நாளை வளர்பிறையில், மூன்றாம் பிறை தரிசனத்தை பார்த்து விட்டு, இதை செய்யுங்கள்! நிச்சயம் வளர் பிறை நிலவு போல, உங்களின் செல்வ வளமும் வளர்ந்து கொண்டே இருக்கும்.

pirai

அமாவாசை முடிந்து மூன்றாவது நாள் வளர்பிறையில் சந்திர தரிசனத்தை பார்த்து விட்டு, நாம் எந்த ஒரு செயலைத் தொடங்கினாலும், அது நம் வாழ்க்கையில் வளர்ந்து கொண்டே இருக்கும் என்று சொல்லுவார்கள். அந்த வகையில் நமக்கு இருக்கக்கூடிய வறுமையானது நீங்கி, செல்வ செழிப்பும், தங்க நகைகளும் சேர்ந்து கொண்டே வளர்ந்து கொண்டே செல்ல வேண்டும் என்றால், இந்த வளர்பிறை தினத்தில் நாம் என்ன செய்யலாம் என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள வேண்டும்.

Moondram pirai

நாளை மூன்றாம் பிறை தரிசனம்! இந்த பரிகாரத்தை நாளை மாலை 6 மணி அளவில் செய்வது நமக்கு நன்மை தரும். மகாலட்சுமிக்கு உகந்த வெற்றியைத் தரக்கூடிய வெற்றிலை பாக்கு, ஒரு ரூபாய் நாணயம், சிறிதளவு பச்சை கற்பூரம், சிறிதளவு பச்சை குங்குமம், இதை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இரண்டு வெற்றிலை, இரண்டு பாக்கு போதுமானது.

அதன் பின்பாக உங்கள் வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு, ஒரு தாம்பூலத் தட்டில் வெற்றிலை பாக்கு, ஒரு ரூபாய் நாணயம், வைத்துவிட்டு, ‘ஓம் லட்சுமி குபேராய நமஹ’ என்ற மந்திரத்தை உச்சரித்துக் கொண்டு மோதிர விரலாலும் கட்டை விரலாலும் ஒரு சிட்டிகை குங்குமத்தை எடுத்து, அந்த ஒரு ரூபாய் நாணயத்தின் மேல் வைக்கவேண்டும்.

gubera

இதேபோல் மூன்று முறை, மூன்று சிட்டிகை குங்குமத்தை எடுத்து மூன்று முறை மந்திரத்தை உச்சரித்து அந்த நாணயத்தின் மேல் பச்சை கற்பூரத்தை வைத்து, அந்த வெற்றிலை பாக்கு, ஒரு ரூபாய் நாணயம், பச்சை கற்பூரம் எல்லாப் பொருட்களையும் ஒன்றாக மடித்து ஒரு பச்சை வண்ண நூலை போட்டு கட்டி, உங்கள் உள்ளங்கையில் வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

உங்களுடைய வீட்டில் வெளியே அல்லது மொட்டை மாடி பால்கனி எந்த இடமாக இருந்தாலும் சரி, சந்திர தரிசனம் கிடைக்கும் இடமாக இருக்க வேண்டும். அதாவது சந்திர தரிசனத்தை நீங்கள் பார்க்கவில்லை என்றாலும், மாலை 6.30 மணிக்கு மேலாக வானத்தைப் பார்த்தவாறு, உங்கள் கைகளை ஏந்தி, இருக்க வேண்டும். உங்கள் உள்ளங்கைகளில் இந்த வெற்றிலை பாக்கு கொண்ட, வெற்றிலை பொட்டலம் இருக்க வேண்டும்.

vetrilai pakku

இவ்வாறாக சந்திர பகவானிடம், குபேர பகவானிடம், லக்ஷ்மி தேவியிடம் உங்களுக்கு வேண்டிய வரத்தைக் கேளுங்கள். உங்களுக்கு தேவையான காசு பணத்தை கேளுங்கள். நிச்சயம் கிடைக்கும். நல்ல வேலையை கேட்கலாம். தொழிலில் லாபத்தை கேட்கலாம். ஆரோக்கியமான உடலை கேட்கலாம். திருமணத்திற்கு நல்ல மணமகன் கிடைக்க வேண்டும். நல்ல மணமகள் கிடைக்க வேண்டும் என்று கேட்கலாம். குழந்தை கேட்கலாம். இப்படி எதைக் கேட்டாலும் கிடைக்கும் என்பதில் சந்தேகமே கிடையாது.

pray

மீண்டும் உங்கள் கையில் இருக்கும் அந்த வெற்றிலை பாக்கு கொண்ட முடிச்சை பூஜை அறையில் கொண்டு வந்து வைத்து விடுங்கள். அடுத்த நாள் காலை எழுந்து குளித்து முடித்துவிட்டு, தீபமேற்றி வைத்துவிட்டு, அந்த வெற்றிலை கட்டியிருக்கும் முடிச்சை அவிழ்த்து, உள்ளே இருக்கும் குங்குமத்தை நெற்றியில் இட்டுக் கொள்ளலாம். அந்த ஒரு ரூபாய் நாணயத்தை பீரோவில் வைக்கலாம். அல்லது நீங்கள் பணம் சேர்க்கும் உண்டியலில் கூட போட்டு வைக்கலாம் தவறொன்றும் கிடையாது.

pournami

இப்படியாக பச்சை குங்குமம் இல்லாமல், வெறும் வெற்றிலை பாக்கு ஒரு ரூபாய் நாணயத்தை மட்டும் வைத்து கூட வேண்டுதல் வைக்கலாம். தவறொன்றுமில்லை. இந்த மாதம் வரும் வளர்பிறை என்று மட்டும் கிடையாது. அடுத்தடுத்து வரும் வளர்பிறை களிலும் இந்த வேண்டுதலை நீங்கள் வைப்பது, வாழ்க்கையில் முன்னேற்றத்தை தரக்கூடியதாக இருக்கும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.