மேஷ லக்னத்தில் பிறந்தவர்கள் அதிக வருமானம் பெற இவற்றை செய்தால் போதும்.

mesham

ஜாதகம் கணிக்கின்ற போது ஒரு நபர் பிறக்கும் நேரத்தில் அவரது ராசிக்கு சூரியன் இருக்கும் நிலை கொண்டு கணிக்கப்படுவது லக்னம் எனப்படும். அந்த வகையில் மேஷம் தொடங்கி மீனம் வரை மொத்தம் 12 லக்னங்கள் இருக்கின்றன. இதில் மேஷ லக்னத்தில் பிறந்தவர்கள் தங்களின் வாழ்வில் மிகுந்த வருமானம், லாபங்கள் பெறுவதற்கான வழிமுறைகளை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

mesham

12 லக்னங்களில் முதலாவதாக வருவது மேஷ லக்னம் ஆகும். செவ்வாய் பகவானின் சொந்த வீடாகவும் சூரியனின் உச்ச வீடாகவும் மேஷம் இருக்கிறது. மேஷ லக்னத்தில் பிறந்தவர்கள் தங்களின் ஜாதகத்தில் சனியுடன் ராகுவோ கேதுவோ இருப்பது, சுக்கிரனுடன் ராகுவோ கேதுவோ இருப்பது, சனிக்கு அடுத்து ராகுவோ கேதுவோ இருப்பது, சுக்கிரனுக்கு அடுத்து ராகுவோ கேதுவோ இருப்பது, ரிஷபத்தில் ராகுவோ கேதுவோ இருப்பது, கும்பத்தில் ராகுவோ கேதுவோ இருப்பது, பிறப்பு ஜாதக சனியுடன் மேற்சொன்ன தொடர்பை கோட்சார ராகுவோ கோட்சார கேதுவோ பெறுவது, பிறப்பு ஜாதக சுக்கிரனுடன் மேற்சொன்ன தொடர்பை கோட்சார ராகுவோ கோட்சார கேதுவோ பெறுவது.

சனிக்கும் ராகுவுக்கும் அல்லது சனிக்கும் கேதுவுக்கும் இடையில் எத்தனை கட்டங்கள் இடைவெளி இருந்தாலும், இடையில் வேறு எந்த கிரகமும் இல்லாமலிருப்பது, சுக்கிரனுக்கும் ராகுவுக்கும் அல்லது சுக்கிரனுக்கும் கேதுவுக்கும் இடையில் எத்தனை கட்டங்கள் இடைவெளி இருந்தாலும், இடையில் வேறு எந்த கிரகமும் இல்லாமலிருப்பது போன்ற ஜாதக அமைப்புகளால் மேஷ லக்னகாரர்களுக்கு சரியான வருமானம், லாபங்கள் கிடைக்காத நிலை ஏற்படுகிறது.

Sani Baghavan

இத்தகைய ஜாதக அமைப்பால் வருமான குறைவு, லாபமின்மை போன்ற பிரச்சனைகளை போக்க வருடத்திற்கு ஒரு முறை உங்கள் குலதெய்வ கோயிலுக்கு சென்று படையல் வைத்து பூஜைகள் செய்து வழிபாடு செய்ய வேண்டும். வருடத்தில் எந்த ஒரு மாதத்திலும் தேய்பிறை வெள்ளிக்கிழமை தினத்தில் ஒருமுறையும், வளர்பிறை வெள்ளிக்கிழமை ஒருமுறையும் குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயில் அல்லது திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலுக்கு சென்று சனீஸ்வரனுக்கு பூஜைகள் செய்து, வழிபட வேண்டும்.

- Advertisement -

தேய்பிறை சனிக்கிழமை ஒருமுறையும் வளர்பிறை சனிக்கிழமை ஒருமுறையும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் அல்லது கஞ்சனூர் சுக்கிரன் பகவான் கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும். மேற்கண்ட கோயில்களுக்கு முதலில் தேய்பிறை தினத்திலும் பிறகு வளர்பிறை தினத்திலும் சென்று வழிபாடு செய்ய வேண்டும். மேலும் சூரிய உதயத்திலிருந்து குறைந்த பட்சம் 7 மணி நேரம் நீங்கள் அக்கோயில்களுக்குள்ளாகவே இருக்க வேண்டியது அவசியம். மேலும் வெள்ளிக்கிழமை சனி பகவானுக்கும், சனிக்கிழமை சுக்கிர பகவானுக்கும் சுத்தமான நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும்.

இதையும் படிக்கலாமே:
சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள்

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Mesha lagna pariharam in Tamil. It is also called as Jothida pariharam in Tamil or Jothidam lagnam in Tamil or Mesha lagna in Tamil.