கெட்டியான சுவையான புதினா துவையல் அதன் நிறம் மாறாமல் கொஞ்சம் கூட கசப்பு இல்லாமல் ருசியாக தயாரிப்பது எப்படி?

puthina-thuvaiyal
- Advertisement -

எல்லா வகையான கலவை சாதங்களுக்கும் மற்றும் டிபன் வகைகளுக்கும் தொட்டுக் கொள்ள ரொம்பவே ருசியாக இருக்கக் கூடிய இந்த புதினா துவையல் ஹோட்டல்களில் மட்டுமல்ல, நம்முடைய வீட்டிலும் கொஞ்சம் கூட கசப்பு தட்டாமல் சுவையாக தயாரிக்க முடியும். சுவையான புதினா துவையல் ரெசிபி எப்படி எளிதாக வீட்டிலேயே அரைப்பது? என்பதை தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் இனி தொடர்ந்து தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

தேவையான பொருட்கள்

சமையல் எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன், புதினா – ஒரு கட்டு, தேங்காய் துருவல் – அரை கப், உளுந்து – கால் கப், வரமிளகாய் – எட்டு, இஞ்சி – ஒரு சிறு துண்டு, பூண்டு – நாலு பற்கள், புளி – சிறு நெல்லிக்காய் அளவு, உப்பு – தேவையான அளவு. தாளிக்க: சமையல் எண்ணெய் – ஒரு டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், உளுந்து – அரை டீஸ்பூன்.

- Advertisement -

செய்முறை

புதினா துவையல் செய்வதற்கு முதலில் ஒரு கட்டு புதினா இலைகளை நன்கு தட்டி சுத்தம் செய்து கிள்ளி வைத்துக் கொள்ளுங்கள். பச்சையாக இருக்கும் இலைகளை மட்டும் பயன்படுத்தினால் ருசி அதிகமாக இருக்கும். பின் தேவையான மற்ற எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு சமையல் எண்ணெய் விட்டு லேசாக காய விடுங்கள். எண்ணெய் காய்ந்து வரும் பொழுது அரை கப் அளவிற்கு உளுந்தை அப்படியே சேர்க்க வேண்டும். வெள்ளை உளுந்து நீங்கள் அதிகமாக சேர்த்தால் தான் புதினா துவையல் ருசியாக கசப்பு தட்டாமல் இருக்கும்.

- Advertisement -

உளுந்து சேர்த்ததும் உங்கள் காரத்திற்கு தகுந்தார் போல வரமிளகாய்களை காம்பு நீக்கி சேர்க்க வேண்டும். பின்னர் ஒரு சிறு துண்டு இஞ்சி தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சேருங்கள். நாலு பல் பூண்டை தோல் உரித்து சேர்த்து வதக்குங்கள். இவை அனைத்தும் நன்கு வதங்கி வரும் பொழுது அரை கப் அளவிற்கு தேங்காய் துருவலை சேர்த்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.

பின்னர் சுத்தம் செய்து கழுவி வைத்துள்ள புதினா இலைகளை சேர்த்து சுருள வதக்குங்கள். இலைகள் சுருண்டதும் ஒரு சிறு நெல்லிக்காய் அளவிற்கு புளியை விதைகள், நார் எல்லாம் நீக்கி சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் அடுப்பை அணைத்து ஆற விட்டு விடுங்கள். ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து ரொம்பவும் நைசாக அல்லாமல் கொரகொரப்பாக கெட்டியாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் இதற்கு ஒரு சிறு தாளிப்பு கொடுக்க வேண்டும்.

தாளிப்பு கரண்டி ஒன்றை வைத்து எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் உளுந்து சேர்த்து பொன்னிறமாக வறுத்து சட்னியில் சேர்த்து கலந்து வைத்தால் சூப்பரான புதினா துவையல் ரெடி! இதை கூடுதல் தண்ணீர் சேர்த்து செய்தால் சட்னி போல இருக்கும். இட்லி, தோசை, கலவை சாதங்களுக்கு தொட்டுக் கொள்ள சூப்பராக இருக்கும் இந்த புதினா சட்னி ரெசிபியை இதே போல நீங்களும் ட்ரை பண்ணி அசத்துங்க.

- Advertisement -