- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalமார்கழி சனிக்கிழமை ஹனுமன் வழிபாடு

மார்கழி சனிக்கிழமை ஹனுமன் வழிபாடு

- Advertisement -

மார்கழி மாதம் சனிக்கிழமை. ஹனுமன் வழிபாட்டிற்கு ரொம்ப ரொம்ப உகந்த நாள். இந்த நாளில் ஹனுமன் என்ற வார்த்தையை உச்சரிக்காமல் இருந்தால், அது நாம் செய்த பாவம். பாவத்தை போக்கி புண்ணியத்தை கொடுக்க கூடிய ஒரு எளிமையான ஹனுமன் வழிபாட்டை தான் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். பாவம் நீங்கி புண்ணியம் சேர்ந்தால், பணவரவு தானாக உயரும்.

எப்பாடுபட்டாவது இன்று இந்த 6 பூக்களை கொண்டு போய் அனுமன் பாதத்தில் சேர்த்து விடுங்கள். அந்த கோவிலில் அமர்ந்து இந்த மந்திரத்தைச் சொல்லுங்கள் எப்பேற்பட்ட உங்கள் கடன் சுமையும் குறையும். எவ்வளவு வறுமையில் வாடி இருந்தாலும் உங்களுக்கான பணம் உங்கள் கையை வந்து சேரும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். தொழிலில் நஷ்டமாக இருப்பவர்களுக்கு லாபம் வந்து சேரும். அது என்ன வழிபாடு ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

மார்கழி சனிக்கிழமை ஹனுமன்

வீட்டு பக்கத்தில் பெரிய ஆஞ்சநேயர் கோவில் இல்லை என்று வருத்தப்படாதீர்கள். ஏதாவது ஒரு கோவிலில் ஆஞ்சநேயர் சிலை சின்னதாக இருக்கும். அப்படிப்பட்ட ஒரு கோவிலை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். இன்று மாலை நீங்கள் அந்த கோவிலுக்கு செல்ல வேண்டும். ஆறு ரோஜா பூக்களை வாங்கிச் செல்ல வேண்டும். 6 பூவும் ஒரே நிறத்தில் இருக்கக்கூடிய ரோஜா பூக்கள்.

அதாவது ஆறு பூக்களும் ஒரே நிறத்தில் இருக்க வேண்டும், ஒரே சைஸில் இருக்க வேண்டும் என்பது அர்த்தம் கிடையாது. ஆறு பிங்க் நிற பன்னீர் ரோஜா எடுக்கலாம், ஆறு மஞ்சள் ரோஜா எடுக்கலாம், அல்லது உங்களுக்கு எந்த பூ ஆறு ஒரே மாதிரி சேர்ந்து கிடைக்கிறதோ, அதை கொண்டு போய் அனுமன் பாதத்தில் வையுங்கள்.

- Advertisement -

அனுமனுக்கு முன்பாக அமர்ந்து கொள்ளுங்கள் ‘ஓம் நமோ ஹனுமதே நமஹ’ என்ற மந்திரத்தை கண்களை மூடி சொல்லுங்கள். மந்திரத்தை சொல்லும்போது கணக்கு எண்ணிக்கை வைக்க வேண்டாம். 5 நிமிடம், 10 நிமிடம் அப்படி கணக்கு வைத்து மந்திரத்தை சொல்லிவிட்டு, ஹனுமனை வளம் வரும்போது, ‘ஸ்ரீ ராம ஜெயம்’ மந்திரத்தை சொல்லி நமஸ்காரம் செய்து வழிபாட்டை நிறைவு செய்து கொள்ள வேண்டும்.

இன்றைய தினம் மார்கழி மாதம் சனிக்கிழமை இந்த வழிபாட்டை செய்து அனுமன் மந்திரத்தையும், ராம நாமத்தையும் சொல்பவர்கள் வாழ்வில் நிச்சயம் செல்வமழை பொழியும். எந்த சிரமமும் இல்லாத வழிபாடு இது. சக்தி வாய்ந்த இந்த நாளில் இந்த வழிபாட்டை செய்வதன் மூலம் கோடான கோடி புண்ணியமும் கோடான கோடி பலனும் உங்களை வந்து சேரும். அது மட்டும் இல்லாமல் கிரக சூழ்நிலைகளால் சில பேர் சிக்கித் தவிப்பார்கள்.

இதையும் படிக்கலாமே: வளர்பிறை பஞ்சமி திதி வாராஹி மந்திரம்

ராகு பகவான், கேது பகவானால் வாழ்க்கையில் ரொம்பவும் பிரச்சனை இருக்கும். சனிபகவானால் பிரச்சனை இருக்கும். அப்படிப்பட்டவர்கள் இந்த பரிகாரத்தை செய்யும் போது உங்களுடைய கடினமான சூழ்நிலை கொஞ்சம் தளர்வடையும். மூச்சு கூட நிம்மதியாக விட முடியாத அளவுக்கு கஷ்டம் கொண்டவர்கள், கொஞ்சம் மூச்சுவிட நேரமும் கிடைக்கும். நம்பிக்கை உள்ளவர்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம். ஜெய் ஸ்ரீ ராம் என்ற மந்திரத்துடன் இன்றைய ஆன்மிகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்