கமகமன்னு மிளகு வாசம் வீச ‘மிளகு மோர் குழம்பு’ இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க எவ்வளவு சாப்பாடு கொடுத்தாலும் மெய் மறந்து சாப்பிடுவீங்க!

milagu-mor-kulambu_tamil
- Advertisement -

விதவிதமான மோர் குழம்புகளில் ‘மிளகு மோர் குழம்பு’ ரொம்பவே சுவையான ஒரு குழம்பாக இருக்கிறது. அதிகம் மிளகு சேர்த்து செய்யப்படும் இந்த மோர் குழம்பு அபாரமான ருசியை கொடுக்கும், மேலும் தொண்டைக்கு இதமாகவும் இருக்கும். குடைமிளகாய் அல்லது வெண்டைக்காய் சேர்த்து செய்யும் பொழுது இதனுடைய ருசி இன்னும் தூக்கலாக இருக்கும். அருமையான மிளகு மோர் குழம்பு ரெசிபி இதே மாதிரி நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க. வாங்க அதை எப்படி பண்ணலாம்? என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

அரைக்க:

- Advertisement -
  • துவரம் பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன்
  • சீரகம் – ஒரு டீஸ்பூன்
  • மிளகு – 2 டீஸ்பூன்
  • தனியா விதைகள் – ஒரு டேபிள் ஸ்பூன்
  • துருவிய தேங்காய் – அரை கப்
  • துருவிய இஞ்சி – ஒரு டீஸ்பூன்
  • வரமிளகாய் – ஒன்று. அரைத்த மோர் – ரெண்டரை கப்
  • குடைமிளகாய் – ஒன்று
  • மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு.

தாளிக்க:

  • சமையல் எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்
  • கடுகு – அரை டீஸ்பூன்
  • வரமிளகாய் – ஒன்று
  • பொடித்த மிளகு – அரை டீஸ்பூன்
  • கறிவேப்பிலை – ஒரு கொத்து
  • பெருங்காயத்தூள் – அரை ஸ்பூன்.

செய்முறை

முதலில் அரைப்பதற்கு தேவையான பொருட்களை ஒரு பௌலில் சேர்த்துக் கொள்ளுங்கள். தனியா விதைகள், மிளகு, சீரகம், அலசி சுத்தம் செய்த துவரம் பருப்பு, ஒரே ஒரு வரமிளகாயை காம்பு நீக்கி சேர்த்து மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். இவை நன்கு ஊறிய பிறகு தண்ணீரை வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது ஒரு மிக்ஸி ஜாரில் இவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள். இவற்றுடன் ஒரு விரல் நீளத்திற்கு இஞ்சியை துண்டுகளாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் இதனுடன் துருவிய தேங்காய் தேங்காய் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் மிக்ஸியை இயக்கி நைசாக அரைத்து எடுத்துக் கொண்டு வாருங்கள்.

- Advertisement -

இப்பொழுது கெட்டியான தயிரை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுத்தால் நைசாக மோர் போல கிடைத்து விடும். இந்த மோர் ரெண்டரை கப் அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள். இவற்றுடன் நீங்கள் அரைத்து வைத்துள்ள பொருட்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து நன்கு கலந்து விடுங்கள்.

பின்னர் ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் அளவிற்கு சமையல் எண்ணெய் விட்டு ஒரு பெரிய குடைமிளகாய் ஒன்றை எடுத்து நன்கு சுத்தம் செய்து கழுவி உள்ளே இருக்கும் விதைகளை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். நறுக்கிய இவற்றை எண்ணெயில் போட்டு சுருள வதக்கிக் கொள்ளுங்கள். குடைமிளகாய்க்கு பதிலாக நீங்கள் வெண்டைக்காயும் இதைப் போல வதக்கலாம். வதக்கிய காய்கறியை மோருடன் சேர்த்து இப்பொழுது மோரை அடுப்பில் வைத்து சூடேற்றுங்கள். அடுப்பை எப்பொழுதும் மோர் குழம்பு செய்யும் பொழுது குறைவான தீயில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள், அப்பொழுது தான் மோர் திரியாது.

இதையும் படிக்கலாமே:
கல்யாண வீட்டு சூப்பரான உருளைக்கிழங்கு பொடிமாஸை ரொம்ப சிம்பிளா இப்படி செஞ்சு பாருங்க. டேஸ்ட் அட்டகாசமா இருக்கும்.

இப்பொழுது இரண்டிலிருந்து மூன்று நிமிடத்தில் நன்கு குழம்பு கொதித்து நுரைக்க ஆரம்பிக்கும். இந்த சமயத்தில் அடுப்பை அணைத்து விடுங்கள். ஒரு சிறு தாளிப்பு இதற்கு கொடுத்துக் கொள்ளுங்கள். தாளிப்பு கரண்டியை வைத்து தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு கடுகு, பொடித்த மிளகு, வர மிளகாய் ஒன்று, கருவேப்பிலை ஒரு கொத்து, கொஞ்சம் பெருங்காயத்தூள் தூவி தாளித்து மோருடன் சேர்த்து கலந்து விடுங்கள். அவ்வளவுதான், சூப்பரான சுவையில் மிளகு மோர் குழம்பு ரெசிபி நொடியில் தயார்!

- Advertisement -