7 வகையான மூலிகை டீ – இதை குடித்தால் எப்பொழுதும் தெம்பா இருப்பீங்க

mooligai tea benefits tamil
- Advertisement -

நம் நாட்டை பொறுத்தவரை காலை எழுந்ததும் தேனீர் அருந்துவது என்பது வாழ்வில் ஒரு சடங்கு போல மாறியுள்ளது. தேனீர் என்றாலே தேனீர் இலை தூள்கள் மற்றும் பசும்பால் அல்லது எருமைப் பால் கலந்து தான் அருந்துவார்கள். ஆனால் மூலிகை தேநீர் அருந்தும் பொழுது பால் சேர்க்காமல் அருந்துவது தான் சரியான முறையாகும். அந்த வகையில் எந்தெந்த மூலிகைகளை எப்படி பயன்படுத்தி மூலிகை தேநீர் அருந்தலாம் என்பதை குறித்து இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.

சங்கு பூ மூலிகை டீ
பொதுவாக சாலையின் ஓரங்களில், வயல் ஓரங்களில் நீல நிறத்தில் சங்குப்பூக்கள் பூத்திருப்பதை நாம் கண்டிருப்போம். இந்த சங்குப்பூ அற்புத மருத்துவ குணங்களை கொண்ட ஒரு மூலிகையாக இருக்கிறது. இந்த சங்கு பூக்களை பயன்படுத்தியும் சங்குப்பூ மூலிகை தேநீரை நாம் அருந்தலாம். அதற்கு முதலில் சிறிதளவு சங்கு பூக்களை பறித்து காய வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு அந்த சங்கு பூக்களை நீரில் போட்டு கொதிக்க வைத்து, வடிகட்டி எடுத்துக் கொண்டு, அந்த நீரில் சிறிதளவு எலுமிச்சை பழச்சாறு, சிறிதளவு தேன் கலந்து பருகி வந்தால் மன அழுத்தம் குறையும். வயிற்றுப்புண்கள் குணமாகும். நோய் எதிர்ப்பு சக்தி வலுப்பெறும்.

- Advertisement -

ஆவாரம் பூ மூலிகை டீ
“ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ” என்கிற பழமொழிக்கு ஏற்ப ஆவாரம்பூ தேநீர் அருந்துவதால் உடலில் பல நோய்கள் நீங்குவதாக கருதப்படுகிறது. ஆவாரம்பூ தேநீர் செய்வதற்கு ஆவாரம் பூக்களை பறித்து, அதன் காம்புகளை உடனடியாக நீக்கி, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் அந்த பூக்களை போட்டு சிறிது நேரம் கொதிக்க வைக்க வேண்டும். பிறகு கொதிக்க வைத்த அந்த நீரை வடிகட்டி எடுத்துக்கொண்டு, அந்த நீரில் எலுமிச்சை சாற்றை கலந்து அருந்தினால் உடலின் அதிக வெப்பநிலை குறையும்.

துளசி இலை மூலிகை டீ
துளசி இலைகள் அற்புதமான மருத்துவ பலன்களை கொண்டது என்பது நம் அனைவருக்குமே தெரியும் துளசி இலை தேநீர் அருந்த முதலில் தேவையான அளவு துளசி இலைகளை பறித்து, அவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு நீர் ஊற்றி கொதிக்கவைத்து வடிகட்டி அதில் தேவையான அளவு வெல்லம் மற்றும் சிறிதளவு ஏலக்காய் தூள் சேர்த்து பருகுவதால் ஜுரம், சுவாச பிரச்சனைகள் மற்றும் சளித்தொல்லை நீங்கும்.

- Advertisement -

புதினா இலை மூலிகை டீ
நாம் உணவில் அடிக்கடி பயன்படுத்தும் புதினா இலைகளை பயன்படுத்தி புதினா மூலிகை தேநீரை அருந்தலாம். அதற்கு முதலில் தேவையான அளவு புதினா இலைகளை நீரில் கொதிக்க வைத்து, வடிகட்டி எடுத்துக்கொண்ட பிறகு, அந்த நீரில் சிறிதளவு வெல்லம் கலந்து பருகி வந்தால் மூளை செயல்பாடு திறன் அதிகரிக்கும். உடல் சூடு குறையும்.

கொத்தமல்லி மூலிகை டீ
நாம் உணவில் அடிக்கடி பயன்படுத்தும் கொத்தமல்லி இலைகள் மிகச்சிறந்த மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. கொத்தமல்லியை தேநீர் பருக கொத்தமல்லி இலைகளை நன்கு கொதிக்க வைத்து, வடிகட்டி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு அந்த நீரில் சிறிதளவு சுக்கு தூள் மற்றும் தேவையான அளவு வெல்லம் சேர்த்து கலந்து பருகுவதால் வாயில் ஏற்படுகின்ற துர்நாற்றம் நீங்கி புத்துணர்ச்சியான சுவாசம் உண்டாகும். வாய்ப்புண்கள் ஆறும்.

- Advertisement -

முருங்கை இலை மூலிகை டீ
முருங்கை இலை தேநீர் அருந்த முதலில் தேவையான அளவு முருங்கை இலைகளை பறித்து, அவற்றை நன்கு கொதிக்கவைத்து வடிகட்டி வைத்துக்கொண்டு, அந்த நீரில் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து பருகவேண்டும். மேற்சொன்ன முறையில் முருங்கை இலை தேநீரை வாரத்திற்கு ஒரு முறை அருந்தி வந்தால் உடலில் எலும்புகள் பலம் பெறும். மங்கலாக இருக்கின்ற கண்பார்வை தெளிவு பெறும்.

செம்பருத்தி தேநீர்
பொதுவாக இன்று அனைவரின் வீடுகளிலும் செம்பருத்தி செடி உள்ளது. செம்பருத்தி மலர்களை பயன்படுத்தியும் செம்பருத்தி தேநீர் அருந்தலாம். செம்பருத்தி தேநீரை அடிக்கடி பருகுவதால் நம் உடலின் ஆரோக்கியம் மேம்படுகிறது. முதலில் உங்களுக்குத் தேவையான அளவு செம்பருத்தி மலர்களை பறித்து கொள்ள வேண்டும். பிறகு அந்த மலர்களின் இதழ்களை மட்டும் பிரித்து எடுத்து, அவற்றை தண்ணீரில் கொதிக்கவைத்து பின், அந்த நீரை வடிகட்டி எடுத்துக்கொண்டு அதில் சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் வெல்லம் கலந்து பருக வேண்டும்.

இதையும் படிக்கலாமே: முள்ளங்கிகீரையை எங்க பார்த்தாலும் மிஸ் பண்ணாம வாங்கி வந்து இப்படி பொரியல் செய்து பாருங்க. செம டேஸ்ட்.

கொய்யா இலை தேநீர்
கொய்யா இலைகளை பயன்படுத்தியும் நாம் மூலிகை தேனீர் அருந்தலாம். அதற்கு தேவையான அளவு கொய்யா இலைகளை பறித்து அவற்றை நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து, பின் வடிகட்டி எடுத்துக்கொண்டு, அந்த நீரில் சிறிதளவு ஏலக்காய் மற்றும் தேவையான அளவு வெல்லம் சேர்த்து, கலந்து பருகி வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும். வயிற்று வலி நீங்கும். அதீத உடல் எடையை குறைப்பதற்கு சிறந்த பானமாக இந்த கொய்யா இலை தேநீர் விளங்குகிறது. இப்படி மேலும் பல ரெசிப்பி மற்றும் ஆன்மீக தகவல்களை தெரிந்துகொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -