மாசி மாத ராசி பலன் 2024 – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு

masi matha palan
- Advertisement -

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் தன்னம்பிக்கையுடன் செயலாற்றும் மாதமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். வீண் விரயங்கள் குறைய ஆரம்பிக்கும். உடல் நலலில் இருந்து வந்த குறைபாடுகள் படிப்படியாக நீங்கும். கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நன்மையை தரும். நீண்ட நாள் பிரச்சனைக்கு தெளிவான முடிவு கிடைக்கும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். வேலையை திறமையாக செய்து முடிப்பதன் மூலம் எதிர்பார்த்த சலுகைகளை பெற முடியும். தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்த அளப்பிற்கு லாபம் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். முதலீடுகள் செய்வது அதிகரிக்கும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு சிவபெருமானை வழிபட வேண்டும்.

- Advertisement -

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் உற்சாகம் நிறைந்த மாதமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்ததை விட அதிக அளவு பண வரவு ஏற்படும். இதனால் புதிதாக வீடு, மனை, ஆடை, ஆபரணங்கள் வாங்க கூடிய யோகமும் உண்டாக்கும். உடல்நலம் சீராக இருக்கும். கணவன் மனைவி இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். சுப செலவுகள் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகளும் அதிகமாக இருக்கிறது.

வேலையை பொருத்தவரை வேலை சுவை சற்ற அதிகமாகவே இருக்கும். புதிதாக வேலைக்கு முயற்சி செய்பவர்கள் இந்த மாதத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். புதிய தொழிலை முயற்சி செய்பவர்களுக்கும், தொழிலை விரிவு படுத்த வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் இது ஒரு சிறந்த காலமாக திகழப்போகிறது. இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு முருகப்பெருமானை வழிபட வேண்டும்.

- Advertisement -

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் பொறுமையுடன் செயலாற்ற வேண்டிய மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்பட்டாலும் அதை சேமிக்க முடியாத அளவிற்கு செலவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. உடல் நலனில் சிறு சிறு உபாதைகள் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். எந்த ஒரு செயலும் உடனடியாக முடியாமல் கால தாமதம் ஏற்பட்டு நிறைவேறும் வாய்ப்புகள் உள்ளது.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். கூடுதல் பொறுப்புகள் கிடைப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைப்பதற்குரிய உழைப்பை தர வேண்டும். தொழில் ரீதியாக எடுக்கக்கூடிய முயற்சிகள் வெற்றி பெற தடைகள் ஏற்பட்டு நீங்கும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு கோமாதாவை வழிபட வேண்டும்.

- Advertisement -

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் எச்சரிக்கையுடன் செயலாற்ற வேண்டிய மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். ஒரு சிலருக்கு கடன் தொடர்பான பிரச்சனைகள் குறைய ஆரம்பிக்கும். உடல் நலனில் கவனம் தேவை. வண்டி வாகனங்களில் செல்லும் பொழுது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் செல்வது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். யாரிடமும் எந்தவித வாக்குறுதியையும் சிந்திக்காமல் அளிக்கக்கூடாது. பிறரிடம் பேசும் பொழுது பொறுமையை கையாளுவது அவசியம்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாகவே தென்படும். சக ஊழியர்களை நம்பி பொறுப்பை ஒப்படைக்காமல் தாமே செய்வதன் மூலம் பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களை மேற்கொள்வதன் மூலம் லாபத்தை அதிகரிக்க முடியும். புதிதாக தொழில் ஆரம்பிக்கவும் அல்லது விரிவுபடுத்தவோ இந்த மாதம் சிறந்த மாதம் திகழும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு லட்சுமி ஹயக்ரீவரை வழிபட வேண்டும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் தன்னம்பிக்கையுடன் செயலாற்ற வேண்டிய மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்பட்டாலும் அதற்கேற்றவாறு செலவுகளும் ஏற்படும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நன்மையை தரும். உடல் நலனில் கவனம் தேவை. கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நன்மையை தரும். குடும்பத்தில் ஒரு சில பிரச்சினைகள் ஏற்பட்டு நீங்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறைய ஆரம்பிக்கும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று குறைவாகவே இருக்கும். திறமையை வெளிப்படுத்தக்கூடிய புதிய வாய்ப்புகள் தேடி வரும். ஒரு சிலருக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்த முயற்சி செய்பவர்களுக்கு வெற்றிகள் உண்டாகும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகிழ்வதற்கு மாரியம்மனை வழிபட வேண்டும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் யோகமான மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவைவிட அதிகமான பணவரவை ஏற்படும். சேமிப்புகள் உயர்வதற்குரிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்குரிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். வேலையில் கவனம் செலுத்தி செய்வதன் மூலம் எதிர்பார்த்த சலுகைகளை பெற முடியும். தொழிலை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். புதிய அணுகுமுறைகளை தொழிலில் புகுத்துவதன் மூலம் வருங்காலத்தில் லாபத்தை அதிகரிக்க கூடிய வாய்ப்புகள் உண்டாகும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு பெருமாளை வழிபட வேண்டும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் நல்ல மாற்றங்கள் நிறைந்த மாதமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். சுப விரயங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. உடல் நலம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் படிப்படியாக நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். வெளியூர் பயணங்கள் வெற்றி தரும்.

வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையே நிலவுகிறது. புதிதாக வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். ஏற்கனவே வேலையில் இருப்பவர்களுக்கு சலுகைகள் கிடைப்பதில் இருந்து வந்த தடைகள் நீங்கும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்காது என்றாலும் நஷ்டம் ஏற்படாமல் இருக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தால் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்கள் வெற்றியைத் தரும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு நடராஜரை வழிபட வேண்டும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் மகிழ்ச்சிகரமான மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்பட்டாலும் சுப விரயங்கள் காரணமாக செலவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்குரிய வாய்ப்புகளும் அதிகமாகவே இருக்கிறது. உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். இருப்பினும் குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் நன்மைகள் ஏற்படும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். அதை திறமையுடன் செய்து முடிப்பதன் மூலம் உயர் அதிகாரிகளின் பாராட்டையும் சலுகைகளையும் பெறுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. தொழிலை பொருத்தவரை உழைப்பிற்கு ஏற்ற லாபமே கிடைக்கும். மறைமுக எதிரிகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்கும் வாய்ப்புகள் உண்டாகும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு மகாலட்சுமி தாயாரை வழிபட வேண்டும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் அனுகூலமான மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பண வரவு கிடைத்தாலும் அதற்கேற்றவாறு செலவுகளும் ஏற்படும். இருப்பினும் அதை சமாளித்து விடுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் குறைய ஆரம்பிக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். தனிப்பட்ட விஷயங்களை பிறரிடம் பகிர்வதை தவிர்த்துக் கொள்வது நன்மையை தரும்.

வேலையை பொருத்தவரை வேலை சூழ்நிலை சாதகமாகவே இருக்கிறது. புதிதாக வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு தடைப்பட்டிருந்த சலுகைகள் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்க சிறிது தாமதமாகும். தொழிலை மேம்படுத்த மேற்கொள்ளும் பயணங்கள் வெற்றியைத் தரும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு அனுமனை வழிபட வேண்டும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் பிரச்சினைகள் தீரும் மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை பணவரவில் இருந்து வந்த தடைகள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். பழைய கடன்களை அடைப்பதற்கு நல்ல வழி பிறக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்கிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதில் இருந்து வந்த தடைகள் நீங்கும்.

வேலையைப் பொருத்தவரை சாதகமான சூழ்நிலையே நிலவுகிறது. புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களும், வேலையில் சலுகைகள் கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் இருந்த தடைகள் நீங்கி அவர்கள் எதிர்பார்த்த அனைத்தும் கிடைக்க வாய்ப்புகள் அதிகமான அளவு உள்ளது. தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்க கடினமாக உழைக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். உழைப்பிற்கேற்ற ஆதாயமே கிடைக்கும். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் நீங்க ஆரம்பிக்கும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு பிரத்தியங்கிரா தேவியை வழிபட வேண்டும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டிய மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படாது. ஒரு சிலருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். சேமிப்புகள் கரையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நன்மையை தரும். புதிதாக எந்த முயற்சியை செய்வதாக இருந்தாலும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்வது நன்மையை தரும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். வேலையில் கவனம் செலுத்தி செய்வதன் மூலம் பிரச்சினைகள் வராமல் பார்த்துக் கொள்ள முடியும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதில் தாமதங்கள் ஏற்படும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும் என்றாலும் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் கவனமாக இருப்பதன் மூலம் லாபத்தை தக்க வைத்துக்கொள்ள முடியும். மேலும் புதிய முயற்சிகள் ஈடுபடும் பொழுது ஒரு முறைக்கு பலமுறை யோசித்து தக்க ஆலோசனை பெற்று மேற்கொள்வது நன்மையை உண்டாக்கும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு சரபேஸ்வரரை வழிபட வேண்டும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் கண்ணும் கருத்துமாக செயலாற்ற வேண்டிய மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்பட்டாலும் முறையாக செலவு செய்து சேமிப்பை உயர்த்திக் கொள்வது நன்மையை உண்டாக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நன்மையை உண்டாக்கும். பயணங்களை மேற்கொள்ளும் பொழுது கவனத்துடன் இருப்பது நன்மையை தரும். எந்த ஒரு முடிவையும் எடுப்பதற்கு முன்பாக ஒரு முறைக்கு பலமுறை யோசித்து தக்க நபர்களிடம் ஆலோசனை பெற்று எடுப்பது நன்மையை உண்டாக்கும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். அதை திறமையுடன் செய்து முடிப்பதன் மூலம் சலுகைகள் பெறுவதற்குரிய வாய்ப்புகளும் ஏற்படும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் ஏற்படும். தொழிலை விரிவு படுத்த மேற்கொள்ளும் முயற்சிகளை ஒரு முறைக்கு பலமுறை யோசித்து எடுப்பது நன்மையை தரும். முதலீடு செய்யும் பொழுது கவனத்துடன் செயல்பட வேண்டும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு விநாயகரை வழிபட வேண்டும்.

- Advertisement -