- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்ஆஹா மெது பக்கோடான்னா அது இதுதான். ரோட்டுக்கடை மெது பக்கோடாவை நம்ம வீட்டிலேயும் ஒரு முறை...

ஆஹா மெது பக்கோடான்னா அது இதுதான். ரோட்டுக்கடை மெது பக்கோடாவை நம்ம வீட்டிலேயும் ஒரு முறை ட்ரை பண்ணிப் பார்க்கலாமா.

- Advertisement -

சில இடங்களில் மெது போண்டா அல்லது மெது பக்கோடா என்று சொல்லப்படும் ஸ்னாக்ஸ், ரோட்டு கடைகளில் கிடைக்கும். அதை வாங்கி சாப்பிட்டால் அத்தனை ருசியாக இருக்கும். மேலே மொறுமொறுப்பாகவும் உள்ளே சாஃப்ட் ஆகவும் இருக்கும். அந்த போண்டா ரெசிபியை நம்முடைய வீட்டில் ஒரு முறை ட்ரை பண்ணிப் பார்ப்போமா. பக்குவமாக இந்த போண்டா சூப்பர் டேஸ்ல நமக்கு கிடைக்கும். மிஸ் பண்ணாம உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க. குறிப்பில் கொடுக்கப்படும் ஸ்டெப்ஸ்ஸை அப்படியே ஃபாலோ பண்ணுங்க.

முதலில் ஒரு பெரிய பவுல் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் 3 ஸ்பூன் நெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். நெய்யுடன் 1/2 ஸ்பூன் பேக்கிங் சோடா போட்டு ஒரு கரண்டியை வைத்து இந்த இரண்டு பொருட்களையும் அடித்து கலக்கி விடவேண்டும். அதன் பின்பு உங்கள் கையில் வைத்து நெய் பேக்கிங் சோடா இரண்டும் கலந்த கலவையை அடித்து கலக்க வேண்டும்.

- Advertisement -

அதாவது கையாலேயே பீட் செய்ய வேண்டும். அப்போது நமக்கு கிரீமி பக்குவத்தில் நெய் கிடைக்கும்.1/2 கப் அளவு பொட்டுக்கடலையை மிக்ஸியில் போட்டு நைசாக பொடி செய்து கொள்ளுங்கள்.

பவுலில் நெய்யையும் பேக்கிங் சோடாவையும் கலந்து வைத்திருக்கிறோம் அல்லவா அதில் பொட்டுக்கடலை மாவு – 1/2 கப், அரிசி மாவு – 1/2 கப், கடலை மாவு அரை – 1/2 கப், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 2, இஞ்சித் துருவல் – 1 ஸ்பூன், மிளகாய்தூள் – 1 ஸ்பூன், சீரகம் – 1 ஸ்பூன், சோம்பு – 1/2 ஸ்பூன், உப்பு தேவையான அளவு, பொடியாக நறுக்கிய புதினா கொத்தமல்லி தழை, கருவேப்பிலை – 1/2 கைப்பிடி இந்த எல்லா பொருட்களையும் போட்டு முதலில் தண்ணீர் எதுவும் ஊற்றாமல் உங்கள் கையை கொண்டு நன்றாக பிசைந்து கொடுக்க வேண்டும்.

- Advertisement -

அதன்பின்பு மிகக் கொஞ்சமாக 2 ஸ்பூன் அளவு தண்ணீரை தெளித்து மீண்டும் இந்த பக்கோடா மாவை அழுத்தமாக பிசைந்து கொள்ள வேண்டும். அதன் பின்பு இந்த மாவை சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி தயார்  செய்து வைத்துக்கொள்ளுங்கள். அடுப்பில் கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் மிதமான தீயில், எண்ணெய் மிதமான சூட்டில் இருக்கும் போது இந்த பக்கோடா உருண்டைகளை போட்டு பொரித்து எடுத்தால் சூப்பரான மெது போண்டா அல்லது மெது பக்கோடா தயார்.

நம் வீட்டில் இட்லி தோசைக்கு அரைக்கும் தேங்காய் சட்னியை கெட்டியாக அரைத்து பச்சை மிளகாய் காரம் தூக்கலாக வைத்து, இதற்கு தொட்டு சாப்பிட்டால் அருமையாக இருக்கும். உங்களுக்கு இந்த ரெசிபி பிடிச்சிருந்தா உங்க வீட்ல மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

சற்று முன்