மாதா, பிதா, குரு இவர்கள் மூவருக்கும் இந்த எண்ணம் மட்டும் வரவே கூடாது! மீறி வந்தால் உங்கள் தகுதியை, நீங்கள் இழந்து விட்டீர்கள் என்று தான் அர்த்தம்.

sivan-parvathi

நம்முடைய முன்னோர்கள் தாய், தந்தை, ஆசான் இவர்கள் மூவருக்கு பின்புதான், தெய்வத்தையே வைத்துள்ளார்கள். இப்படிப்பட்ட முதல் மூன்று இடத்தில் இருக்கும் இவர்கள் மூவருக்கும், வரவே கூடாத எண்ணங்கள் என்ன என்பதைப் பற்றி, நம் முன்னோர்கள், சாஸ்திர குறிப்புகளில் சொல்லிவிட்டுச் சென்றுள்ளனர். அப்படிப்பட்ட எண்ணம் தாய்க்கோ, தந்தைக்கோ அல்லது குருவுக்கு இருந்தால் அதை நீங்கள் கட்டாயம் மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியம். இது தவறு என்று தெரிந்த பின்பும், நீங்கள் அதை திரும்பத் திரும்ப செய்து கொண்டே இருந்தால், உங்களுக்கான தாய், தந்தை, குரு என்ற தகுதியை நீங்கள் கட்டாயம் இழுந்து விட்டதாகத்தான் அர்த்தம் என்று நம்முடைய சாஸ்திர குறிப்பில் கூறப்பட்டுள்ளது. அது என்ன என்பதைப் பற்றிய விரிவான தொகுப்பினை இந்தப் பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

old-lady

முதலில் தாய்க்கு வரவே கூடாத எண்ணம் என்பது, மகளைப் பார்த்து போட்டி போடுவது.  பொறாமைபடுவது. சில தாய்மார்கள் மகளுக்கு இணையாக போட்டி போடும் எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள். மகளுக்கு இணையாக துணி உடுத்துவதும், மகளுக்கு இணையாக தன்னை அழகு படுத்திக்கொள்வது, அதாவது வயது வரம்பு என்ன என்பதை அறியாமல் மகளிக்கு சமமாக போட்டி போடும் எண்ணம், எந்த தாய்க்கு உள்ளதோ அவர் தாய் தகுதியை முழுமையாகப் பெற்றவர் இல்லை என்றுதான் சாஸ்திர குறிப்புகள் கூறியுள்ளது. இது எவர் மனதையும் புண்படுத்துவதற்காக கூறப்படும் கூற்று அல்ல. அதாவது தாய் தன்னை அழகுபடுத்திக் கொண்டால் அது தவறா? என்ற கேள்வியை சிலர் எழுப்பலாம். இருப்பினும் வயது வரம்பு என்று ஒன்று இருக்கிறது.

தன்னுடைய மகள், தன்னுடைய தோளுக்கு சமமாக வளர்ந்த பின்பு அலங்காரத்தை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லவில்லை. அந்த அலங்காரத்தினை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று தான் சொல்லப்பட்டுள்ளது. நன்றாக புரிந்து கொள்ளுங்கள்! வயதுக்குத் தகுந்த உடையும், அலங்காரமும் மிக மிக முக்கியம். இது தாய்க்கும் சொல்லப்பட்டுள்ள வரக்கூடாத எண்ணம் என்பது குறிப்பிடத்தக்கது.

jean

இரண்டாவது தந்தை. தந்தையாகப்பட்டவர் என்றைக்கும் தன்னுடைய மகனைப் பார்த்து போட்டி பொறாமை கொள்ளக்கூடாது. எல்லா தாய்மார்களும், தந்தைமார்களும் தங்களுடைய குழந்தையைப் பார்த்து போட்டி பொறாமை படமாட்டார்கள். ஆனால் சில பேர் உள்ளார்கள். அவர்களுக்குக சொல்லப்பட்டுள்ள சாஸ்திர குறிப்புகள் தான் இவை.

- Advertisement -

சில தந்தையர் தன்னுடைய மகனைப் பார்த்து போட்டியும் பொறாமையும் கொள்வார்கள். தன் மகனைப் போல ஜீன்ஸ் டி-ஷர்ட் போட்டுக்கொள்ள வேண்டும். தன் மகனைப் போல கூலர்ஸ் அணிந்துகொள்ள வேண்டும். என்றெல்லாம் நினைப்பார்கள். இதை தவறு என்று சொல்ல வரவில்லை. உங்களுக்கு ஆசை இருந்தால் நீங்கள் அதை அணிந்து கொள்ளலாம். இருப்பினும் உங்கள் மகன் அணியும் போது அதை பார்த்து அதை பிரதிபலிப்பது என்பது தவறு என்று சொல்கிறது. முடிந்தவரை இந்த குணம் உங்களிடம் இருந்தால் அதை மாற்றிக் கொள்ள பழகுங்கள். தன்னுடைய மனைவி, தன் மகனுக்கு சமைத்து வைக்கும் உணவைப் பார்த்து கூட பொறாமைப்படும் சில தந்தைமார்கள் இந்த உலகத்தில் உள்ளவர்கள் என்று சொன்னால் அது பொய்யாகாது. எல்லோரையும் குறை கூறவில்லை. தவறு செய்யும் சில பேர்கள் உள்ளார்கள் அல்லவா? அவர்களுக்காகத் தான்.

teacher-students

மூன்றாவதாக சொல்லப்படுவது குரு. குரு ஸ்தானத்தில் உள்ளவர்கள் தெய்வத்தை விட மேலானவர்கள் என்பதை நாம் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். இந்த வரிசையில் உள்ள சிலர் தன்னுடைய மாணவனின் அதீத திறமையைப் பார்த்து பொறாமை அடைவார்கள். குருவிற்கு தெரியாத கேள்வியை ஒரு மாணவன் கேட்டுவிட்டால், அவனை திட்டி அடக்கி விடுவார்கள். ‘இதுவரை நான் கூட இந்த கேள்வியை யோசித்ததே இல்லை. நீ யோசித்து உள்ளாய் என்ற எண்ணத்தில்’ அந்த மாணவனை திட்டி விடக் கூடாது.

அந்த மாணவனை பாராட்டி அந்த கேள்விக்கான விடையை, ஆசிரியர் தான் தேடி தரவேண்டும். ஆசிரியரை விட அதிகப்படியான ஆற்றல் உடைய ஒரு மாணவனைப் பார்த்து எந்த ஒரு ஆசிரியர் பெருமைப்பட்டுக் கொள்கிறோ, அவரே முழுமையான குரு ஸ்தானத்தை பெறுகின்றார். தன்னுடைய மாணவனின் அறிவு திறன் அதிகமாக இருக்கிறது என்பதை ஏற்றுக் கொண்டு, அவனை மேம்படுத்தும் குருவே சிறந்த குருவாக சொல்லப்படுகிறார். தயவுசெய்து குருமார்கள் தங்களுடைய மாணவர்களின் அறிவுத் திறமையை பாராட்ட வேண்டுமே தவிர, பழிக்கவே கூடாது என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ‘ஆசிரியரான என்னைவிட, நீ சிந்திப்பதில் மிகவும் திறமை உள்ளவனாக இருக்கின்றாய்’ என்று அந்த மாணவனை மனதார பாராட்டும் குருவே சிறந்த குரு.

matha-pitha-guru-dheivam

இவை மூன்றும் நம் முன்னோர்களால் சொல்லப்பட்டுள்ள சாஸ்திர குறிப்புகள். சற்று சிந்தித்து, ஆழ்ந்து யோசித்தால் இதில் உள்ள அர்த்தங்கள் எல்லோருக்கும் புரியும். இந்த தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் இன்றிலிருந்தே ஒரு உறுதிமொழியை உங்களுக்குள் எடுத்துக்கொண்டு, தவறுகளை திருத்திக் கொண்டால் உங்களுக்கான பாவங்கள் எதுவும் வந்து சேராது என்பது குறிப்பிடத்தக்கது. மாதா பிதா குரு இவர்கள் மூவருக்கும், இந்த குறிப்பிட்ட எண்ணங்கள் வரவே கூடாது என்று, நான்காவது இடத்தில் இருக்கும் அந்த தெய்வத்திடம் பிரார்த்தனை செய்துகொண்டு, இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

English Overview:
Here we have Matha pitha guru deivam Tamil. Matha pitha guru deivam. Matha pitha guru daivam. Matha pitha guru. Matha pitha.