வீட்டில் மணி பிளாண்ட் வளர்ப்பவர்கள் இந்த ஒரு செடியையும் உடன் வளர்த்துப் பாருங்கள் அதிர்ஷ்ட மழை பொழியுமாம்! மணி பிளாண்ட் சீக்ரட்ஸ் தெரிஞ்சிக்கணுமா?

money-plant
- Advertisement -

எல்லோருடைய வீட்டிலும் அதிர்ஷ்டத்திற்கு வளர்க்கப்படும் இந்த மணிபிளான்ட் செடி உண்மையிலேயே அதிர்ஷ்டத்தை கொடுக்குமா? மணி பிளான்ட் உடன் வளர்க்க வேண்டிய இந்த செடியை மணி பிளான்ட் உடன் சேர்த்து வளர்ப்பதால் கிடைக்கக் கூடிய நன்மைகள் என்ன? மணி பிளான்ட் வளர்ப்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம் என்னென்ன? என்பது போன்ற அரிய தகவல்களைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

மணி பிளாண்ட் செடியை வளர்ப்பவர்கள் அதை கண்ணாடி போன்ற தெரியும் படியான கலன்களில் வளர்ப்பது அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். மணி பிளாண்ட் செடியின் வேர் பகுதி வெளியில் இருப்பவர்களுக்கு தெரியும் படியாக இருந்தால் அது அதிர்ஷ்டமான செடியாக மாறுகிறது. வெள்ளை, வெளிர் நீலம் மற்றும் பச்சை நிறத்தில் இருக்கக் கூடிய பாட்டில்கள் போன்றவற்றில் வளர்ப்பது அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் என்கிற நம்பிக்கை நிலவுகிறது.

- Advertisement -

மணி பிளான்ட் செடியை தொட்டியில் வைத்து வளர்ப்பதை விட, பாட்டில்கள் அல்லது பிளாஸ்டிக் டப்பாக்கள் போன்றவற்றில் வைத்து வளர்த்தால் அதிர்ஷ்ட மழை பொழியும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. மணி பிளாண்ட்டை பொறுத்தவரை அதற்கு அதிக அளவு சூரிய ஒளி தேவை இல்லை, எனவே வீட்டிற்குள் கூட வளரக் கூடிய இந்த அதிர்ஷ்ட செடிக்கு பல்வேறு வதந்திகளும், பல்வேறு கட்டுக்கதைகளும் சொல்லப்படுவது உண்டு.

மேற்கத்திய நாடுகளில் அதிகம் வளர்க்கப்படும் இந்த மணி பிளான்ட் இந்தியாவிலும் அதிக அளவில் வீட்டில் வைத்து வளர்க்கப்படுகிறது. மணி பிளான்ட் அதிர்ஷ்டத்தை கொடுக்கா விட்டாலும் அழகை அள்ளிக் கொடுக்கிறது. மணி பிளாண்ட் வீட்டில் இருக்கும் பொழுது நம் மனதில் ஒருவித மன உற்சாகம் தொற்றிக் கொள்கிறது என்னவோ உண்மை தான். காலையில் எழுந்ததும் முதலில் பச்சையாக இருக்கும் இலைகளை பார்த்து விழித்தால் அன்றைய நாள் முழுவதும் நமக்கு செழிப்பாக இருக்கும் என்கிற நம்பிக்கையும் உண்டு. அந்த வகையில் மணி பிளாண்ட்டை எழுந்தவுடன் பார்த்தால் நமக்கு அன்றைய நாள் அதிர்ஷ்டம் அடிக்கும், நினைத்த காரியம் நடக்கும் என்கிற கருத்துக்களும் உண்டு.

- Advertisement -

இவ்வகையில் மணி பிளாண்ட் வளர்ப்பவர்கள் அதிலிருக்கும் தண்ணீரை அடிக்கடி மாற்றி விட வேண்டும். நீண்ட நாட்கள் அதே தண்ணீரில் நுண்ணுயிர்கள் பெருகினால் மணி பிளாண்ட் வளர்ச்சி தடைபட்டு விடும். எனவே அடிக்கடி மணி பிளான்ட் வளர்க்கும் பாட்டிலில் இருந்து தண்ணீரை மாற்றிக் கொண்டே வாருங்கள். ஒருசில செடிகளை தனியாக வளர்க்க கூடாது என்று கூறுவார்கள். அந்த வகையில் மணி பிளான்ட் உடன் சேர்த்து வளர்க்க வேண்டிய ஒரு செடி என்றால் அது வெற்றிலை ஆகும். வெற்றிலை கொடியை மணி பிளாண்ட் உடன் சேர்த்து வைத்து வளர்த்து வந்தால் நமக்கு அதிர்ஷ்ட மழை பொழியும் என்கிற நம்பிக்கை நிலவுகிறது.

வெற்றிலைக் கொடி ஒன்றை எடுத்து வந்து மணி பிளான்ட் வைத்திருக்கும் இடத்திற்கு அருகே நட்டு வைத்து விடுங்கள். வெற்றிலையும் சேர்ந்து வரும் போது நமக்கு அதிர்ஷ்டம் பொழியும் என்பது கூற்றாகும். எனவே மணி பிளாண்ட் செடியுடன், வெற்றிலை கொடியையும் வளர்த்து வாருங்கள். அது போல வெற்றிலை கொடியை எப்போதும் தனியாக வளர்க்கக்கூடாது எனவே இது போல மணி பிளாண்ட் உடன் சேர்த்து வெற்றிலையை வளர்க்கும் பொழுது நமக்கு நிறையவே நன்மைகள் நடக்கும். குறிப்பாக அலுவலகங்களில் இது போல் வளர்ப்பது முன்னேற்றத்தை தரும்.

- Advertisement -