இதை மட்டும் உங்களுடைய முகத்தில் ஒரு முறை போட்டு தான் பாருங்களேன். பிறகு 60 வயதிலும் 20 போல இளமையாக இருப்பீர்கள்! ஆயுசுக்கும் முக சுருக்கம் வர வாய்ப்பே இல்லை.

face15
- Advertisement -

வயதான தோற்றம் வருவதற்கு முதல் காரணமே, இந்த தோல் சுருக்கம் தான். தோல் சுருக்கத்தை தள்ளிப்போட்டு விட்டாலே போதும். வாழ்நாள் முழுதும் நாம் இளமையான தோற்றத்தை பெற முடியும். இந்த தோல் சுருக்கத்தைத் தள்ளிப்போட சுலபமான முறையில், செலவில்லாத முறையில் என்ன வழி இருக்கிறது? அதை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த குறிப்புக்கு நாம் பயன்படுத்த போகும் பருப்பு, மைசூர் பருப்பு. துவரம் பருப்பில் சிவப்பு நிறத்தில் இருக்கக்கூடிய இந்த பருப்பு வகை ரேஷன் கடைகளில் கூட சுலபமாக நமக்கு கிடைக்கும். இதை வைத்து டிரை ஸ்கின் உள்ளவர்கள், ஆயில் ஸ்கின் உள்ளவர்கள், முகத்தை பளபளப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு மூன்று விதமான குறிப்புகள். உங்களுக்காக மட்டும். மிஸ் பண்ணாம தெரிஞ்சுக்கோங்க.

முதலில் மைசூர் பருப்பை மிக்ஸியில் போட்டு அல்லது மிஷினில் கொடுத்து நைசாக அரைத்து வைத்துக்கொள்ளுங்கள். முதலில் ஆயில் ஸ்கின் உள்ளவர்கள் என்ன ஃபேஸ் மாஸ்க் போட வேண்டும் என்று பார்த்துவிடுவோம். ஒரு சிறிய கிண்ணத்தில் மைசூர் பருப்பு பொடி – 1 ஸ்பூன், முல்தானிமெட்டி – 1/2 ஸ்பூன், தேவையான அளவு தேங்காய் பாலை விட்டு, பேஸ்ட் போல் கலந்து கொள்ள வேண்டும். இதை முகத்தில் ஃபேஸ் பேக் போட்டு 10 லிருந்து 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி விடுங்கள். வாரத்தில் ஒரு நாள் மட்டும் இதை செய்தால் போதும்.

- Advertisement -

உங்களுக்கு மிகவும் வரட்சியான சருமமாக இருந்தால் நீங்கள் என்ன செய்யவேண்டும். ஒரு சிறிய கிண்ணத்தில் 2 லிருந்து 3 ஸ்பூன் அளவு புளிக்காத கெட்டித் தயிரை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் 1 ஸ்பூன் மைசூர் பருப்பு பொடியை சேர்த்து நன்றாக கலந்து, பேஸ்ட் போல தயார் செய்து, முகத்தில் போட்டு 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த தண்ணீரில் கழுவி விட வேண்டும். இதை டிரை ஸ்கின் உள்ளவர்கள் தினந்தோறும் செய்து வரலாம்.

mysore-dal1

அடுத்தபடியாக சொல்லப்போகும் குறிப்பை யார் வேண்டுமென்றாலும் பயன்படுத்தலாம். ஆயில் ஸ்கின் உள்ளவர்கள், ட்ரை ஸ்கின் உள்ளவர்கள், பளபளப்பான சருமத்தை பெற வேண்டுமென்றால் இந்த குறிப்பு உபயோகமானதாக இருக்கும்.

- Advertisement -

ஒரு சிறிய பௌலில் கடலை மாவு – 1 ஸ்பூன், மைசூர் பருப்பு பொடி – 1 ஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் – 1/4 ஸ்பூன், ரோஸ் வாட்டர் ஊற்றி இதை பேஸ்ட் போல் கலந்து முகத்தில் அப்ளை செய்து கொள்ள வேண்டும்.  வாரத்தில் இரண்டு நாட்கள் இதை முகத்தில் போட்டுக் கொள்ளலாம். எப்போதும் போல 10 நிமிடங்கள் காய்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவி விடுங்கள். உடனே சோப்பு போட்டு கழுவ கூடாது.

mysore-dal2

ஒரே ஒரு மைசூர் பருப்பு பவுடர் உங்கள் வீட்டில் இருந்து விட்டாலே போதும். உங்களுடைய முகம் பொலிவடையும். வயதான தோற்றத்தை தள்ளிப் போடலாம். இதற்கு ஆகும் செலவு அதிகம் கிடையாது. நமக்கு சுலபமாக கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்து குறைந்த பட்ஜெட்டில் அழகை பெறுவதற்கு இது ஒரு பெஸ்ட் டிப்ஸ். உங்களுக்கும் இந்த குறிப்பு பிடித்திருந்தால் நீங்களும் ட்ரை பண்ணிப் பார்க்கலாம்.

- Advertisement -