இப்படி மட்டும் ஒரு வாட்டி செஞ்சு பாருங்களேன்! போதும் போதும் என்று சொன்னாலும் உங்களுடைய வீட்டில் பணமும் தங்கமும் வந்து சேர்த்துக் கொண்டே இருக்கும்.

mirror-poojai

பணமும் நகையும் எவ்வளவு தான் வந்தாலும் மனிதர்களுடைய மனது எப்போதுமே போதும் போதும் என்று சொல்லாது, இல்லையா? இதுதான் இயல்பு. இருப்பினும் நம்முடைய தேவைக்கு அதிகமாக பணம் காசை, நமக்கு அடுத்து வரக்கூடிய இரண்டு மூன்று தலைமுறைகளுக்கு சேர்த்து வைப்பதில் எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை. முடிந்தவரை உங்களுடைய பிள்ளைகளுக்கு தேவையான சொத்து சுகங்களை சேர்த்து வையுங்கள். அதுவே போதும். அதற்கு மீறி உங்களுக்கு வருமானம் இருந்தால், முடிந்தவரை ஏழை எளியவர்களுக்கு உதவிசெய்யும் பழக்கத்தை கொண்டு வாருங்கள். அந்த பழக்கமே, அந்த எண்ணமே, உங்களுக்கு போதும் போதும் என்ற அளவிற்கு செல்வ வளத்தை கொடுக்கும் என்ற நம்பிக்கையோடு இந்த பதிவினை தொடரலாம்.

cash-box-mirror

நேர்மறை ஆற்றலை ஈர்க்கக்கூடிய, நல்லதே பிரதிபலிக்கக்கூடிய, முகம் பார்க்கும் கண்ணாடியை பற்றி தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். கண்ணாடிக்கு இயற்கையாகவே உள்ள சுபாவம் என்ன? தனக்குள் இருக்கும் நேர்மறை ஆற்றலை எப்போதுமே அது வெளியில் பிரதிபலித்துக் கொண்டிருக்கும். அதே போல் தன்னை சுற்றி இருக்கக் கூடிய எதிர்மறை ஆற்றலை, கண்திருஷ்டியை தனக்குள் கிரகித்துக்கொள்ளும் சக்தியும் இந்த கண்ணாடிக்கு உண்டு.

பொதுவாகவே கோவில்களில் இறைவனுக்கு நேராக இறைவனின் பிரதி பிம்பம் தெரியும் படி, கண்ணாடி வைத்திருப்பதை நாம் பார்த்திருக்கின்றோம். சில குபேரர் கோவிலில் குபேரரை சுற்றி முழுவதுமாக கண்ணாடியால் அலங்காரம் செய்து வைத்திருப்பதையும் நாம் பார்த்திருப்போம். நிறைய பூஜை புனஸ்காரங்களில் சிறிய கண்ணாடியை இறைவன் முன்பு வைத்து வழிபாடு செய்வதையும் நாம் பார்த்திருப்போம்.

mirror

இவ்வாறாக ஆன்மீக ரீதியான நிறைய விஷயங்களில் கண்ணாடிக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. இதற்கு காரணம் என்ன? இறை சக்தியை அந்த கண்ணாடி தனக்குள் கிரகித்துக் கொண்டு, அதனுடைய நேர்மறை ஆற்றலை, இன்னும் பெரியதாக அந்த இடத்தில் வெளிப்படுத்தும் என்பதால் தான்.

- Advertisement -

இதற்காகத்தான் நகைப் பெட்டியில் கூட கண்ணாடியை வைத்திருப்பார்கள். பணம் வைக்கும் பர்சில் கூட கண்ணாடியை வைத்திருக்கிறார்கள். சரி, நம்முடைய வீட்டில் பணம் காசு தங்கம் எல்லாம் போதும் போதும் என்ற அளவிற்கு வரவேண்டுமென்றால் இந்த கண்ணாடியை எப்படி வைப்பது?

Annapoorani

உங்களுடைய வீட்டில் பூஜை அறையில் அன்னபூரணியின் சிலை இருந்தால் அந்த அன்னபூரணியின் சிலை கண்ணாடியில் பிரதிபலிப்பது போல வைக்கலாம். அதாவது அன்னபூரணியின் சிலைக்கு பின்பக்கமும் கண்ணாடியை வைக்கலாம். முன்பக்கமும் கண்ணாடியை வைக்கலாம். இதனால் உங்களுடைய வீட்டில் தானியத்திற்கு ஒருபோதும் குறைவு இருக்காது. ‌அடுத்தபடியாக உங்களுடைய வீட்டில் குபேரன் சிலை இருந்தால் அந்த குபேரன் சிலை கண்ணாடியில் பிரதிபலிப்பது போல ஒரு கண்ணாடியை வைப்பது நல்லது.

mirro

சமையலறையில் இருக்க கூடிய தானிய வகைகள், அரிசி போன்ற பொருட்களை ஒரு சிறிய பாத்திரத்தில் போட்டு, அதில் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து அந்த தானியம் கண்ணாடியில் பிரதிபலிக்கும் படி வைக்கலாம். உங்கள் வீட்டில் ஒரு குண்டுமணி தங்கம் தான் உள்ளதா? அந்தத் தங்கத்தை கண்ணாடியில் பிரதிபலிக்கும் படி வைக்கலாம்.

guberar2

இப்படியாக உங்களுடைய வீட்டின் எந்தப் பொருள் கண்ணாடியில் பிரதிபலித்த கொண்டே இருக்கின்றதோ, அந்த பொருளுக்கு வாழ்நாள் முழுவதும் கஷ்டம் வராமல் இருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ள ஆன்மீக ரீதியான விஷயம் தான் இது. முழுமனதோடு நம்பி உங்களுடைய வீட்டில் ஏதாவது ஒரு பொருளை கண்ணாடியின் முன் வைத்து பாருங்கள். அதன் மூலம் உங்களுக்கு நன்மைகள் தெரிந்தால், பல கண்ணாடிகளை வாங்கி உங்கள் வீட்டில் வைத்தாலும் தவறே கிடையாது என்று கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.