மிளகு குழம்பை காரசாரமாக ஒருவாட்டி இப்படி வைத்து பாருங்கள்! நீங்கள் வடிக்கும் சாதத்தில் ஒரு பருக்கை கூட மிச்சமில்லாமல் காலியாகிவிடும்.

milagu-kozhambu-pepper
- Advertisement -

சில சமயங்களில் நம்முடைய வீட்டில் சாதம் வடிச்சா, அந்த சாதத்தை விருப்பமாக சாப்பிடவே மாட்டார்கள். அந்த சூழ்நிலையிலும் கூட, ஆரிய சாப்பாடாக இருந்தாலும், இந்த குழம்பை வைத்து, அந்த சாப்பாட்டில் பிசைந்து சாப்பிட்டு பாருங்கள். ஒரு சோறு கூட மிஞ்சாது. அந்த அளவிற்கு காரசாரமான, சுவையான ஒரு மிளகு குழம்பு பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த குழம்பை சாப்பிட்டால் மூக்கிலிருந்து சளி ஒழுக ஆரம்பித்து விடும். நெஞ்சு சளி கரையும். அந்த அளவிற்கு சூப்பர் குழம்பைத் தான் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

Step 1:
முதலில் அடுப்பில் கடாயை வைத்து, மிளகு – 1 ஸ்பூன், அரிசி – 1/4 ஸ்பூன், வெந்தயம் – 1/4 ஸ்பூன், பெருங்காயம் – 1/4 டீஸ்பூன், சீரகம் – 1/4 ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் போட்டு மிதமான தீயில் சிவக்கும் அளவிற்கு வறுக்க வேண்டும். எண்ணெய் ஊற்றக் கூடாது. ட்ரை ஃப்ரை செய்து கொள்ளுங்கள். சீரகத்தை மட்டும் இறுதியாக போட்டு வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். சீரகம் கருகி விட்டால், வாடை வீசும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

- Advertisement -

இந்த கலவை நன்றாக ஆறியதும், மிக்ஸியில் போட்டு பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த பொடியை கொஞ்சம் ஆற வைத்து விட்டு, கண்ணாடி பாட்டிலில் போட்டு சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். இது அப்படியே இருக்கட்டும்.

Step 2:
அடுத்ததாக ஒரு கடாயில் நல்லெண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன் ஊற்றி, அது காய்ந்ததும் துவரம்பருப்பு – 1 ஸ்பூன், உளுத்தம் பருப்பு – 1/2 ஸ்பூன், வரமல்லி – 2 ஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன், மிளகு – 2 ஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து, வரமிளகாய் – 3, பூண்டு – 10 பல் தோல் உரித்து, சின்ன வெங்காயம் – 5 பல், சிறிய எலுமிச்சை பழ அளவு புளி, இவையெல்லாவற்றையும் அந்த எண்ணெயில் போட்டு நன்றாக வதக்க வேண்டும். புளிக்கரைசல் எல்லாம் எடுக்க வேண்டாம். புளியை கையில் சிறு சிறு துண்டுகளாக கிள்ளி போட்டு வதக்கிக் கொள்ளுங்கள். மொத்தமாக எல்லா பொருட்களும் நான்கில் இருந்து ஐந்து நிமிடங்கள் வரை வதக்கினால் போதும்.

- Advertisement -

எண்ணெயில் உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு, சீரகம், மிளகு, இவைகள் சிவந்த பின்பு, இறுதியாக வர மிளகாய், பூண்டு, வெங்காயம் புளி போட்டு வதக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். வருத்த இந்த கலவை நன்றாக ஆறிய பின்பு, மிக்ஸி ஜாரில் போட்டு மொழுமொழுவென்று தண்ணீர் ஊற்றி பேஸ்ட் பதத்தில் அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

onion-vadagam1

Step 3:
அடுத்தபடியாக குழம்பு தாளிக்க ஒரு கடாயை அடுப்பில் வைத்து விட்டு, 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, அதில் வெங்காய வடகம் அல்லது கடுகு தாளிக்க வேண்டும். அடுத்தபடியாக ஒரு கொத்து கறிவேப்பிலை, பெருங்காயம் 2 சிட்டிகை, சேர்த்து வதக்கி, அதன் பின்பு பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் 10 பல், பொடியாக நறுக்கிய பூண்டு 5 பல், இவைகளை சேர்த்து 2 நிமிடங்கள் வரை வதக்கினால் போதும்.

- Advertisement -

milagu-kozhambu1

அடுத்ததாக மிக்ஸி ஜாரில் மொழுமொழுவென அரைத்து வைத்திருக்கும் விழுதை கடாயில் ஊற்றி, கொஞ்சமாக தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளுங்கள். குழம்பு கொதிக்க கொதிக்க கட்டி தன்மைக்கு வரும். ஆகையால் குழம்பிற்கு தேவையான தண்ணீரை முதலிலேயே ஊற்றிவிட வேண்டும். அதன் பின்பு குழம்புக்கு தேவையான அளவு உப்பு, 1/2 ஸ்பூன் மஞ்சள் தூளை போட்டுக் குழம்பு நன்றாகக் கலக்கி, ஒரு மூடி போட்டு ஐந்திலிருந்து ஆறு நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க விடுங்கள்.

milagu-kozhambu2

குழம்பு கொதித்து சுண்டி சரியான பதத்திற்கு வரும். இறக்குவதற்கு 3 நிமிடங்களுக்கு முன்பாக முதலில் பொடி செய்து வைத்திருக்கிறோம் அல்லவா? அந்த மிளகுப்பொடியில் இருந்து 1 ஸ்பூன் பொடியை குழம்பில் சேர்த்து நன்றாக கலந்து விட்டு, கொதிக்க விட்டு இறக்கினால் போதும். (இந்த மிளகுப்பொடியை வெந்தய குழம்பு, காரக்குழம்பு எதற்கு வேண்டுமென்றாலும் பயன்படுத்திக்கொள்ளலாம். சுவையாக இருக்கும்.) வாசத்தோடு மிளகு குழம்பு தயார். சுடச்சுட சாதம் ஆக இருந்தாலும், ஆரிய சாதமாக இருந்தாலும், சாதம் தொண்டைக்குள் இறங்கிவதே தெரியாது. குண்டான் சோறு காலி.

இதையும் படிக்கலாமே
உங்க வீட்டில் உருளைக்கிழங்கு, வெங்காயம் மட்டும் இருந்தா போதும் 5 நிமிஷத்துல சூப்பரான வடை ரெடி!

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -