வீட்டில் செல்வம் சேருவதற்கான எளிய பரிகாரம்

selvam-serkum-mandhiram

ஒரு கிண்ணத்தில் 101 ரூபாயில் இருந்து 501 ரூபாய் வரை நாணயம் போடுங்கள். கிணத்தில் போடப்படும் நாணயங்கள் அனைத்தும் ஒரே மாதிரியாக இருக்கவேண்டும். அதாவது ஒரு ருபாய் நாணயம் என்றால் அனைத்தும் ஒரு ரூபாயாகவே இருக்கவேண்டும். அந்த ஒரு ரூபாய் நாணயமும் பெரிது சிறிதாக இல்லாமல் ஒரே மாதிரி இருக்க வேண்டும்.

அதன் பிறகு கிண்ணத்தின் மேல் ஒரு தட்டை வைத்து தட்டின் மேல் ஒரு வெற்றிலை வைத்து அதற்கு மேல் விளக்கேற்றி விட்டு கீழே உள்ள மந்திரத்தை தினமும் காலை 108 முறை கூற வேண்டும்.

ஸ்ரீதேவி: அம்ருதோத்
பூதாகமலா சந்திரசோபனா
விஷ்ணுபத்னீ வைஷ்ணவீ ச
வராரோஹாச சார்ங்கிணீ
ஹரிப்ரியா தேவதேவி
மஹாலக்ஷ்மி ச சுந்தரி

இந்த மந்திரத்தை கூறும்போது மனதை அலைபாய விடாமல் கட்டுப்படுத்தி இறைவனை மட்டுமே நினைத்துக்கொண்டு கூற வேண்டும். தவறினால் பலன் கிடைக்காது. இப்படி மூன்று மண்டலங்கள் தொடர்ந்து இதை செய்தால் நிச்சயம் வீட்டில் செல்வம் சேரும். இந்த காலகட்டத்தில் எக்காரணம் கொண்டும் கிண்ணத்தில் உள்ள நாணயங்களை தொடக்கூடாது.

அதே போல், நீங்கள் நினைத்த காரியம் கைகூட வேண்டும் என்றால், ஒரு காகிதத்தில் உங்களுடைய கோரிக்கையை எழுதி அதை மடித்து கிண்ணத்தை மூடியுள்ள தட்டின் மேல் வைத்து மந்திரத்தை கூற வேண்டும். எழுதிய காரியம் கைகூடும் வரையிலும் மந்திரத்தை கூற வேண்டும். அதே சமயம் எக்காரணம் கொண்டும் காகிதத்தை பிரிக்கக்கூடாது.