இன்றைய தினம் அதி அற்புதம் வாய்ந்த நேர்மறை ஆற்றல் நிறைந்த அதிர்ஷ்டமான நாள். வளர்பிறை வெள்ளிக்கிழமை மகாலட்சுமி ஜெயந்தி. இன்று, மகாலட்சுமிக்கு பிறந்தநாள். அது மட்டும் இல்லாமல் இன்றைய தினம் காரடையான் நோன்பு. இந்த நாளோடு சேர்த்து சோடசக்கலை நேரமும் சேர்ந்து வந்திருக்கிறது. இந்த நாளில் குறிப்பிட்ட இந்த இரண்டு மணி நேரத்திற்குள் உங்களுடைய பணப் பிரச்சனை தீர, மகாலட்சுமியிடம் முறையிடுங்கள்.
இந்த ஒரு வரி மந்திரத்தை சொல்லி, பின் சொல்ல கூடிய முறையில் வழிபாட்டை மேற்கொண்டால், இந்த ஒரு வரி மந்திரத்தை சொல்லி வழிபாட்டை மேற்கொண்டால், நீங்கள் கேட்டதை விட அதிகமாகவே அந்த மகாலட்சுமி உங்களுக்கு வரங்களை வாரி வாரி கொடுப்பாங்க. கூடவே சேர்த்து நீங்க கேட்ட பணத்தையும் கொடுப்பாங்க.
இன்று, அதாவது 14-3-2025 நிறைந்த வெள்ளிக்கிழமையான இன்று, மதியம் 11:57 மணி முதல் 1:57 மணி வரை சோடச கலை நேரமானது இருக்கிறது. இந்த 2 மணி நேரமும் இறைவனிடம் பிரார்த்தனை வைக்க முடியும் என்றால், ரொம்ப ரொம்ப சிறப்பு. இந்த இரண்டு மணி நேரம் முழுவதும் மகாலட்சுமியை நினைத்து பிரார்த்தனை வையுங்கள். ஏதாவது ஒரு வரத்தை மட்டும் இந்த இரண்டு மணி நேரமும் இறைவனிடம் கேளுங்கள். நிச்சயமாக உங்களுக்கு அது கிடைக்கும்.
இந்த இரண்டு மணி நேரத்திற்குள் வரக்கூடிய 5 வினாடியை தான் சோடச கலை நேரம் என்று சொல்லுவார்கள். அது எப்போது வரும் என்று யாருக்குமே தெரியாது. ஆகவே தான் இந்த இரண்டு மணி நேரமும் இறைவனிடம் பிரார்த்தனை வைக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.
வாய்ப்பு உள்ளவர்கள் இந்த இரண்டு மணி நேரமும் பிரார்த்தனை வையுங்கள். எங்களுக்கு வாய்ப்பு இல்லை. நாங்கள் வேலையில் இருக்கின்றோம். ஆனால் இந்த சோடசக்கலை நேரத்தில் நாங்களும் பலனடைய வேண்டும் என்றால் என்ன செய்வது. இந்த சோடச கலை நேரத்தில் குறிப்பிட்டுள்ள இந்த இரண்டு மணி நேரத்திற்குள் உங்களுக்கு எப்போது நேரம் கிடைக்கிறதோ, இரண்டு நிமிடம், நேரத்தை ஒதுக்கி, குலதெய்வத்தை வேண்டி மகாலட்சுமியை நினைத்து இந்த ஒரு வரி மந்திரத்தை சொல்லிவிட்டு பிறகு உங்களுடைய வேலையை பாருங்கள். பண வசியம் மந்திரம்.
பண வசியம் மந்திரம்
ஓம் ரீங் வசி வசி, தனம் பணம் தினம் தினம்.
மந்திரம் இவ்வளவுதான். இந்த மந்திரத்தை எப்போது சொன்னாலும் இந்த மந்திரம் உங்களுக்கு தேவையான பணத்தை கொடுக்கும் இந்த மந்திரத்தை இன்றைய தினம் சொல்லும்போது பல மடங்கு அற்புதமான பலன் உங்களுக்கு கிடைக்கும். வாய்ப்பு உள்ளவர்கள் நீங்கள் வீட்டில் இருந்தால், குறிப்பிட்ட சோடசக்கலை நேரமான இந்த இரண்டு மணி நேரத்தில் உள்ளங்கைகளில் ஒரு கைப்பிடி அளவு கல் உப்பு வைத்துக்கொண்டு, இருக்க மூடிக்கொண்டு இந்த மந்திரத்தை சொன்னால், நீங்கள் கேட்ட பணம் உங்களைத் தேடி வரும்.(பிரார்த்தனையை முடித்து கல் உப்பை கிண்ணத்தில் போட்டு மகாலட்சுமியின் முன்பு வைத்து விடவும். மூன்று நாட்கள் கழித்து எடுத்து அந்த உப்பை தண்ணீரில் போட்டு கரைத்து விடலாம்).
உங்களுடைய பண பிரச்சனைக்கு ஏற்ப வேண்டுதலை இந்த பிரபஞ்சத்திடம் சொல்லலாம். பண பிரச்சனைக்கு மட்டும்தான் இந்த சோடசக்கலை நேரம் வேலை செய்யும் என்பது அர்த்தம் கிடையாது. உங்களுடைய வாழ்வில் இருக்கும் எந்த இன்னல்கள் நீங்க வேண்டும் என்றாலும் இந்த இரண்டு மணி நேரத்தை நீங்கள் பயன்படுத்தி வேண்டுதல் வைக்கலாம். அந்த ஐந்து வினாடிக்குள் நீங்கள் சொல்லும் அந்த ஒற்றை வார்த்தை பலிக்கும்.
இதையும் படிக்கலாமே: காரடையான் நோன்பு இனிப்பு அடை செய்முறை
அதுதான் இந்த பரிகாரத்திற்கு பின்னால் இருக்கும் சூட்சமம். ஆனால் இந்த இரண்டு மணி நேரத்திற்குள், வரும் அந்த ஐந்து வினாடி எப்போது என்பது அந்த கடவுளுக்கு மட்டும்தான் தெரியும். நம்பிக்கை உள்ளவர்கள் முயற்சி செய்து பாருங்கள். இரண்டு மணி நேரத்தில் தலையெழுத்து மாறினால் அது இறைவன் நமக்கு தந்த வரம் தானே.