வெந்தயக்கீரையை வெச்சு ரெஸ்டாரன்ட் ஸ்டைல நச்சுன்னு ஒரு கிரேவி. சிம்பிளா உங்களுக்காக!

methi-gravy

வெந்தயக் கீரை, பச்சைப் பட்டாணி இந்த இரண்டு பொருட்களை வைத்து ரெஸ்டாரண்ட் ஸ்டைலில், இட்லி தோசை சப்பாத்தி இவைகளுக்கு தொட்டுக் கொள்ள சூப்பரான ஒரு கிரேவி ரெசிபி தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். மிக மிக சுலபமான முறையில், சுவையான, அதே சமயத்தில் உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய இந்த கிரேவியை யாரும் மிஸ் பண்ணாதீங்க! ஒரு வாட்டி உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க நிச்சயம் நல்லா வரும்.

vendhaya-keerai

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்துக்கொள்ளுங்கள். 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், மீடியம் சைஸ் வெங்காயம் – 2 பொடியாக நறுக்கியது, முந்திரிப்பருப்பு 10 லிருந்து 15, பூண்டு – 6 பல் தோல் உரித்தது, பச்சை மிளகாய் – 3 இந்த பொருட்களை எல்லாம் சேர்த்து 2 நிமிடங்கள் நன்றாக வதக்கி விட வேண்டும். அதன் பின் பொடியாக நறுக்கிய – 2 தக்காளி பழங்களை சேர்த்து, 3 நிமிடங்கள் வதக்குங்கள். இதை நன்றாக ஆற வைத்து விட்டு, மிக்ஸியில் போட்டு விழுது போல அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். இது அப்படியே இருக்கட்டும்.

அடுத்தபடியாக ஒரு சிறிய கட்டு வெந்தயக் கீரையை சுத்தம் செய்து தண்ணீரில் அலசி, கழுவி, சுத்தப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். 150 கிராம் கீரை இருந்தால் போதும். அதன் பின்பாக 100 கிராம் அளவு பச்சை பட்டாணி ஃப்ரஷாக கிடைத்தால் அதை பயன்படுத்திக் கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் முந்தைய நாளே காய்ந்த பட்டாணியை தண்ணீரில் ஊறவைத்து, வேகவைத்து அதை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

pachai pattani

ஒரு கடாயில் 1 ஸ்பூன் அளவு எண்ணெய்யை விட்டு, தயாராக இருக்கும் வெந்தயக் கீரையை முதலில் எண்ணெயில் போட்டு மிதமான தீயில் 2 நிமிடங்கள் வதக்க வேண்டும். அதன் பின்பு ஃபிரஷ் பச்சை பட்டாணியையும் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி இதையும் தனியாக ஒரு பவுலில் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். (காய்ந்த பச்சை பட்டாணி இருந்தால் வேகவைத்ததை இந்த இடத்தில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.) இப்போது கிரேவியை தாளிக்க போகலாம்.

- Advertisement -

கடாயில் 4 டேபிள்ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி, சூடானதும் சீரகம் – 1 ஸ்பூன், பட்டை – 1, லவங்கம் – 1, பிரியாணி இலை – 1, இவைகளைப் போட்டு தாளித்துக் கொள்ள வேண்டும். இப்போது முதலில் அரைத்து வைத்த வெங்காயம் தக்காளி விழுதை இந்த கடாயில் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். அதாவது 5 நிமிடங்கள் வதக்குங்கள். கிரேவியில் இருந்து எண்ணெய் தனியாக கக்கிக் கொண்டு வெளியே வரும்.

pachai pattani

அடுத்தபடியாக வதக்கி வைத்திருக்கும் கீரையையும் பச்சை பட்டாணியையும் கடாயில் சேர்த்து ஒருமுறை நன்றாக வதக்கி விட வேண்டும். இப்போது எண்ணெயுடன் கிரேவி, பச்சை பட்டாணி வெந்தயக்கீரை எல்லாம் சேர்ந்து நன்றாக கலந்த பின்பு, மிளகாய் தூள் – 1 ஸ்பூன், தனியா தூள் – 1 ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன் தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு நிமிடங்கள் வதக்கி, 1 டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி, நன்றாக கொதிக்க விட வேண்டும்.

methi-gravy1

இந்த கிரேவியை ஒரு மூடியை போட்டு பச்சை வாடை போகும் வரை கொதிக்க விட்டு விடுங்கள். அடுத்தபடியாக இறுதி கட்டத்தில் 1/2 ஸ்பூன் கரம் மசாலா பொடி சேர்க்க வேண்டும். கிரேவியை இறக்குவதற்கு முன்பு, உங்களுடைய வீட்டில் பிரஷ் கிரீம் இருந்தால் 1/2 கப் அளவு கிரீமை சேர்த்து கொத்தமல்லி தழைகளைத் தூவி, இந்த கிரேவியை கலந்துவிட்டு பரிமாறலாம்.

methi-gravy2

அப்படி ஃப்ரஷ் க்ரீம் இல்லை என்றால், திக்காக தேங்காய் பாலை எடுத்து, கிரேவியை இறக்குவதற்கு ஒரு நிமிடத்திற்கு முன்பாக, கிரேவியில் தேங்காய் பாலை ஊற்றி, பரிமாறிக் கொள்ளலாம். அது நம்முடைய இஷ்டம்தான். ஆக மொத்தத்தில் இந்த கிரேவி ரெஸ்டாரன்ட் ஸ்டைல் டேஸ்ல நிச்சயமாக கிடைக்கும். ட்ரை பண்ணி பாருங்க.