புரட்டாசி மாதம் பிறந்து விட்டாலே, இந்த வார்த்தைக்கு ரொம்ப ரொம்ப சக்தி அதிகம். முதல் வாரம் தளிகை போட்டவர்கள் வீட்டில் இந்த வார்த்தை கட்டாயம் சொல்லப்பட்டிருக்கும். புரட்டாசி பிறந்து விட்டாலே இந்த வார்த்தை ஒலிக்காத இடமே கிடையாது. இந்த வார்த்தையை சொல்லும்போதே நம் மனதிற்குள் ஒரு சந்தோஷம். இந்த வார்த்தையை கேட்கும் போது நமக்கு ஒரு பரவசம் ஏற்படும். அந்த திருப்பதிக்கே சென்று பெருமாளை தரிசனம் செய்த ஒரு நிம்மதியும் நமக்கு கிடைக்கும்.
இன்று புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை. வாய்ப்பு உள்ளவர்கள் அந்த பெருமாளின் அனுக்கிரகத்தால் தளிகை போட்டு பெருமாளை வீட்டிற்கு அழைத்திருப்பீர்கள். இன்று தளிகை போட வாய்ப்பை தவறவிட்டவர்கள், பெருமாளின் அனுகிரகத்தைப் பெற இன்று மாலை வீட்டில் விளக்கு ஏற்றும் போது சொல்ல வேண்டிய அந்த வார்த்தை என்ன.
பெரும்பாலும் எல்லோரும் அந்த வார்த்தையை கண்டு பிடித்து இருப்பீர்கள். இருந்தாலும் அந்த வார்த்தை என்ன அந்த வார்த்தையை விளக்கு ஏற்றும்போது, இன்று மாலை வீட்டில் எப்படி சொல்ல வேண்டும் என்பதை பற்றிய தகவலை இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.
பெருமாள் மந்திர வார்த்தை
கோவிந்தா கோவிந்தா கோவிந்தா! இந்த வார்த்தைக்கு நிகர் வேறு எதுவுமே இல்லை. இன்ற இந்த வார்த்தை ஒரு முறை உச்சரித்தாலே உங்களுக்கு கோடி புண்ணியம். இன்று மாலை பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். எல்லோர் கையிலும் துளசி இலைகளை வைத்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் உதிரி புஷ்பங்களையும் கலந்து வைத்துக் கொள்ளுங்கள்.
விளக்கு ஏற்றும்போது கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்தை குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சத்தத்தோடு எழுப்ப வேண்டும். விளக்கு ஏற்றிவிட்டு கையில் இருக்கும் புஷ்பத்தையும் துளசியையும் அந்த பெருமாள் அப்படியே அர்ச்சனையாக போடுங்கள். கோவிந்தா கோவிந்தா என்ற நாமத்தை சொல்லிக்கொண்டே, அந்த பூக்களால் அர்ச்சனை செய்து விட்டு குடும்பத்தோடு பெருமாளை நமஸ்காரம் செய்து, இன்றைய சனிக்கிழமை வழிபாட்டை மேற்கொண்டாலே போதும். உங்களுக்கு உண்டான பலன் முழுமையாக கிடைத்துவிடும்.
அந்த திருப்பதி பெருமாள் இறங்கி வந்து உங்கள் வீட்டு பூஜை அறையில் குடி கொள்வார். அந்த திருப்பதி பெருமாளுக்கு கேட்கும் படி குடும்பத்துடன் கோவிந்தா கோஷம் போடலாம். தவறே கிடையாது. இன்று ஒரு நாள் சிரமம் பார்க்காமல் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வீட்டில் பெருமாளை அழைத்து அமர வையுங்கள். குடும்ப கஷ்டங்கள் அனைத்தும் தீரும்.
இதையும் படிக்கலாமே: 22-09-2024 தேய்பிறை பஞ்சமி திதி வழிபாடு
வீட்டில் இருந்த தரித்திரம் எல்லாம் விலகும். மகாலட்சுமி தேவி வைகுண்டத்தில் இருந்து வந்து உங்கள் வீட்டில் அமர்ந்து கொள்வாள். பண கஷ்டத்தை எல்லாம் தீர்த்து வைப்பாள். வேறு என்ன வேண்டும். நிம்மதிக்கு அளவே இருக்காது. இவ்வளவு பிரச்சனைகளை நீங்கள் இதுநாள் வரை வாழ்க்கையில் கடந்து வந்திருந்தாலும், விளக்கு ஏற்றி வீடு முழுவதும் எதிரொலிக்கும்படி அந்த கோவிந்தா கோஷத்தை போடும்போது, அத்தனை கஷ்டங்களும் முடிந்தது போல ஒரு உணர்வு வரும். நிச்சயம் நல்லதே நடக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.