- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்மரவள்ளிக்கிழங்கை வைத்து சுவையான ஒரு மலேசியன் ஸ்வீட்டை ஒரு முறை சுவைத்துப் பாருங்கள். பிறகு இதனை...

மரவள்ளிக்கிழங்கை வைத்து சுவையான ஒரு மலேசியன் ஸ்வீட்டை ஒரு முறை சுவைத்துப் பாருங்கள். பிறகு இதனை அடிக்கடி சமைத்து சாப்பிடுவீர்கள்

- Advertisement -

மரவள்ளி கிழங்கு, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, பனங்கிழங்கு போன்ற கிழங்கு வகைகளில் உடலுக்கு தேவையான எண்ணற்ற சத்துகள் அதிகமாக உள்ளன. ஒரு சில வருடங்களுக்கு முன்னர் இவை எளிதாக கிடைக்கப் பெற்றன. பெரும்பாலான மக்கள் இதனை விரும்பி சாப்பிட்டு வந்தார்கள். ஆனால் இப்பொழுது உள்ள ஃபாஸ்ட்புட் காலகட்டத்தில் இவ்வாறான சத்துமிக்க உணவுகளை பலரும் கவனத்தில் கொள்வதில்லை. எனவே ஊட்டச்சத்து மிக்க மரவள்ளிக்கிழங்கை வீட்டில் உள்ளவர்களுக்கு பிடித்த வகையில் ஸ்வீட் ரெசிபியாக செய்து கொடுத்தால் மிகவும் விருப்பமாக சாப்பிடுவார்கள். அதனை எவ்வாறு சமைப்பது என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

kilangu-1

தேவையான பொருட்கள்:
மரவள்ளி கிழங்கு – அரை கிலோ, சர்க்கரை – அரை கப், தேங்காய் துருவல் – அரை கப், ஏலக்காய் பொடி – அரை ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், அரிசி மாவு – ஒரு கப், மைதா மாவு – அரை கப், மஞ்சள்தூள் – அரை ஸ்பூன், சர்க்கரை – ஒரு ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
முதலில் மரவள்ளிக் கிழங்கை தோல் நீக்கி விட்டு, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொண்டு தண்ணீரில் நன்றாக அலசி வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் சுத்தம் செய்த மரவள்ளிக் கிழங்கினை ஒரு பாத்திரத்தில் வைத்து அதனுடன் தண்ணீர் மற்றும் கால் ஸ்பூன் உப்பு சேர்த்து அடுப்பின் மீது வைத்து 20 நிமிடங்கள் நன்றாக வேகவைக்க வேண்டும்.

kilangu-2

பின்னர் வேகவைத்த மரவள்ளிக் கிழங்கை ஒரு பெரிய பாத்திரத்தில் சேர்த்து மத்து அல்லது சிறிய உலக்கை வைத்து நன்றாக நசுக்கி கொள்ள வேண்டும். அதன் பின் இதனுடன் அரை ஸ்பூன் உப்பு, தேங்காய் துருவல் மற்றும் அரை கப் சர்க்கரை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும். பிறகு இந்த மரவள்ளி கிழங்கு கலவையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து சிறிய உருண்டைகளாக பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பின்னர் ஒரு சிறிய கிண்ணத்தில் ஒரு கப் அரிசி மாவு, அரை கப் மைதா மாவு, ஒரு ஸ்பூன் சர்க்கரை, கால் டீஸ்பூன் உப்பு, மற்றும் அரை ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தை விட கொஞ்சம் கெட்டியான பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.

sakakrai

பின்னர் ஒரு கடாயை அடுப்பின் மீது வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, என்னை நன்றாக காய்ந்ததும் அதில் உருண்டைகளாக பிடித்து வைத்துள்ளவற்றை கரைத்து வைத்துள்ள மாவில் பிரட்டி எடுத்து எண்ணெயில் சேர்த்து பொரித்து எடுக்க வேண்டும். இவ்வாறு பிடித்து வைத்துள்ள உருண்டைகள் அனைத்தையும் பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான் சுவையான மரவள்ளிக்கிழங்கு ஸ்வீட் தயாராகிவிட்டது.

sweet

இந்த ஸ்வீட் மலேசியாவில் மிகவும் பிரபலமானது. இதனை நீங்களும் ஒருமுறை உங்கள் வீட்டில் சமைத்து கொடுத்து பாருங்கள். இந்தச் மரவள்ளி கிழங்கு ஸ்வீட்டை சுவைத்தவர்கள் மீண்டும் இதனை எப்பொழுது செய்வீர்கள் என்று உங்களை தொல்லை செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.

சற்று முன்