- Advertisement -

மருதாணி செடி யோகம்

- Advertisement -

பொதுவாகவே பெண்களின் கைகளில் மருதாணி இருப்பது யோகத்தை தருவதாக சாஸ்திரங்கள் கூறுகிறது. மருதாணி மிகுந்த குளிர்ச்சி தன்மை கொண்டது, இதனால் உடலும், மனமும் குளிர்ந்து சாந்தமான மனநிலைடன், மகாலட்சுமி கடாட்சத்துடன் இருப்பதாக ஐதீகம் உண்டு. எந்த நாளில் மருதாணி வைப்பது ராஜ யோகத்தை தரும்? மருதாணி வைப்பதன் மூலம் கிடைக்கக்கூடிய அதிர்ஷ்டத்தை அரிய ஆன்மீகம் சார்ந்த தகவல்களை இப்பதிவில் பகிர்ந்து கொள்கிறோம்.

பெண்கள் கைகளில் எப்போதும் மருதாணி இருக்க, மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக கிடைத்துக் கொண்டே இருக்கும். இவர்களுக்கு கைராசியும், முக ராசியும் உண்டாகும். மருதாணி வைக்கும் பொழுது நல்ல நேரம், நாட்கள் பார்த்து வைப்பதால் ராஜயோகம் கிடைக்கப் பெறும் என்று கூறப்படுகிறது. மருதாணியை வியாழன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய இந்த கிழமைகளில் வைக்க அதிர்ஷ்டம் உண்டாகும்.

- Advertisement -

அதிர்ஷ்டத்திற்கும், நேரத்திற்கும் நிறையவே தொடர்பு உண்டு. நமக்கு நேரம் நல்ல நேரமாக இருந்தால் அதிர்ஷ்டம் தானாகவே வந்து சேரும் என்பார்கள். அது போல நல்ல நாளில் சுக்கிரன் ஹோரையில் கைகளில் பெண்கள் மருதாணி வைத்துக் கொண்டால், பெரிய அளவில் உங்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும். உங்கள் வாழ்க்கையில் இருக்கக்கூடிய துரதிஷ்டத்தை துரத்தி அடித்து, நல்ல அதிர்ஷ்டம் தரக்கூடிய அமைப்பாக மாற்றக்கூடிய சக்தி, இந்த மருதாணிக்கு உண்டு.

மருதாணி வைத்துக் கொண்டு அந்த கைகளால் விளக்கு ஏற்றினால் அம்பாளின் அனுக்கிரகம் விரைவாக கிடைக்கும். மருதாணி இட்ட கைகளில், கண்டிப்பாக கண்ணாடி வளையல்களும் இருக்க வேண்டும். மருதாணி வைக்கும் பொழுது கிழக்கு திசை நோக்கி அமர்ந்து கொள்ளுங்கள். வேறு ஒருவர் உங்களுக்கு மருதாணி வைப்பதாக இருந்தால், அவரை வடக்கு திசை நோக்கி அமர செய்து இட்டுக் கொள்ளுங்கள்.

- Advertisement -

குடும்பத்திலும், பெண்களுக்கும் ஐஸ்வர்யம் உண்டாவதற்கு ஒவ்வொரு பஞ்சமி, தசமி, ஏகாதசி, துவாதசி ஆகிய திதிகள் வரக்கூடிய நாட்களிலும் மருதாணியை அரைத்து கையில் வைத்துக் கொள்ளுங்கள். அதுபோல பரணி, பூராடம் மற்றும் பூரம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களிலும் மருதாணி வைத்துக் கொள்ள அதிர்ஷ்டம் உண்டாகும், ஐஸ்வர்யங்கள் பெருகும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது.

மருதாணி வைக்கும் பொழுது உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருக்கிறதா? என்பதை கவனித்து பாருங்கள். சந்திராஷ்டமம் இருந்தால் அந்த நேரத்தில் மருதாணி வைக்க வேண்டாம். குறிப்பாக பரணி, பூரம், பூராடம் ஆகிய நட்சத்திரத்தில் சந்திராஷ்டமம் இருந்தால், அந்த நேரத்திலும் மருதாணி வைக்கக் கூடாது. மாலை வேளையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு பின்னர் மருதாணி இலைகளை பறிப்பதோ அல்லது அரைப்பதோ, அரைத்ததை கையில் வைப்பதோ கூடாது.

இதையும் படிக்கலாமே:
ஒன் பட் தக்காளி சாதம் செய்முறை

மருதாணி, மற்ற கிழமைகளை காட்டிலும் ஞாயிற்றுக்கிழமையில் காலையில் 5:30 மணி முதல் 7:30 மணி வரையிலும் மற்றும் 6:00 மணி முதல் 7:30 மணி வரை பெண்கள் வைத்துக் கொள்ள ராஜயோகம் உண்டாகும். ராகு காலம், எமகண்டம் ஆகிய நேரங்களிலும் மருதாணி வைக்கக் கூடாது. ஆண்களும் இந்த ரகசிய அரிய தகவல்களின்படி நேரம் பார்த்து இடது உள்ளங்கையில் வட்டமாக மருதாணி வைக்க யோகம் உண்டாகும். மருதாணி லக்ஷ்மி அன்னையின் அம்சம் என்பதால் அது அதிர்ஷ்டம் தரக்கூடியதாக நம்பப்படுகிறது. சரியான நேரமும், நாளும் பார்த்து வைக்கும் பொழுது ராஜ யோகத்தையும் கொடுக்கும் என்பது சாஸ்திரங்கள் சொல்லும் உண்மையாகும்.

சற்று முன்