உங்கள் முகத்தில் இருக்கும் மச்சம் தரும் அதிர்ஷ்டம் என்னனு நீங்களும் தெரிஞ்சிக்க வேண்டாமா?

mole-astro

ஆயக்கலைகள் 64 இருப்பதாக கூறப்படுகிறது. அதில் ஜோதிட சாஸ்திரமும் ஒன்று. ஜோதிட சாஸ்திரம் என்பது தனிப்பட்ட சாத்திரம் அல்ல. அதற்கு பல்வேறு கிளைகள் உண்டு. அதில் ஒன்று தான் மச்ச சாஸ்திரம் என்பது. இதை சாமுத்திரிகா லட்சணம் பார்க்கவும், அங்க லட்சணங்கள் கணிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. ஒருவர் உடலமைப்பை கொண்டு அவர்களுடைய வாழ்க்கை இப்படித்தான் இருக்கும் என்று கணித்து கூறப்படுவதே அங்க லட்சண சாஸ்திரம். அதில் முகத்தில் ஒருவருக்கு எந்த இடத்தில் மச்சம் இருந்தால் அதிர்ஷ்டம் உண்டாகும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

mole-on-forehead

நெற்றியில் மச்சம் இருந்தால் அவர்கள் ஐஸ்வர்யத்துடன் இருப்பார்கள். மிகவும் சாந்தமானவர்களாக, மற்றவர்களை எளிதில் கவரும் வண்ணம் அவர்களுடைய பேச்சு இனிமையாக இருக்கும். நெற்றியின் வலது புறத்தில் மச்சம் இருப்பவர்களுக்கு அடிக்கடி ஆரோக்கிய பிரச்சனைகள் வந்து கொண்டிருக்கும் என்பார்கள். அதுவே நெற்றியின் இடது புறத்தில் மச்சம் இருந்தால் அவர்கள் சிறந்த தொழில் செய்பவர்களாக இருப்பார்கள். தொழில் சார்ந்த விஷயத்தில் அதிக ஈடுபாடு கொண்டிருப்பார்கள்.

மூக்கில் வலது புறம் மச்சம் இருந்தால் நிறைய யோசிப்பவர்களாக இருப்பார்கள். எப்போதும் எதைப் பற்றியாவது யோசித்துக் கொண்டே இருப்பார்கள். மிகுந்த திறமை இவர்களிடம் இருக்கும் மிகப்பெரிய பலம். அதுவே மூக்கின் இடது புறத்தில் மச்சம் இருந்தால் அதிகம் செலவழிப்பவர்களாக இருப்பார்கள். அவர்கள் இன்றைக்கு நாம் மகிழ்ச்சியாக இருக்கிறோமா? என்பதை மட்டுமே பார்க்கக் கூடியவர்கள். நாளைய பற்றிய சிந்தனையும், அக்கறையும் இவர்களிடத்தில் இருப்பதில்லை.

mole-on-nose

புருவத்தில் மச்சம் இருந்தால் அவர்கள் எதையும் வெளிப்படையாக பேசக்கூடியவர்களாக இருக்க மாட்டார்கள். யோசித்து யோசித்து பேசலாமா? வேண்டாமா? என்று தான் இவர்கள் பேசுவார்கள். இரு புருவங்களுக்கு இடையில் மச்சம் இருந்தால் அனைத்து விஷயங்களையும் கற்கக்கூடிய ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். தெளிவான சிந்தனை இவர்களிடம் இருக்கும். முற்போக்கு சிந்தனை உடையவர்களாக விளங்குவார்கள்.

- Advertisement -

வலது கண்ணில் மச்சம் இருப்பவர்களுக்கு முக்கியமான ஒரு குணம் உண்டு. இவர்கள் எந்த ஒரு விஷயத்திலும் வெற்றி அடையும் வரை ஓய மாட்டார்கள். வெற்றியை குறிக்கோளாக கொண்டு ஒரே மனநிலையில் பயணிப்பவர்களாக இருப்பார்கள். இடது கண்ணில் மச்சம் இருந்தால் எடுக்கும் காரியத்தில் முதலில் தோல்வியைத்தான் சந்திப்பார்கள். மனம் தளராமல் மீண்டும் முயற்சித்து பின் வெற்றி அடைவார்கள்.

mole-on-eyes

வலது கண்ணுக்கு மேல் புருவத்திற்கு கீழ் மச்சம் இருந்தால் அவர்கள் முயற்சி செய்யாமலேயே அதிர்ஷ்டம் அவர்களைத் தேடி வரும். அதுவே இடதுபுறமாக இருந்தால் முயற்சி செய்தால் நிச்சயம் உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும். எதிலும் சோர்வுறாமல் முயற்சி செய்து பார்ப்பது உங்களுக்கு பேரதிர்ஷ்டத்தை கொண்டு வந்து தரும்.

mole-on-face

வலது கன்னத்தில் மச்சம் இருந்தால் அதிர்ஷ்டம் திடீரென உங்கள் வாழ்வில் வரும். எப்போது வரும் என்பது உங்களுக்கு தெரியாது. ஆனால் நிச்சயமாக அதிர்ஷ்டக்காற்று உங்களை நோக்கி வீசும். இடது கன்னத்தில் மச்சம் இருந்தால் சிக்கனம் இல்லாமல் செலவு செய்யக் கூடியவர்களாக இருப்பார்கள். எப்போதும் இவர்களிடத்தில் பணகஷ்டம் இருக்கும். இரு மூக்கு துவாரங்கள் இடையில் உதட்டிற்கு மேல் மச்சம் இருந்தால் அவர்கள் கலை சார்ந்த துறைகளில் மிகப்பெரிய அளவிற்கு வளர்ச்சியை அடைவார்கள். நிறைய போராட்டத்தை சந்தித்தாலும் இறுதியில் இவர்களுக்குத் தான் வெற்றி கிட்டும்.

mole-on-chin

வலதுபுற தாடையில் மச்சம் இருந்தால் பெற்றோர்கள் வழியில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும் என்பார்கள். அதுவே இடது புறத்தில் இருந்தால் எவ்வளவு சொத்துக்கள் இருந்தாலும் வீண் விரயம் ஆகிக்கொண்டே இருக்கும் என்பார்கள். தாடையில் நடுப்பாகத்தில் இருந்தால் அவர்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும். திடீர் தனவரவு அவ்வபோது கிடைக்கப்பெறும் யோகமுண்டு.

mole-on-ear

வலது காதின் பின்புறத்தில் மச்சம் இருப்பவர்கள் யோகக்காரர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு எதிர்பாராத வகையில் அதிர்ஷ்டங்கள் வந்து சேரும். மத்திம வயதில் இவர்கள் எதிர்பார்த்த வாழ்க்கையை வாழ முடியும். அதுவே இடது காதின் பின்புறத்தில் மச்சம் இருந்தால் அதுவும் ஒரு அதிர்ஷ்டம் தான். எந்த ஒரு விஷயத்திலும் வாய்ப்புகள் இவரைத் தேடி வரும். ஒரு வாய்ப்பை தவற விட்டாலும் இன்னொரு வாய்ப்பு வாசலிலேயே காத்துக் கொண்டிருக்கும் யோகமுண்டு.

இதையும் படிக்கலாமே
‘ராசிபலன்’ சில சமயங்களில் ஏன் பலிப்பதில்லை? என்று நீங்களும் தெரிஞ்சுக்கணுமா?

இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.