அடடா, டேஸ்டிலும் வாசத்திலும் அசைவ குழம்பு தோத்து போயிரும் போங்க! அட்டகாசமான சுவையில் ஒரு மீல் மேக்கர் கிரேவி ரெசிபி.

mealmaker-gravy
- Advertisement -

அசைவ சாப்பாட்டு பிரியர்களுக்காக  மசாலா வாசத்தோடு, ஒரு மீல் மேக்கர் கிரேவி ரெசிபி எப்படி செய்வது எப்படி. பார்க்கலாம் வாங்க. அடுப்பில் ஒரு கடாயை வைத்து சூடு செய்து 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். அது சூடாகட்டும். பூண்டு தோல் உரித்தது – 15 பல், இஞ்சி – 2 பின்ச் அளவு, சின்ன வெங்காயம் தோலுரித்து – 5, மீடியம் சைஸ் தக்காளி – 2, வரமல்லி – 1 ஸ்பூன், சோம்பு – 1 ஸ்பூன், சீரகம் – 1 ஸ்பூன், மிளகு – 1/2 ஸ்பூன், கிராம்பு – 1, ஜாதிபத்ரி – 1, நட்சத்திர சோம்பு – 1, பட்டை – 1, ஏலக்காய் – 1, பிரியாணி இலை – 1, இந்த எல்லா பொருட்களையும் அந்த எண்ணெயில் சேர்த்து பச்சை வாடை போகும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும்.

chutney4

தக்காளியை காம்பு மட்டும் நீக்கி கொள்ள வேண்டும். துண்டு துண்டாக நறுக்கிவிட கூடாது. முழுசாக போட்டு வதக்கவேண்டும். தக்காளியின் தோல் சுருங்கும் போது உள்ளே தக்காளி வெந்து இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். 7 லிருந்து 10 நிமிடம் இதை வதக்கினால் போதும். அதன் பின்பு இந்த விழுதை ஒரு தட்டில் மாற்றி நன்றாக ஆற வைத்து விடுங்கள். அதன் பின்பு மிக்ஸியில் போட்டு ஒரு முறை தண்ணீர் ஊற்றாமல் அரைத்து விட்டு, அதன் பின்பு இந்த கலவையோடு 4 முந்திரிப்பருப்பு சேர்த்து, கொஞ்சமாகத் தண்ணீர் ஊற்றி விழுதுபோல் அரைத்து ஓரமாக வைத்துக் கொள்ளுங்கள். இது அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

அடுத்தபடியாக ஒரு அகலமான பாத்திரத்தில் 200 கிராம் அளவு மீல் மேக்கரை போட்டு, கொதிக்கின்ற தண்ணீரை, அதில் ஊற்றி 10 நிமிடங்கள் வேகவைத்து அதன் பின்பு, அந்த தண்ணீரை நன்றாகப் பிழிந்து மீல்மேக்கரை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

mealmaker-gravy1

இப்போது குழம்பை தாளிக்க செல்வோமா. ஒரு குக்கரை அடுப்பில் வைத்து 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய், 1 ஸ்பூன் நெய் விட்டு நன்றாகக் காய வைத்துக்கொள்ளுங்கள். இதில் சோம்பு – 1 ஸ்பூன் தாளித்துக் கொள்ள வேண்டும். மீடியம் சைஸ் ஒரு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி போட்டு கொள்ளுங்கள். வெங்காயம் வதங்கும் போது அதனுடன் கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, புதினா இந்த மூன்று பொருட்களையும் சேர்த்து ஒரு கைப்பிடி அளவு போட்டு, நன்றாக வதக்கி, வெங்காயம் கண்ணாடி பதம் வந்தவுடன் வேக வைத்து பிழிந்து வைத்திருக்கும் மீல்மேக்கரை குக்கரில் சேர்த்து 1 நிமிடம் எண்ணெயில் வதக்க வேண்டும்.

- Advertisement -

அடுப்பை சிம்மில் வைத்துக்கொள்ளுங்கள். இப்போது மிளகாய் தூள் – 2 ஸ்பூன், வர மல்லித் தூள் – 2 ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/2  ஸ்பூன், கரம் மசாலா தூள் – 1/2 ஸ்பூன், தேவையான அளவு உப்பு, இந்த பொருட்களை மீல்மேக்கரோடு சேர்த்து ஒரு நிமிடம் வரை வதக்கி விட வேண்டும். மசாலாப் பொருட்கள் சேர்த்த உடன் அடி பிடிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

mealmaker-gravy2

மசாலா பொருட்களின் பச்சை வாடை நீங்கியதும், அரைத்து வைத்திருக்கும் மசாலா விழுதை சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த இடத்தில் கிரேவிக்கு தேவையான அளவு தண்ணீரையும் ஊற்றி கொள்ளுங்கள். 2 டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றினால் சரியாக இருக்கும். கிரேவியை ஒரு முறை நன்றாக கலந்து உப்பு காரம் சரி பார்த்து விட்டு, குக்கரை மூடி போட்டு விடுங்கள்.

mealmaker-gravy4

அடுப்பை மிதமான தீயில் இருந்து கொஞ்சம் வேகமாக வைத்து விட்டு, 3 லிருந்து 4 விசில் விட்டு அதன் பின்பு பிரஷர் அடங்கியவுடன் குக்கரை திறந்து பாருங்கள். இந்த வாசம் பக்கத்து வீட்டு வரை வீசும். மேலே கொத்தமல்லித் தழைகளைத் தூவி சுடச்சுட சாதம் இட்லி தோசை சப்பாத்தி எதற்கு வேண்டுமென்றாலும் இதை சைட் டிஷ்ஷாக பரிமாறிக் கொள்ளலாம். ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -