உங்க வீட்டு உண்டியலில் பணம் நிரம்பி வழிய வேண்டுமா? சேமிப்பை இரட்டிப்பாக்க இந்த 4 பொருள் போதுமே!

- Advertisement -

சிறியவர்கள் முதல், பெரியவர்கள் வரை, எல்லோருக்குமே உண்டியலில் காசு சேர்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்யும். நம்மில் பலபேர், ஆர்வத்தோடு புதிய உண்டியலை வாங்கி வைப்போம். ஆனால், அதில் ஆரம்ப காலத்தில் சில்லறைகளை போட்டு சேர்ப்போம். போகப்போக அதில் சேமிப்பு குறைய ஆரம்பிக்கும். நாம் வாங்கிய உண்டியலில் சேமிப்பு இரட்டிப்பாக வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்? அந்த உண்டியலை ராசியான உண்டியலாக மாற்ற, என்ன பரிகாரம் செய்யலாம் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

hundi

முதலில், நீங்கள் உண்டியலை வாங்கும்போது, உங்கள் மனதில் ஏதாவது ஒரு குறிக்கோளை வைத்துக் கொண்டு, உண்டியலை வாங்க வேண்டும். அந்தக் குறிக்கோள் சென்டிமென்டாக இருக்கவேண்டும். உங்கள் குழந்தைகளுக்கு தங்க நகை வாங்க, மேல்படிப்பு படிக்க வைப்பதற்காக, இப்படி உங்களுக்குப் பிடித்தவர்களுக்கு, பணத்தை சேர்ப்பதற்காக உண்டியலை வாங்குங்கள்.

- Advertisement -

எப்போதுமே அடுத்தவர்களுடைய நலனுக்காக, நல்லெண்ணத்தோடு, நாம் செய்யும் எந்த ஒரு செயல்பாடும் தோல்வியில் போய் முடியாது. அதற்காக, ‘பணத்தை பக்கத்து வீட்டுக்காரர்களுக்காக சேமிக்க முடியுமா?’என்று கேட்டு விடாதீர்கள்!. உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்காக தான்! உங்கள் கையில் வரும் பணத்தை, உங்களுக்காக செலவு செய்து கொள்ளாமல், உங்களுடைய தேவைகளை மட்டுமே பயன்படுத்திக் கொள்ளாமல், அதை உங்களுடைய பிள்ளைகளுக்கு, உங்களுடைய கணவருக்கு என்று சேமித்து வைத்துப் பாருங்கள்! கட்டாயம் அந்த இடத்தில் பண சேமிப்பு இரட்டிப்பாகும். நம்பிக்கை இருந்தால் இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணி பாருங்க!

money

‘அவரவர்கென்று பணத்தை சேமித்து வைத்துக் கொள்ளக்கூடாது’, என்பது இதற்கு அர்த்தமல்ல! நாம் சம்பாதிக்கும் தொகையாக இருந்தாலும், நம் கை செலவுக்கு, நம் கணவர் கொடுத்துவரும் தொகையாக இருந்தாலும், அதில், பிறருடைய நலனையும் சேர்த்து, நாம் எண்ண வேண்டும், என்றுதான் இந்த இடத்தில் சொல்லப்பட்டுள்ளது. ‘சில பேர் பணத்தை இப்படி சேமிப்பார்கள்!’ அதாவது, தனக்கு நகை வாங்கிக் கொள்ள வேண்டும். தனக்கு புடவை வாங்கிக் கொள்ள வேண்டும். தனக்கு அழகுசாதனப் பொருட்களை வாங்கிக்கொள்ள வேண்டும். என்று, சேர்த்து சேர்த்து வைப்பார்கள். ‘அதாவது, அத்தியாவசியத் தேவையை பூர்த்தி ஆகாத பட்சத்தில், ஆடம்பரத்துக்காக சேர்த்து வைக்கக் கூடிய பணத்தொகை!’ இப்படி சேர்த்து வைக்கக் கூடிய பணம் கட்டாயம் வீண்விரையம் தான் ஆகும்.

- Advertisement -

சரி. நீங்கள் வாங்கும் அந்த உண்டியலானது மண் உண்டியல் ஆக இருந்தால், மிகவும் சிறப்பானது.  மரத்தினாலான உண்டியலை வாங்கி உங்களது காசை சேமித்து வரலாம். இது இரண்டுமே முடியவில்லை என்றாலும் பரவாயில்லை! எவர்சில்வர் உடலாக இருந்தாலும் சரி. பிளாஸ்டிக் உண்டியலாக இருந்தாலும் சரி. அது அவரவர் இஷ்டம். ஆனால், புதன்கிழமை காலை, பிரம்ம முகூர்த்த வேளையில், இந்த 4 பொருட்களை முதலில் உண்டியலில் சேர்த்துவிட வேண்டும். அதன் பின்பு காசு சேர்க்க தொடங்குங்கள்.

vendayam

முதலில், புதன் பகவானை நினைத்து மூன்று வெந்தயல்தை உண்டியலில் போட்டு விடுங்கள். இரண்டாவதாக மகாலட்சுமி நினைத்துக்கொண்டு பச்சைக் கற்பூரத்தையும், ஒரேஒரு ஏலக்காயையும் அந்த உண்டியலில் போடுங்கள். இந்தப் பணம் சுபச்செலவுக்கு மட்டுமே செலவாக வேண்டும் என்று நினைத்து, 2 கற்கண்டை அதில் போட்டு விடுங்கள்! இறுதியாக குபேர பகவானை நினைத்து ஒரு கிராம்பு! அவ்வளவுதான். அதற்கு பின்பு நீங்கள் பணத்தை சேர்க்க தொடங்கலாம்.

- Advertisement -

hundi

சிலர், பணத்தை போடுவது போல் போடுவார்கள்! பத்து நாட்கள் கழித்து, அடுத்த செலவு வந்துவிட்டது என்று சொல்லி, அந்த படத்தை எடுத்து செலவு செய்துவிடுவார்கள். பின்பு எப்படி சேமிப்பு உயரும்? உண்டியலில் போட்ட பணத்தை எக்காரணத்தைக் கொண்டும் எடுக்கக் கூடாது. அப்படி எடுக்கவேண்டிய சூழ்நிலை வந்தாலும், மற்ற செலவுகளை குறைத்து, நீங்கள் எடுத்த பணத்திற்கு, வட்டியோடு சேர்த்து, அதிகப்படியான தொகையை அந்த உண்டியலில் திருப்பி செலுத்த வேண்டும். ‘செலவே ஆகக்கூடாது!’ என்று பணத்தை சேர்ப்பதை விட, ‘சுப செலவுக்காக இந்த பணம் உபயோகமாகட்டும்’ என்ற நினைப்போடு தான், பணத்தை சேர்க்க வேண்டும், என்ற ஒரு கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
சுவையான மொறுமொறுவென்று ‘முருங்கைப்பூ வடை’ 10 நிமிடத்தில் எப்படி செய்வது?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -