மௌன ராகம் : மல்லிகாவை கண்டுபிடிக்க புதிய முயற்சி

Mouna ragam sakthi

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மௌன ராகம் தொடரில் ஒரு புதிய திருப்பம் வந்துள்ளது. மல்லிகா உயிரோடு இல்லை என்று என்று அனைவரும் உறுதியாக இருந்த நிலையில் இப்போது மல்லிகாவை தேடும் பணியில் இறங்க உள்ளனர் அவரது குடுபத்தினர். அது பற்றிய ஒரு ப்ரோமோ வீடியோ இதோ.

சக்தியின் மாமாவும் அத்தையும் கார்த்திக் வீட்டிற்கு அவளை காண வருகின்றனர். அப்போது சக்தியின் மாமா, நந்தினியிடம் கார்த்திக் குறித்து விசாரிக்கிறார். அப்போது நந்தினி, கார்த்திக் மற்றும் காதம்பரிக்கு இடையே நடநத பிரச்சனைகள் குறித்தும் கார்த்திக் அவரை விவாகரத்து செய்ய நினைப்பது குறித்தும் கூறுகிறார். அதை கேட்ட உடன் சக்தியின் அத்தை ஒரு புதிய திட்டம் தீட்டுகிறார். அதன் படி மல்லிகாவை தேடி கண்டுபிடித்து அவரை கார்த்திக்கிற்கு மீண்டும் திருமணம் செய்துவைக்க வன்னெடும் என்று அவர் சக்தியின் மாமாவிடம் கூறுகிறார்.

சக்தியின் அத்தை இப்படி கூறுவதன் மூலம், அவர்களுக்கு மல்லிகா உயிரோடு இருப்பது நிச்சயம் தெரிந்திருக்கும் என்பது நன்றாக தெரிகிறது. இந்த நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பதை அறிய நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.