2021 புத்தாண்டு பலன்கள் – மிதுன ராசி

new-year-mithunam

2020 முடியும் நிலையில் மிதுன ராசிக்கு வருகின்ற 2021 ஆம் ஆண்டின் குரு பெயர்ச்சிக்கு பிறகு குரு பகவான் 9-ஆம் வீட்டில் அமர்ந்திருப்பார். சனிபகவான் எட்டாவது வீட்டிலும், ராகு-கேது ஆறு மற்றும் இரண்டாவது வீட்டிலும் அமர்ந்திருப்பார்கள். செவ்வாய் பகவான் நான்காவது வீட்டில் இருந்து ஆண்டின் இறுதியில் ஐந்தாவது வீட்டிற்கு பெயர்ச்சி ஆகிறார். இவ்வாறு இருக்கும் கிரக நிலையில் மிதுன ராசிக்காரர்கள் நிறையவே ஏற்ற இறக்கங்களை சந்திப்பார்கள்.

Mithunam Rasi

குடும்பம்:
குடும்ப வாழ்க்கையைப் பொறுத்தவரை மிதுன ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கப் பெறும். உற்றார், உறவினர்களின் ஆதரவு சிறப்பாக அமைய இருக்கிறது. இதுவரை பிரிந்து இருந்த குடும்பங்கள் கூட ஒன்று சேர்வதற்கான அற்புதமான வாய்ப்பாக இருக்கும். எதிர்பாராத நல்ல நிகழ்வுகள் எல்லாம் 2021 ஆம் ஆண்டில் நிச்சயம் நடைபெறும். தடைப்பட்டுக் கொண்டிருந்த திருமண யோகங்களும் கைகூடி வரும். காதல் வாழ்க்கையில் இருப்பவர்களும் திருமண பந்தத்தில் இணைவார்கள். கணவன் மனைவிக்கு இடையே இருந்த ஒற்றுமைக் குறைவு தளர்வதற்கு சந்தர்ப்பங்கள் அமையும். ஈகோ பார்க்காமல் பரஸ்பர அன்பை பரிமாறிக் கொள்வது மன அமைதியைக் கொடுக்கும்.

வியாபாரம் மற்றும் தொழில்:
தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய கடினமான உழைப்பே வெற்றிக்கு காரணமாக அமையப் போகின்றது. நீங்கள் எந்த அளவிற்கு உங்களுடைய உழைப்பை மூலதனமாக போடுகிறீர்களோ! அதே அளவிற்கு வெற்றியும் நிச்சயமாக கிடைக்கப் போகிறது. வெற்றியை நோக்கிய பயணத்தில் இருக்கும் மிதுன ராசிக்காரர்கள் சோர்வடையாமல் வீர நடை போடுவது நன்மைகளை கொடுக்கும். பொருளாதாரத்தில் இருக்கும் ஏற்ற இறக்கங்களை சீர் செய்ய புதிய யுத்திகளை கையாள்வது முன்னேற்றத்தை கொடுக்கும்.

astrology

உத்தியோகம்:
உத்தியோகத்தில் இருக்கும் மிதுன ராசிக்காரர்கள் ஏழாவது வீட்டில் அமரும் புத பகவானால் சாதகமான பலன்களை பெறுவீர்கள். ஆண்டின் தொடக்கத்தில் நீங்கள் நிறைய பிரச்சினைகளை சந்திப்பீர்கள். ஆனால் இறுதியில் உங்களுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். சக பணியாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஏற்றத்தை பெறலாம். உங்களுடைய திறமையை நிரூபிக்க வேண்டிய காலமாக அமையப் போகிறது. முன்கோபத்தை தவிர்த்து, சாதுரியமாக செயல்பட்டால் வெற்றி உங்களுக்குத் தான்.

- Advertisement -

பொருளாதாரம்:
பொருளாதார ரீதியான ஏற்ற இறக்கங்களை சமாளிக்க சற்று போராட வேண்டியிருக்கும். இருப்பினும் நீங்கள் அதனை திறம்பட கையாளுவீர்கள். குடும்ப தேவைகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு வருமானம் சிறப்பாக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் மிகவும் நல்லது. கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயத்தில் மிகவும் கவனமுடன் இருப்பது உத்தமம். ஒரு முறைக்கு பலமுறை ஆலோசித்து பின் முடிவெடுப்பது நல்லது. அவசர முடிவுகளால் ஆபத்தை சந்திக்கலாம்.

money

பெண்களுக்கு:
மிதுன ராசியில் பிறந்த பெண்கள் குடும்பத்தை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கு போராடுவார்கள். உணவு கட்டுப்பாடு விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தினால் சுறுசுறுப்புடன் செயலாற்ற முடியும். உங்களுடைய பலம் எது? பலவீனம் எது? என்பதை நீங்கள் உணரும் காலமாக அமையப் போகிறது. தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.

navagragha-mandhiram

பரிகாரம்:
தோஷ நிவர்த்திக்கு நவகிரக பரிகாரத்தை செய்வது நல்ல பலன் தரும். வெள்ளிக்கிழமை தோறும் மகாலட்சுமி பூஜை செய்து வர பணவரவு சிறப்பாக இருக்கும். ஏழை எளிய குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் வாங்கிக் கொடுத்தால் பாவங்கள் நீங்கி புண்ணியம் சேரும்.

வரவிருக்கும் 2021 ஆம் ஆண்டு மிதுன ராசிக்காரர்கள் ஆகிய உங்களுக்கு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

இதையும் படிக்கலாமே
2021 புத்தாண்டு பலன்கள் – ரிஷபம்

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்