நம் ஒவ்வொருவரும் நம்முடைய வாழ்க்கை நல்ல விதமாக அமைய வேண்டும், நல்வாழ்க்கை வாழவேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறோம். இதற்கான முயற்சிகளை நாம் செய்தாலும் கிரக சூழ்நிலைகளின் காரணமாக நம்மால் அந்த வாழ்க்கையை வாழ முடியாத நிலை உண்டாகும். அப்படிப்பட்ட நிலையில் அனைத்து விதமான கிரக சூழ்நிலைகளையும் மாற்றி சிறப்பான ஒரு வாழ்க்கையை வாழ்வதற்கு பலவிதமான வழிபாட்டு முறைகளையும் பரிகாரங்களையும் செய்வோம். அந்த வகையில் பங்குனி மாதத்தின் மூன்றாம் பிறை நாளான இன்று இந்த ஒரு தீபத்தை ஏற்றி வைத்து வழிபாடு செய்ய நம்முடைய வாழ்க்கை சிறப்பானதாக மாறும் அந்த தீப வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
மூன்றாம் பிறை தீப வழிபாடு
இன்று ஞாயிற்றுக்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய மூன்றாம் பிறை சந்திர தரிசனம். மேலும் இன்றைய நாள் யுகாதி திருநாளாக தெலுங்கு இனத்தை சேர்ந்தவர்கள் கொண்டாட கூடிய நாள். இதோடு மட்டுமல்லாமல் இன்று தான் வசந்த நவராத்திரியும் ஆரம்பம் ஆகிறது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த நாளில் நாம் தெய்வ வழிபாட்டை செய்வது என்பது நல்ல பலனையே தரும். மேலும் இன்றைய நாளில் இருந்து தொடர்ச்சியாக ஒன்பது நாட்கள் ராஜராஜேஸ்வரியின் வழிபாட்டை செய்வதன் மூலம் சிறப்பான வாழ்க்கை அமையும் என்றோ கூறப்படுகிறது.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த நாளில் நாம் எப்பொழுதும் தீபமேற்றி வழிபாடு செய்வதோடு விசேஷமாக ஒரு தீபத்தை ஏற்றி வைத்து வழிபாடு செய்தோம் என்றால் நம்முடைய வாழ்க்கையில் அனைத்து விதமான நன்மைகளும் உண்டாகும் என்றே கூறலாம். அந்த தீபத்தை மாலை 6:00 மணிக்கு ஏற்றுவது என்பது மிகவும் சிறப்பு. வீட்டு பூஜை அறையில் ஒரு தாம்பாள தட்டை வைத்துக் கொள்ளுங்கள். அதில் மஞ்சளை நன்றாக பரப்பிக் கொள்ளுங்கள். அந்த மஞ்சளில் நம்முடைய வலது கை மோதிர விரலை பயன்படுத்தி ஸ்வஸ்திக் சின்னத்தை வரைய வேண்டும். இப்படி வரைந்து முடித்த பிறகு அந்த ஸ்வஸ்திக் சின்னத்திற்கு நடுவே ஒரு அகல் விளக்கை வைத்து சுத்தமான பசு நெய்யை ஊற்றி மஞ்சள் நிற திரியை போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.
இந்த தீபத்தை பார்த்தவாறு “ஓம் சந்திரமௌலீஸ்வரர் போற்றி ஓம்” என்னும் மந்திரத்தை 27 முறை உச்சரித்து மஞ்சள் நிற மலர்களால் அந்த தீபத்திற்கு அர்ச்சனை செய்ய வேண்டும். இப்படி நாம் மாலை நேரத்தில் இந்த தீபத்தை பார்த்தவாறு இந்த மந்திரத்தை கூறுவதன் மூலம் நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் விலகி நல்வாழ்க்கை அமையும். இந்த தீபம் குறைந்தது ஒரு மணி நேரமாவது எரிய வேண்டும். பிறகு இதை குளிர வைத்த விடுங்கள். மறுநாள் காலையில் இந்த மஞ்சளை எடுத்து பெண்கள் முகத்தில் தாலிக்கயிற்றிலும் பூசி குளிக்கலாம், நிலை வாசலுக்கு பயன்படுத்தலாம் அல்லது வீட்டை சுத்தம் செய்யும் தண்ணீரில் கலந்து வீட்டை சுத்தம் செய்யலாம்.
இதையும் படிக்கலாமே:வேலை தொழில் தொடர்பான பிரச்சனைகள் தீர
இந்த முறையில் நாம் இன்றைய நாள் தீபம் ஏற்றி வழிபாடு செய்வதன் மூலம் நம்முடைய வாழ்க்கையில் அனைத்து விதமான மங்கள நிகழ்வுகளும் நடைபெற்று நல்ல சிறப்பான வாழ்க்கை வாழ முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.