1 நிமிடத்தில் வெள்ளையாக உங்களுக்கு ஆசையா? தேங்காய் பால் மாதிரி அப்படி ஒரு வெள்ளையான, கொள்ளை அழகைப் பெற இந்த 1 பொருள் போதும்.

face2
- Advertisement -

உடனடியாக ஒரே நிமிடத்தில் உங்களுடைய முகம் வெள்ளையாக மாற மிக மிக எளிமையான ஒரு அழகு குறிப்பு மற்றும் உங்களுடைய அழகை, வெண்மை நிறத்தை நிரந்தரமாக தக்க வைத்துக்கொள்ள இன்னொரு குறிப்பு, மொத்தமாக எளிமையான இரண்டு அழகு குறிப்பை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். அழகின் மீது அதிகம் ஆர்வம் இருப்பவர்கள் இந்த குறிப்பை தவறாமல் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக மாநிறமாக இருப்பவர்கள் தங்களுடைய நிறத்தை இன்னும் கொஞ்சம் கூடுதலாகிக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும் அல்லவா அவர்களுக்கு இந்த அழகு குறிப்பு ரொம்ப ரொம்ப பயனுள்ளதாக இருக்கும்.

அழகு குறிப்பு 1:
தினமும் இரண்டு வேலை இந்த குறிப்பை முயற்சி செய்து பார்க்கலாம். சோப்பு போட்டு கழுவாமலேயே உங்களுடைய நிறம் தேங்காய் பால் போல வெள்ளையாக மாறும். தேவையான அளவு தேங்காய் துருவலை மிக்ஸி ஜாரில் போடுங்க. மிகக் குறைந்த அளவில் தண்ணீர் ஊற்றி அரைத்து, பிழிந்து வடிகட்டி, இதை திக்கான பாலாக எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு சிறிய கிண்ணத்தில் அரிசி மாவு 1 ஸ்பூன், தேவையான அளவு எடுத்து வைத்திருக்கும் தேங்காய் பாலை ஊற்றி இதை பேஸ்ட் ஆக கலக்க வேண்டும். அரிசி மாவு தேங்காய் பால் சேர்த்த பேஸ்ட் இப்போது நமக்கு தயார்.

- Advertisement -

உங்களுடைய முகத்தை சுத்தமாக மேக்கப் இல்லாமல் கழுவி தண்ணீரை துடைத்து விடுங்கள். எடுத்து வைத்திருக்கும் ஃபேஸ் பேக்கை முகத்தில் போட்டு நன்றாக மசாஜ் செய்து அப்படியே ஐந்திலிருந்து ஏழு நிமிடம் விட்டு விடுங்கள். (தேவைப்பட்டால் கழுத்து கை கால்களில் கூட இந்த பேக்கை போடலாம்.) பிறகு குளிர்ந்த தண்ணீரில் கழுவுங்கள். உங்களுடைய முகம் வெள்ளையாகும். சருமம் அவ்வளவு சாப்டா இருக்கும்.

உங்களுக்கு பிம்பிள் இருந்தால் மசாஜ் செய்ய வேண்டாம். வெறும் பேக் மட்டும் போட்டு பத்து நிமிடம் கழித்து குளிர்ந்த தண்ணீரில் கழுவி விடுங்கள். இதில் நாம் தேங்காய் பால் சேர்ப்பதால் பிம்பிள் இருப்பவர்கள் பயன்படுத்தலாமா என்ற சந்தேகம் இருக்கும். தாராளமாக பயன்படுத்தலாம் அழுத்தி மசாஜ் செய்யக்கூடாது பிம்பிள் மேல் அவ்வளவுதான். ஒரு நாளைக்கு இரண்டு முறை தாராளமாக இந்த குறிப்பை முயற்சி செய்யுங்கள். முகம் பொலிவு பெறும்.

- Advertisement -

அழகு குறிப்பு 2:
முகம் ரொம்பவும் டல்லா இருக்கு. டக்குனு அடுத்த பத்து நிமிடத்தில் வெளியே கிளம்ப போறீங்க. என்ன செய்யணும். சோப்பு போட்டு முகத்தை கழுவாதீங்க. கொஞ்சம் சர்க்கரையை மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக பொடி செய்து கொள்ளுங்கள். ஒரு சிறிய கிண்ணத்தில் அரைத்த சர்க்கரை, தேவையான அளவு அலோவேரா ஜெல்லை போட்டு நன்றாக அடித்து கலக்க வேண்டும். அதாவது 1 ஸ்பூன் சர்க்கரை பொடி என்றால், 3 ஸ்பூன் அலோவேரா ஜெல் சரியாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: இது மட்டும் உங்க கையில இருந்தா போதும் உங்க வாழ்நாளில் பார்லர் செல்ல வேண்டிய அவசியமே இருக்காது. அழகுன்னா இப்படி இருக்கணும்னு உங்கள தான் சொல்லுவாங்கன்னா பாருங்களேன்.

தயார் செய்த இந்த பேஸ்டை உங்களுடைய முகம் முழுவதும் தடவி வட்ட வடிவில் இரண்டு நிமிடம் மசாஜ் செய்து, ஐந்து நிமிடம் கழித்து சோப்பு போடாமல் குளிர்ந்த தண்ணீரில் கழுவினால் உங்களுடைய முகம் ஐந்தே நிமிடத்தில் பளிச் பளிச். வெளியே அழகாக மேக்கப் போட்டுக் கொண்டு கிளம்பி விடலாம்.

இந்த இன்ஸ்டன்ட் பொலிவு சில மணி நேரம்தான் இருக்கும். மீண்டும் உங்களுடைய முகம் டல்லாக தான் செய்யும். அதற்காகத்தான் நிரந்தர பொலிவை பெற மேலே சொன்ன தேங்காய் பால் அழகு குறிப்பு பின்பற்ற வேண்டும். அழகுக்கே உங்களின் மீது பொறாமை வரும் அளவுக்கு நீங்க அழகாக மாறிடுவீங்க. மேல் சொன்ன இரண்டு அழகு குறிப்பும் அவ்வளவு அழகு. பிடிச்சிருந்தா ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -