இனி உடம்பு வலி, கை கால் மூட்டு வலி என்று அடிக்கடி மாத்திரை போடாதீங்க. மாதத்தில் 1 நாள் இந்த தோசையை சுட்டு சாப்பிடுங்க போதும். உடம்பு வலி பறந்து போயிரும்.

dosai2
- Advertisement -

உடம்பு வலிக்குது, கை கால் வலிக்குது, முட்டி வலிக்குது என்று சொல்லி பெண்களாக இருக்கட்டும் ஆண்களாக இருக்கட்டும் அடிக்கடி வலி மாத்திரையை வாங்கி போடக்கூடிய பழக்கத்தை வைத்திருப்பார்கள். மருந்து மாத்திரையை சாப்பிட்டு உடல் வலியை போக்குவது அவ்வளவு நல்லது அல்ல. உடம்பில் இருக்கும் அத்தனை வலிகளும் நீங்க, வாயு தொல்லை சரியாக, சூப்பரான ஒரு வைத்தியம் தான் இந்த முடக்கத்தான் கீரை. காலப்போக்கில் இதை நாம் மறந்து விட்டோம். மாதம் ஒரு முறை இந்த முடக்கத்தான் கீரையை சாப்பிட்டால் கூட அவ்வளவு நல்லது. குழந்தைகள் கூட வேண்டாம் என்று இந்த முடக்கத்தான் கீரையை சொல்லவே மாட்டார்கள். அந்த அளவுக்கு சூப்பரான ஒரு முடக்கத்தான் கீரை தோசையை தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம். மிஸ் பண்ணாம ரெசிபியை படிங்க‌. பிடித்திருந்தால் இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க.

முதலில் ஒரு பாத்திரத்தில் 2 டம்ளர் அளவு இட்லி அரிசி போட்டுக்கோங்க. இன்னொரு பாத்திரத்தில் உளுந்தம் பருப்பு 1/2 டம்ளர், 1/4 ஸ்பூன் வெந்தயம் போட்டு, இந்த இட்லி அரிசியையும், உளுந்தையும் நன்றாக கழுவி விட்டு, நல்ல தண்ணீர் ஊற்றி நான்கு மணி நேரம் ஊற வைக்கவும். தனித்தனியாகவே ஊற வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இரண்டு கைப்பிடி அளவு முடக்கத்தான் கீரையை எடுத்து நன்றாக கழுவி, சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இட்லி அரிசியும் உளுந்தும் நன்றாக ஊறிய பின்பு, இதை கிரைண்டரில் ஆட்டலாம். மிக்ஸியிலும் ஆட்டலாம். மிக்ஸி ஜாரில் ஊறிய அரிசியை, முதலில் போட்டு நைசாக ஆட்டி எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு ஊறி இருக்கும் உளுந்தம் பருப்பையும், வெந்தயத்தையும், சேர்த்து கூடவே எடுத்து வைத்திருக்கும் முடக்கத்தான் கீரையையும் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி இதையும் விழுது போல ஆட்டிக் கொள்ள வேண்டும்.

இப்போது அரிசி மாவு, உளுந்து முளைக்கத்தான் கீரை சேர்த்து அரைத்த மாவை ஒன்றாக ஊற்றி, தேவையான அளவு உப்பு போட்டு, இட்லி மாவு கரைப்பது போலவே உங்கள் கையை கொண்டு கரைத்து ஒரு மூடி போட்டு 6 லிருந்து 8 மணி நேரம் இந்த மாவை புளிக்க வைத்து விட வேண்டும். அதன் பின்பு எப்போதும் போல மாவை கரண்டியை வைத்து கலந்து தேவைப்பட்டால், கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கரைத்து இதை அரிசி மாவு தோசை வார்ப்பது போலவே மெல்லிசாக தீட்டி நெய் அல்லது எண்ணெய் ஊற்றி மொரு மொரு என சுட்டுக் கொடுத்தால், குழந்தைகள் கூட சாப்பிடுவார்கள். வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள். குறிப்பாக நெய் ஊற்றி இந்த தோசை சுட்டால் ரொம்பவும் மனமாக இருக்கும்.

- Advertisement -

மாதத்தில் ஒரு நாள் இந்த தோசையை சாப்பிட்டாலும் நம்முடைய உடலுக்கு அவ்வளவு ஆரோக்கியம் கிடைக்கும். உடம்பு அடிச்சு போட்டது மாதிரி எப்போதுமே வலி இருக்கிறது என்பவர்கள், இந்த தோசையை ட்ரை பண்ணுங்க. ஆரோக்கியமாக இருக்கிறவங்களும் இந்த தோசையை சாப்பிடலாம். அந்த ஆரோக்கியம் நீண்ட நாட்களுக்கு நிலைத்திருக்கும். குறிப்பா உடம்பு வலியே இருக்காது.

இதையும் படிக்கலாமே: அஞ்சு நிமிசத்தில் கிராமத்து அவசர டிபன் சாம்பார் எப்படி தயார் செய்றதுன்னு பாக்கலாமா?

பின்குறிப்பு: உங்களுடைய வீட்டில் ஏற்கனவே அரைத்த இட்லி தோசை மாவு பிரிட்ஜில் இருக்கிறது என்றால், வெறும் கீரையை மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். சிறிய கிண்ணத்தில் கொஞ்சமாக தோசை மாவை எடுத்து, அந்த தோசை மாவில் இந்த அரைத்த கீரையை ஊற்றி கலந்து 1 மணி நேரம் கழித்து, அந்த தோசை மாவில் தோசை வார்த்து சாப்பிடலாம். அது நம்முடைய விருப்பம் தான்.

- Advertisement -