வெங்காயம் இல்லையா? மிளகாய் பூண்டு சட்னி இப்படி அரைச்சு பாருங்க செம டேஸ்டாக இருக்கும். 4 நாள் கூட வச்சு சாப்பிடலாம்!

milagai-chutney
- Advertisement -

வெங்காயம் இல்லாத சமயங்களில் சட்டென சூப்பரான இந்த ஆரோக்கியம் மிகுந்த மிளகாய் பூண்டு சட்னி நொடியில் தயாரிக்கலாம். வெறும் 4 பொருட்களை வைத்து தயாரிக்க கூடிய இந்த சட்னி நாலு நாட்கள் வரை கூட வைத்து சாப்பிடலாம், கெட்டுப் போகாது. எல்லா வகையான டிபன் வகைகளுக்கும் சூப்பரான சைடிஷ் ஆக இருக்கக் கூடிய இந்த மிளகாய் பூண்டு சட்னி எப்படி அரைப்பது? என்பதை தான் இந்த பதிவு மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறீர்கள்.

மிளகாய் பூண்டு சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
வர மிளகாய் – 15, நாட்டு பூண்டு பல் – 30, பெரிய தக்காளி – 3, புளி – சிறு நெல்லிக்காய் அளவு, கல் உப்பு – தேவையான அளவு, சமையல் எண்ணெய் – இரண்டு டேபிள் ஸ்பூன், தாளிக்க: நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், கடுகு – கால் டீஸ்பூன், உளுந்து – கால் ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து.

- Advertisement -

மிளகாய் பூண்டு சட்னி செய்முறை விளக்கம்:
மிளகாய் பூண்டு சட்னி செய்ய முதலில் தேவையான எல்லா பொருட்களையும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பூண்டு பற்கள் மலை பூண்டாக இல்லாமல் நாட்டு பூண்டாக இருப்பது ரொம்பவே நல்லது. பூண்டு பற்களை ஒவ்வொன்றாக எடுத்து தோல் உரித்து வைத்துக் கொள்ளுங்கள். முதலில் ஒரு வாணலியை எடுத்து அடுப்பில் வைத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு டேபிள்ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் விட்டுக் கொள்ளுங்கள். அதில் 15 வர மிளகாய் காம்பு நீக்கி சேர்த்து லேசாக வதக்கி விடுங்கள். வதக்கும் போது அடுப்பை குறைந்த தீயில் வைத்துக் கொண்டு வதக்குங்கள், இல்லையில் கரி பிடிக்க வாய்ப்பு உண்டு.

ரெண்டு நிமிடம் நன்கு வதக்கி விட்டால், நல்ல வாசமாக வர மிளகாய் உப்பி வரும். செக்க செவேலென சிவந்து வரும் பொழுது நீங்கள் தோல் உரித்து வைத்துள்ள பூண்டு பற்களை அப்படியே சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பூண்டின் பச்சை வாசம் போக வதங்கி வரும் பொழுது, அதன் நிறம் மாற ஆரம்பிக்கும். அந்த சமயத்தில் நீங்கள் நன்கு சுத்தம் செய்து பொடி பொடியாக நறுக்கி வைத்துள்ள பழுத்த தக்காளி பழங்களை சேர்க்க வேண்டும்.

- Advertisement -

தக்காளி சீக்கிரம் வதங்க உப்பு சேர்க்க வேண்டும். இந்த சட்னிக்கு கல் உப்பு சேர்ப்பது நல்லது. தூள் உப்பு வேண்டாம். இதனுடன் சிறு நெல்லிக்காய் அளவிற்கு புளியை உருட்டி சேர்த்துக் கொள்ளுங்கள். பின் தக்காளி சுருள மசிய வதங்கி வரும் பொழுது அடுப்பை அணைத்து ஆற விட்டு விடுங்கள். ஆறிய இந்த விழுதை மிக்ஸி ஜாரில் போட்டு மிக குறைந்த அளவில் தண்ணீர் ஊற்றி, கட்டியாக சட்டி பதத்தில் அரைத்து ஒரு கிண்ணத்திற்கு மாற்றிக் கொள்ளுங்கள். இதற்கு ஒரு சிறு தாளிப்பு இப்போது கொடுக்க வேண்டும். தாளிப்பு கொடுக்க நல்லெண்ணையை பயன்படுத்துங்கள்.

தாளிப்புக்கு அடுப்பை பற்ற வைத்து ஒரு தாளிப்பு கரண்டியை அதில் வைத்துக் கொள்ளுங்கள். இரண்டு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணையை சேர்த்து நன்கு காய விடுங்கள். நல்லெண்ணெய் புகை வர காய்ந்ததும், கடுகு போட்டு பொரிய விடுங்கள். பின் உளுந்து சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளுங்கள். உளுந்து வறுபட்டவுடன் ஒரு கொத்து கருவேப்பிலையை தாளித்து சட்னியில் கொட்டி இறக்கினால் சூப்பரான மிளகாய் பூண்டு சட்னி தயார்! இதை நான்கு நாட்கள் வரை வைத்திருந்து சாப்பிடலாம் கெட்டுப் போகாது.

- Advertisement -