முகம் பார்க்கும் கண்ணாடி எங்க வேணாலும் வெச்சுக்க கூடாது! அப்புறம் இதெல்லாம் தான் நடக்கும்!

mirror-bed-cash

முந்தைய காலத்தில் நம் முன்னோர்கள் கடைப்பிடித்து வந்த எந்த நாகரீகமும் தற்போதைய நவீன காலத்தில் அவசரமாக பணத்தை ஈட்ட ஓடிக் கொண்டிருக்கும் சூழலில் சில நாகரீகங்களை அறியாமையின் காரணமாக கடைபிடிப்பது இல்லை. இதை தெரிந்து செய்தாலும், தெரியாமல் செய்தாலும் அதனுடைய பாதிப்புகள் நம்மை தான் சேரும். அதில் முகம் பார்க்கும் கண்ணாடி என்பது செல்வ வளத்தை பன்மடங்கு அதிகரிக்க கூடிய வசிய தன்மை கொண்டது. அதை நம் இஷ்டத்திற்கு எப்படி வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் அமைத்துக் கொள்ளக் கூடாது என்பது ஒரு விதி உண்டு. அதைப் பற்றிய விரிவான அலசல்கள் இந்த பதிவின் மூலம் அறிந்து கொள்வோம் வாருங்கள்.

mirror

முகம் பார்க்கும் கண்ணாடி சுக்கிரனுக்கு உரிய அம்சம் பொருந்தியது. கண்ணாடி நம்முடைய பிம்பத்தை எப்படி இரட்டிப்பாக்க காட்டுகிறதோ! அதே போல் அதை சரியாக பயன்படுத்தினால் நம் பணத்தையும் இரட்டிப்பாக்கும், செல்வ வளத்தையும் இரு மடங்காக பெருக்கி தரும். தவறாக பயன்படுத்தினால் அதன் பின்விளைவுகளும் தவறாகவே இருக்கும். அது எப்படி சரி செய்து கொள்வது என்பதை பார்ப்போம்.

பொதுவாக இப்போது அனைவரது வீட்டிலும் பீரோ என்பது கட்டாயம் இருக்கும். முந்தைய காலத்தில் பீரோவை படுக்கை அறையில் வைக்க மாட்டார்கள். ஆனால் இப்போது இருக்கும் இடப் பற்றாக்குறையால் எல்லோர் வீட்டிலும் பீரோ படுக்கை அறையில் தான் இருக்கின்றன. பணம் வைக்கும் பீரோ வடக்கு அல்லது கிழக்கு திசையில் பார்த்தபடி அமைப்பது நல்லது. அதில் முகம் பார்க்கும் கண்ணாடி பொருத்தியிருந்தால் அதை திரை போட்டு மறைத்து வைத்திருக்க வேண்டும். கணவன் மனைவி படுத்திருக்கும் அறையில் முகம் பார்க்கும் கண்ணாடி படுக்கையை நோக்கி கட்டாயம் இருக்கக் கூடாது. இப்போதெல்லாம் சிலர் படுக்கும் கட்டிலிலேயே கண்ணாடி வைத்து வாங்குகிறார்கள். இது முற்றிலும் தவறான செயலாகும்.

bedroom

தம்பதியர் படுக்கை அறையில் அந்த படுக்கை தெரியும்படி முகக் கண்ணாடி இருப்பது என்பது அவ்வளவு சரியானது அல்ல. அப்படி இருக்கும் பொழுது தூங்கும் கட்டிலில் கண்ணாடி அமைத்திருப்பது மிகவும் தவறாகும். கட்டிலில் அமைத்திருக்கும் கண்ணாடியோ அல்லது பீரோவில் இருக்கும் கண்ணாடியோ எதுவானாலும் நீங்கள் திரை போட்டு மறைத்து வைப்பது தான் நல்லது. அப்படி அல்லாமல் நாம் படுத்திருக்கும் பிம்பம் கண்ணாடியில் தெரியுமாறு அமைத்து இருந்தால், கணவன் மனைவிக்குள் அடிக்கடி பிரச்சினைகள் உருவாகலாம். இருவரின் எண்ணங்களும், சிந்தனைகளும் தெளிவாக இருக்காது. தேவையற்ற சிந்தனைகளும், எண்ணங்களும் யாருக்காவது ஒருவருக்கு ஏற்படலாம்.

- Advertisement -

முகம் பார்க்கும் கண்ணாடியை சுக்கிரனுக்கு இணையாக பார்ப்பதால் செல்வ வளத்தையும், கணவன்-மனைவி அன்பையும் இது குறிக்கிறது. பணம் வைக்கும் பெட்டி அல்லது நகை வைக்கும் பெட்டி கண்ணாடியுடன் அமைந்திருப்பது யோகம் தரும் என்பார்கள். கண்ணாடியில் நீங்கள் வைத்திருக்கும் பணம் அல்லது நகை தெரிய வேண்டும். ஒவ்வொரு முறை மூடி திறக்கும் போதும் கண்ணாடியில் நீங்கள் வைத்திருக்கும் பணம், நகை போன்றவற்றை பார்ப்பதால் அவைகள் இரட்டிப்பாகும்.

cash-box-mirror

எப்போதும் பணம் வைத்திருக்கும் இடத்தில் ஒரு சிறிய டப்பாவில் கல் உப்பை போட்டு பணத்தின் மேல் வைக்க வேண்டும். இது பணத்தை ஈர்த்து தரும் சக்தி படைத்தது. பண ஈர்ப்பு விதிகளில் சிலவற்றை நாம் முறையாக பின்பற்றினால் நம்முடைய செல்வ வளம் பெருகும் என்பது பலரின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. நீங்களும் ஒருமுறை இதுபோல் முயற்சி செய்து பயன் அடையுங்கள்.

இதையும் படிக்கலாமே
அஞ்சறைப்பெட்டியில் ‘காசை’ மட்டும் ஒளித்து வைத்தால் போதுமா? அஞ்சறைப்பெட்டியும் அதன் ரகசியமும்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.