மீதியான சப்பாத்தியில் இப்படி அசத்தலான சப்பாத்தி நூடுல்ஸ் செய்து கொடுத்தால் கொஞ்சம் கூட மிச்சம் இல்லாமல் முழுவதும் காலியாகிவிடும்

chappathi
- Advertisement -

பெரும்பாலானோரின் வீட்டில் இரவு நேரத்தில் சப்பாத்தி தான் டின்னராக இருக்கும். அப்படி உங்கள் வீட்டில் இரவு செய்து சப்பாத்தியானது மீதம் இருந்தால், அதனைக் கொண்டு காலையில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு அருமையான ஒரு ரெசிபியை செய்து கொடுக்கலாம். மேலும் இந்த ரெசிபியானது குழந்தைகள் மதிய வேளையில் சாப்பிடுவதற்கும் ஏற்றவாறு இருக்கும். அதாவது நூடுல்ஸ் என்றால் குழந்தைகள் மிகவும் விருப்பமாக சாப்பிடுவார்கள். ஆனால் கடைகளில் விற்கும் பாக்கெட் நூடுல்ஸ் உடல் நலத்திற்கு ஆரோக்கியமானதாக இருப்பதில்லை. எனவே கோதுமை மாவில் செய்யும் இந்த சப்பாத்தி மீதம் ஆகிவிட்டால் அதில் சுவையான சப்பாத்தி நூடுல்ஸ் செய்து கொடுத்து பாருங்கள். கொஞ்சம் கூட மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு முடிப்பார்கள். இதனை செய்வதற்க்கு மிகவும் ஈஸியாகவும், குறைந்த நேரமும் தான் செலவாகும். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
சப்பாத்தி – 4, முட்டைக்கோஸ் – 1/4 கப்,
கேரட் – 2, குடைமிளகாய் – 1, பூண்டு – 5 பற்கள், மிளகு தூள் – 1 டீஸ்பூன், சோயா சாஸ் – 1/4 டீஸ்பூன், தக்காளி சாஸ் – 2 டீஸ்பூன், உப்பு – 1 ஸ்பூன், எண்ணெய் – 1 ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
முதலில் சப்பாத்தியை கத்தரிக்கோல் பயன்படுத்தி நூடுல்ஸ் போன்று நீளமாக வெட்டிக் கொள்ள வேண்டும்.பிறகு வெங்காயம் மற்றும் அனைத்து காய்கறிகளையும் பொடியாக நறுக்கி வைக்க வேண்டும்.
பின்னர் இதனை ஒரு தட்டில் வைத்துக் கொண்டு, அடுப்பை பற்ற வைத்து அதன் மீது ஒரு வாணலியை வைக்க வேண்டும்.

பிறகு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டு மற்றும் வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்பு அதில் கேரட், முட்டைக்கோஸ் இவற்றையெல்லாம் சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்க வேண்டும்.

- Advertisement -

அடுத்து அதில் குடைமிளகாயை பொடியாக நறுக்கி சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும். சேர்த்த அனைத்து காய்கறிகளும் நன்றாக வதங்கிய பிறகு அதில் சோயா சாஸ், தக்காளி சாஸ், மிளகுத் தூள் சேர்த்து நன்கு கிளற வேண்டும். இரண்டிலிருந்து மூன்று நிமிடங்களுக்கு இதனை அப்படியே கிளறிக் கொண்டு இருக்க வேண்டும்.

அதன் பிறகு பின் தேவையான அளவு உப்பு சேர்த்து பிரட்டி விட வேண்டும். பின் வெட்டி வைத்துள்ள சப்பாத்திகளை சேர்த்து கலந்து விட வேண்டும். சப்பாத்தி சேர்த்த பின்னர் அடுப்பின் தீயை குறைவில் வைத்து 2 நிமிடம் நன்கு கிளறிவிட்டு, அதன் பின்னர் அடுப்பை அனைத்து விட வேண்டும். அவ்வளவுதான் சுவையான சப்பாத்தி நூடுல்ஸ் தயாராகிவிடும்.

- Advertisement -