ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் ஒரு சூப்பரான சோயா சங்க்ஸ் கிரேவியை வீட்டிலே எப்படி சுலமபாக செய்வது என்று பார்க்கலாம்.

- Advertisement -

நம் வீட்டில் எவ்வளவு தான் பார்த்து பார்த்து சமைத்தாலும் சில கிரேவிகள் ஹோட்டல்களில் கிடைப்பது போல நமக்கு வீட்டில் வரவே செய்யாது. எப்படி குழம்பு வைத்தாலும் பார்க்க ஒரே மாதிரி தான் இருக்கும். ஆனால் ரெஸ்டாரன்ட்யில் கொடுக்கும் கிரேவிகளின் சுவையை விட அதை பார்க்கும் போதே சாப்பிட வேண்டும் என்று தோன்றும் அளவுக்கு அதன் பக்குவம் அத்தனை அருமையாக இருக்கும். இதற்கு என்ன தான் சேர்ப்பார்கள் எப்படி தான் இதை செய்வார்கள் என்று நாம் யோசித்தது உண்டு. அப்படி ஒரு சுவையான ரெஸ்டாரன்ட் ஸ்டைல் கிரேவி தான் இந்த பதிவில் நான் தெரிந்து கொள்ள போகிறோம்.

தேவையான பொருட்கள்: மீள்மேக்கர் – 1கப், பொட்டு கடலை -1/4 கப், வெங்காயம் – 2, தக்காளி -3, சீரகம் – 1 ஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது -1 ஸ்பூன், சோம்பு பொடி – 1 டீஸ்பூன், மிளகாய்த்தூள் -2 டீஸ்பூன், தனியாத்தூள் -1 டீஸ்பூன், கரம் மசாலா – 1டீஸ்பூன், உப்பு – 1டீஸ்பூன், எண்ணெய் -நான்கு டேபிள் ஸ்பூன், கஸ்தூரி மேத்தி-1/2 டீஸ்பூன், மாங்காய் பொடி – 1 டீஸ்பூன்,கொத்தமல்லி இலை ஒரு கொத்து.

- Advertisement -

முதலில் பொட்டுக்கடலையை மிக்ஸியில் போட்டு நல்ல பவுடராக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு ஒரு மீல் மேக்கரை நன்றாக கொதிக்கும் தண்ணீரில் போட்டு ஒரு ஐந்து நிமிடம் அப்படியே மூடி போட்டு வைத்து விடுங்கள். அதன் பிறகு மீள் மேக்கரில் இருக்கும் தண்ணீர் எல்லாம் நன்றாக பிழிந்து விட்டு தண்ணீர் சுத்தமாக இல்லாமல் வடித்த பிறகு இதையும் மிக்ஸியில் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த பிறகு பொட்டுக்கடலை பவுடரையும் மீள் மேக்கர் அரைத்த விழுது சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளுங்கள். அதில் கொஞ்சம் உப்பு, ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், கரம் மசாலா அரை டீஸ்பூன், கொத்தமல்லி கொஞ்சம் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளுங்கள். இதில் தண்ணீர் சேர்க்க வேண்டாம் மீள் மேக்கரில் இருக்கும் ஈர பதமே போதும். அதை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைத்துக் கொள்ளுங்கள்.

அதன் பிறகு அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு கடாய் வைத்து அதில் ஐந்து டேபிள் ஸ்பூன் எண்ணெயும் ஊற்றி இந்த உருட்டி வைத்திருக்கும் மீள்மேக்கர் உருண்டைகளை அதில் போட்டு ஃப்ரை செய்து எடுத்து வையுங்கள். உங்களுக்கு தேவையானால் அதிகமாக எண்ணெய் ஊற்றி பொரித்து எடுத்த பிறகும் சேர்க்கலாம்.

- Advertisement -

அதன் பிறகு மீதம் இருக்கும் அதே எண்ணெயில் சீரகம் போட்டு பொரிந்ததும் வெங்காயத்தை நன்றாக அரைத்து அந்த பேஸ்ட்டை இதில் சேர்த்த பிறகு, இஞ்சி பூண்டு விழுதும் சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும். அதன் பிறகு தக்காளியையும் அரைத்து அந்த பேஸ்ட்டையும் இதனுடன் சேர்த்து அதையும் நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கிய பின்னர் தனியாத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு, மாங்காய் பொடி அனைத்தையும் சேர்த்து எண்ணெயில் வதக்கிய பிறகு தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். கிரேவி மிகவும் திக்காக இருந்தால் கொஞ்சம் தண்ணீர் அதிகமாக ஊற்றிக் கொள்ளலாம். எண்ணெய் பிரியும் வரை இந்த கிரேவி நன்றாக கொதிக்க வேண்டும்.

கிரேவி கொதித்து எண்ணெய் பிரிந்த பிறகு பொரித்து வைத்திருக்கும் மீள் மேக்கர் உருண்டைகளை இதில் சேர்த்து அரை ஸ்பூன் கரம் மசாலா, கஸ்தூரி மேத்தி சேர்த்து இரண்டு நிமிடம் மூடி போட்டு கொதிக்க விட்டு இறக்கி விடுங்கள். கடைசியாக மேலே கொத்தமல்லி தழைகளை தூவி பரிமாற வேண்டியது தான்.

இதையும் படிக்கலாமே: காஜூ கட்லியை ஒரு முறை இப்படி செய்து பாருங்கள், கடையில் வாங்குவதை விட இதன் சுவையாக அட்டகாசமாக இருக்கும்.

ஒரு சூப்பரான ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் இருக்கும் இந்த கிரேவி இட்லி, பூரி, சப்பாத்தி, பரோட்டா, நாண் என அனைத்திற்கும் நல்ல சைடு டிஷ். அதுமட்டுமின்றி புலாவ்,வெஜிடபிள் ரைஸ் போன்றவற்றைக்கும் இதை சைடிஷ் ஆக வைத்து சாப்பிட்ட நன்றாக இருக்கும்.

- Advertisement -