இனிமே சேமியாவை இப்படி செய்யுங்க. யாருமே வேணாம்னு சொல்ல மாட்டாங்க. திணை, வரகு, கேழ்வரகு சேமியாவில் கூட இப்படி செய்யலாம்.

semiya
- Advertisement -

கடைகளில் இப்போதெல்லாம் வரகு சேமியா, தினை சேமியா என்று சிறுதானியத்தில் கூட சேமியா கிடைக்கின்றது அல்லவா. அந்த சேமியாவை வாங்கி ஒருமுறை இப்படி கமகமன்னு பிரியாணி போல செஞ்சு கொடுங்க. யாருமே வேணாம்னு சொல்ல மாட்டாங்க. எப்போதும் இட்லி தோசையை சாப்பிட்டு போர் அடிக்குதா. இந்த ரெசிபி உங்களுக்காக. உடலுக்கு ஆரோக்கியம், கூடவே நாவிற்கு ருசி தரும் ஒரு ரெசிபி இதோ உங்களுக்காக.

இன்னைக்கு நாம பார்க்கப் போறது வரகு சேமியா கிச்சடி. முதலில் கடையில் விற்கும் வரகு சேமியா ஒரு பாக்கெட் எடுத்துக் கொள்ளுங்கள். அகலமான ஒரு பாத்திரத்தில் பச்சை தண்ணீர் ஊற்றி இந்த சேமியாவை அந்த தண்ணீரில் மூழ்க வைக்க வேண்டும். 5 நிமிடங்கள் கழித்து தண்ணீரில் ஊறியதும் சேமியாவை எடுத்து இட்லி பானையில் வைத்து ஆவியில் ஐந்திலிருந்து ஏழு நிமிடங்கள் வேக வைத்துக் கொள்ளுங்கள். ஆவியில் வேக வைத்த இந்த சேமியா அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

அடுப்பில் ஒரு கடாயை வைத்து நெய் – 1 ஸ்பூன், எண்ணெய் – 1 ஸ்பூன், பட்டை – 1, ஏலக்காய் – 1, கிராம்பு – 2, பிரியாணி இலை – 1, மிகப் பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1, சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பச்சை மிளகாய் – 2 (குறுக்கே வெட்டியது), கருவேப்பிலை – 1 கொத்து, உப்பு தேவையான அளவு, இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன், சேர்த்து இந்த எல்லா பொருட்களையும் நன்றாக வதக்கி விடுங்கள்.

அடுத்து பொடியாக நறுக்கிய தக்காளி பழம் – 1, மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன், சேர்த்து தக்காளி பழத்தை நன்றாக வதக்கி விட வேண்டும். பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை புதினா சிறிதளவு சேர்த்து, மீண்டும் 2 நிமிடம் வதக்கினால் நமக்கு ஒரு தொக்கு கிடைத்திருக்கும். இதில் வேக வைத்திருக்கும் சேமியாவை போட்டு நன்றாக கலந்து விட வேண்டும். மசாலா பொருட்களில் சேமியா எல்லா இடத்திலும் படும்படி கலந்து விட்டு, அடுப்பை அணைத்துவிட்டு சுடச்சுட பரிமாறினால் அட்டகாசமான டிபன் தயார்.

- Advertisement -

தண்ணீர் ஊற்றி வேக வைத்து சேமியா குழைந்து போகும் என்ற பிரச்சனையெல்லாம் கிடையாது. மிகவும் ஆரோக்கியமான உணவு இது. இதே போல தான் ராகி சேமியா வரகு சேமியா திணை சேமியா என்று உங்கள் விருப்பம் போல எந்த சேமியாவை வேண்டும் என்றாலும் சமைத்துக் கொள்ளலாம்.

உங்களுக்கு இந்த ரெசிபி பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க. குழந்தைகள் கூட இதை விருப்பமாக சாப்பிடுவார்கள். காரத்திற்கு வெறும் பச்சை மிளகாய் மட்டும்தான். உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப அதை கூடவோ குறைக்கவும் சேர்த்து செய்யுங்கள். ருசிக்கு எந்த குறையும் இருக்காது. புதியதாக சமைப்பவர்கள் கூட இதை சுலபமாக சமைத்து விடலாம். தேவைப்பட்டால் இதில் பச்சை பட்டாணி கேரட் போன்ற காய்கறிகளை கூட சேர்த்துக் கொள்ளலாம் அதுவும் நம்முடைய விருப்பம் தான்.

- Advertisement -