathiram for Pengal in Tamil.