இட்லி செய்வதை விட இந்த கேக் செய்வது ரொம்ப ரொம்ப ஈஸி. நமுத்து போன பிஸ்கட்டில் கூட இதைச் செய்யலாம்.

எவ்வளவு நாள் தான் சுவையான கேக்கை கடையில் சென்று வாங்குவது. நம் வீட்டில் இருப்பவர்களுக்கு மிக மிக சுலபமான முறையில் அருமையான ஒரு கேக்கை, நம் கையாலேயே எப்படி செய்து கொடுப்பது என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த கேக்கை இன்று நாம் மேரி பிஸ்கட்டை வைத்து தான் செய்யப் போகின்றோம். ஆனால் உங்களுடைய வீட்டில் நமத்துப் போன எந்த பிஸ்கட் இருந்தாலும் அதை பயன்படுத்தி இந்த கேக்கை செய்யலாம். பல பிஸ்கட்டுகள் சேர்ந்த கலவையை கொண்டும் இந்த புட்டிங் கேக் செய்யலாம். தவறொன்றும் கிடையாது. அது உங்களுடைய சௌகரியம். சரி இப்போது மேரி பிஸ்கட் கேக் செய்வது எப்படி தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

cake1

முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் மேரி பிஸ்கட்டுகள் – 15, முட்டை – 3, சர்க்கரை – 100 கிராம், ஏலக்காய் பொடி – 1/2 ஸ்பூன், பால் – 250 கிராம், இந்தப் பொருட்களை எல்லாம் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். காய்ச்சி ஆற வைத்த பாலை பயன்படுத்திக் கொள்ளுங்கள். பால் திக்கான பாலாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. இந்த கலவை அப்படியே ஒரு ஓரமாக இருக்கட்டும்.

அடுத்தபடியாக கேக்குக்கு தேவையான கேராமல் தயார் செய்யப் போகின்றோம். இதற்கு 250 கிராம், அதாவது 1/2 கப் அளவு சர்க்கரை எடுத்துக் கொள்ளுங்கள். இதற்கு 1/4 கப் அளவு தண்ணீர் சரியானதாக இருக்கும். (சர்க்கரை 1/2 கப், தண்ணீர் 1/4 கப்)

sugar-pagu

ஒரு அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, சர்க்கரையையும் தண்ணீரையும் ஊற்றி நன்றாக கலக்கிக் கொண்டே இருக்க வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்த சர்க்கரை கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்கும் போது, சர்க்கரை கட்டி பதத்திற்கு வரும். கொஞ்சம் கொஞ்சமாக பொன் நிறத்திற்கு மாறி வரும். சர்க்கரை முழுவதும் பொன் நிறமாக மாறியவுடன், அடுப்பை அணைத்து விட்டு, உடனடியாக கடையிலிருந்து இதை வேறொரு பாத்திரத்திற்கு மாற்றி விட வேண்டும்.

- Advertisement -

கேக் செய்வதற்கு உங்கள் வீட்டில் அகலமான எந்த கிண்ணம் இருந்தாலும் அதில் இந்த சர்க்கரை கரைசலை ஊற்றி 30 வினாடிகள் நன்றாக ஆற விடுங்கள். நன்றாக இந்த கேரமெல் ஆறி இறுகியதும், இதன் மேலே முதலில் மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் மேரி பிஸ்கட் முட்டை பால் சேர்த்த கலவையை மெதுவாக ஊற்றி விட வேண்டும். இப்போது இதை இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைக்க வேண்டும்.

எல்லார் வீட்டிலும் இட்லி பாத்திரம் கண்டிப்பாக இருக்கும். இட்லி பாத்திரத்திற்கு உள்ளே இரண்டு டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி, நன்றாக கொதிக்க விடுங்கள். அதன் மேலே ஒரு கலவையை வையுங்கள். தயாராக இருக்கும் கேக் ட்ரேவை எடுத்து அப்படியே அந்த கலவையின் மேல் வைத்து, கேக் ட்ரேவை ஒரு சிறிய தட்டை கொண்டு மூடி விடுங்கள் அதன் பின்பு இட்லி பாத்திரத்தின் மூடியை மூட வேண்டும். அப்போதுதான் கேக்கு உள்ளே தண்ணீர் இறங்காமல் இருக்கும்.

cake7

சரியாக 30 நிமிடம் இந்த கேக் மிதமான தீயில் ஆவியிலேயே வேகட்டும். 30 நிமிடம் கழித்து ஒரு கத்தியைக் கொண்டு இந்த கேக்கை குத்தி பாருங்கள். கத்தியில் கேக் ஒட்டவில்லை என்றால், கேக் வெந்து விட்டது என்று அர்த்தம்.

cake2

அதன்பின்பு கேக்கை எடுத்து தனியாக வைத்து, நன்றாக ஆற விடுங்கள். நன்றாக ஆறியதும், ஒரு பிளேட் மேலே இதை அப்படியே கவிழ்த்து கேக்கை மட்டும் தனியாக எடுத்து பார்த்தீர்கள் என்றால், பார்க்கும்போது அப்படியே சாப்பிடத் தூண்டும் அளவிற்கு சாஃப்டான புட்டிங் கேக் தயாராக இருக்கும். உங்களுக்கு இந்த ரெசிபி பிடித்திருந்தால் நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.