- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவாழ்வில் வசந்தம் வீச மார்கழி அமாவாசை பரிகாரம்

வாழ்வில் வசந்தம் வீச மார்கழி அமாவாசை பரிகாரம்

- Advertisement -

இந்த ஆங்கில மாதத்தின் கடைசி அமாவாசை நாளைய தினம் வரவிருக்கிறது. டிசம்பர் 30-12-2024 திங்கட்கிழமை அன்று அமாவாசை. இந்த நாளில் கட்டாயம் முன்னோர்களது வழிபாட்டை செய்ய வேண்டும். குலதெய்வத்தின் வழிபாட்டையும் செய்ய வேண்டும். இந்த நாளை தவறவிடக்கூடாது. இது தவிர இந்த அமாவாசை நாளில் நாம் செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகாரம், உங்கள் வாழ்க்கையில் வசந்தத்தை வீச செய்யும்.

நல்ல வேலையே கிடைக்காமல், நல்ல சம்பளம் இல்லாமல், வாழ்நாள் முழுவதும் வறுமையில் வாடிக் கொண்டிருக்கிறேன், நல்ல வேலை இருக்கிறது மேல் அதிகாரியின் தொல்லை தாங்க முடியவில்லை. மனதிற்கு நிம்மதி இல்லாத வேலை, இப்படி வேலையில் பிரச்சனை இருந்தாலும் சரி, அல்லது வியாபாரம் செய்பவர்களுக்கு லாபமே இல்லை.

- Advertisement -

வியாபாரத்தில் நஷ்டத்திற்கு மேல் நஷ்டம், தொழிலை தொடர்ந்து நடத்த முடியாத சூழ்நிலையில் சிக்கி இருப்பவர்களாக இருந்தாலும் சரி, இல்லற வாழ்க்கையில் பிரச்சனை இருந்தாலும் சரி, குழந்தை வரம் வேண்டும் என்றாலும் சரி, நோய் நொடி தீர வேண்டும் என்றாலும் சரி, இந்த பரிகாரத்தை செய்யலாம். உடனடியாக நல்ல பலன் கிடைக்கும்.

வாழ்வில் வசந்தம் வீச அமாவாசை பரிகாரம்

அமாவாசை நாள் அன்று அரச மரத்தை 27 முறை சுற்றிவர வேண்டும். அரச மரத்தடியில் பிள்ளையார் இருந்தாலும் சரி, பிள்ளையார் இல்லை என்றாலும் சரி அரச மரத்தை 27 முறை அமாவாசை நாளில் காலை நேரத்தில் சுற்றி வந்தால், உங்கள் கஷ்டங்கள் விலகும். எப்படி தெரியுமா. மதியம் 11 மணிக்கு முன்பாக இந்த பரிகாரத்தை செய்து முடித்து விடுங்கள்.

- Advertisement -

இரண்டு கைப்பிடி பச்சரிசி எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டு மணி நேரம் தண்ணீரில் நன்றாக ஊற வைத்து விடுங்கள். பிறகு தண்ணீரை நன்றாக வடிகட்டி விட்டு பச்சரிசியை மிக்ஸி ஜாரில் அரைத்து விடுங்கள். இதோடு கொஞ்சம் வெல்லம் போட வேண்டும். ஏலக்காய் தூள் போட வேண்டும். இரண்டு ஏலக்காய்களை போட்டு அரிசியோடு அரைத்துக் கொண்டாலும் அது உங்கள் சகோதரியம்.

இந்த பொடியை கையில் எடுத்துக்கொண்டு சென்று அரச மரத்தை 27 முறை வலம் வந்து, அரச மரத்தடியில் இருக்கும் எரும்புகளுக்கு இந்த பொடியை தூவி விட்டு அமாவாசை நாளில் உங்கள் கஷ்டங்கள் தீர பிரார்த்தனை செய்து கொண்டால், எவ்வளவு பெரிய துன்பமும் உங்கள் வாழ்க்கையை விட்டு விலகும். குறிப்பாக வேலை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏதாவது இருந்தால் அது உங்களை விட்டு வெகு தூரம் ஓடிவிடும்.

- Advertisement -

நல்ல வேலை தேடி முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு, அரசாங்க வேலைக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. உங்களுடைய கர்ம வினைகள் எல்லாம் கரைந்து போக சக்தி வாய்ந்த அமாவாசை நாளில் எறும்புகளுக்கு தானம் செய்துவிட்டு, அரச மரத்தை சுற்றி வாருங்களுக்கு முப்பத்து முக்கோடி தேவர்களின் ஆசியும் உங்களுக்கு கிடைக்கும்.

முடிந்தால், ஒருமுறை அரசமரம் வலம் வந்து நமஸ்காரம் செய்ய வேண்டும். இரண்டாவது முறை அரசமரத்தை சுற்றி வந்து நமஸ்காரம் செய்யவும். இப்படி 27 முறை அரச மரத்தை சுற்றி, 27 முறை நமஸ்காரம் செய்து சுற்றினால் இன்னும் உங்களுக்கான வேலைகள் வேகமாக நடக்கும். உங்களுக்கான கர்மா வினைகள் வேகமாக குறைக்கப்படும்.

இதெல்லாம் என்ன பரிகாரம். எங்களுக்கு தெரியுங்க அப்படின்னு நீங்க நினைக்கலாம். ஆனால் இந்த பரிகாரத்தை அமாவாசை நாளில் நம்பிக்கையோடு செய்பவர்களுடைய வாழ்க்கையில் நிச்சயம் வசந்தம் வீசும். எதை பற்றியும் கவலைப்படாமல் நம்பிக்கை ஒன்றை மூலதனமாக வைத்து நீங்களும் இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்.

இதையும் படிக்கலாமே: பண வசியம் ஏற்பட மார்கழி செவ்வாய் பரிகாரம்

அரச மரம் வீட்டின் அருகில் இல்லை என்றால், கோவில் குளங்களில் இருக்கும் மரத்துக்கு அடியில் அரிசி மாவை தூவி விடுங்கள் போதும். அடுத்த வருடம் உங்கள் வாழ்க்கையில் நடக்கும் நன்மைகளை விரல் விட்டு எண்ண முடியாது அத்தனை நல்லது நடக்கும் என்ற இந்த தகவலுடன் இன்று ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்