முடி நீளமாக வளர்ந்தால் மட்டும் போதாது, அடர்த்தியாகவும் வளர்ந்தால் தான் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். ஆனால் சிலருக்கு இருக்கின்ற முடி நீளமாக வளரும், புதிய முடிகள் முளைக்காத காரணத்தினால் முடி தின்னாக மெலிந்து காணப்படும். இப்படிப்பட்டவர்களுக்கு நல்ல ஒரு ஹேர் பேக்காக இருக்கக்கூடிய இந்த இயற்கையான மூலிகை பொருட்கள் என்னென்ன? இதை எப்படி பயன்படுத்த வேண்டும்? என்பது போன்ற அழகு குறிப்பு தகவல்களை தான் இந்த பதிவில் இனி தொடர்ந்து காண இருக்கிறோம்.
தலைமுடிக்கு சரியான ரத்த ஓட்டம் இல்லாத காரணத்தினால் பெரும்பாலும் அடர்த்தி குறைகிறது. அயன் சத்துள்ள உணவுகளை அடிக்கடி எடுத்துக் கொள்பவர்களுக்கு இந்த பிரச்சனை குறைய ஆரம்பிக்கும். முருங்கைக் கீரையில் ஏராளமான அயர்ன் சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இதை அடிக்கடி சூப் அல்லது பொரியல் பண்ணி சாப்பிடும் பொழுது உடலில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால் முடி உதிர்வது கட்டுப்பட்டு, வேகமாகவும் முடி வளர செய்யும்.
இந்த முருங்கைக் கீரையை கொண்ட ஹேர் பேக் போட்டால் தலைமுடியின் வேர்க்கால்களுக்கு நல்ல ஒரு ஊட்டச்சத்து கிடைக்கும். இதனால் அடர்த்தியான முடி உங்களுக்கு கிடைக்கும். இயற்கையாகவே தலைமுடிக்கு சத்துக்கள் தேவை. உடலுக்கு உள்ளேயும், வெளியேயும் முடிக்கு தேவையான சத்தை நாம் எடுத்துக் கொள்ளும் பொழுது தான் அது ஆரோக்கியமாக இருக்கிறது.
நான் நல்ல சத்துள்ள உணவுகளை தான் எடுத்துக் கொள்கிறேன் ஆனாலும் எனக்கு முடி உதிர்கிறது, அடர்த்தியாக மாட்டேன் என்கிறது என்று சொல்லக்கூடாது. எளிதாக நான்கு பொருட்களை வைத்து செய்யக்கூடிய இந்த ஹேர் பேக் முடிக்கு போஷாக்கான சத்துக்களை கொடுத்து, வேரில் இருந்தே வலுப்பெற செய்கிறது. ஒரு முடியை பிடித்து லேசாக இழுத்தாலே உடைந்து போக கூடாது, ஆனால் அப்படி இருந்தால் உங்களுடைய தலைமுடி வலுவில்லை என்பதை நீங்கள் உணரலாம்.
இப்படிப்பட்டவர்கள் முதலில் ஒரு கைப்பிடி அளவிற்கு உளுந்தை எடுத்து கழுவி சுத்தம் செய்து அது மூழ்கும் அளவிற்கு மட்டும் தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ளுங்கள். ஒரு மணி நேரம் உளுந்து ஊறி தண்ணீரை எல்லாம் உறிந்து வைத்துக் கொண்ட பின்பு, இதனுடன் ஒரு கைப்பிடி அளவிற்கு முருங்கை இலைகளை சுத்தம் செய்து சேர்த்துக் கொள்ளுங்கள். ரெண்டு செம்பருத்தி பூக்கள் மற்றும் அதனுடைய இலைகள் ஒரு கைப்பிடி அளவிற்கு சேர்த்து நைஸ் ஆனா பேஸ்ட் கன்சிஸ்டெண்சிக்கு தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ள வேண்டும்.
இதையும் படிக்கலாமே:
காடு போல அடர்ந்த கரு கரு முடி வளர இந்த ஒரு டம்ளர் பச்சை தண்ணி இருந்தா போதும். என்ன ஆச்சரியமா இருக்கா? முடி வளர இதுவரைக்கும் நீங்க கேள்விப்படாத சிம்பிள் டிப்ஸ்.
அரைத்து எடுத்த இந்த விழுதிணை ஒரு மெல்லிய காட்டன் துணியில் போட்டால் சக்கைகள் தனியாகவும், அதன் சத்துக்கள் கிரீம் போல தனியாகவும் நமக்கு கிடைக்கும். இந்த கிரீம் போன்ற வடிகட்டி எடுத்த பேஸ்ட்டை தலை முழுவதும் தடவிக் கொள்ள வேண்டும். மண்டை ஓட்டு பகுதியில் நன்கு மசாஜ் செய்த பின்பு, தலைமுடி முழுவதும் நுனி வரை எல்லா இடங்களிலும் தடவி கொண்டை போல கட்டிக் கொள்ளுங்கள். அரை மணி நேரம் அப்படியே ஊற விட்டு விடுங்கள். குளிர்ச்சி ஒத்துக் கொள்பவர்கள் இதனுடன் வெந்தயம் கூட நீங்கள் சேர்த்து அரைக்கலாம். சிலருக்கு குளிர்ச்சி ஒவ்வாது என்பதால் அதனை தவிர்ப்பது நல்லது. பிறகு சாதாரணமாக சீயக்காய் அல்லது ஷாம்பு போட்டு குளித்து பாருங்கள். உங்களுடைய முடி பவுன்சியாக இருக்கும். தொடர்ந்து இதே போல ஒவ்வொரு வாரமும் செய்து வந்தால் நாளடைவில் உங்களுடைய இழந்த முடியும் மீண்டும் முளைக்க ஆரம்பிக்கும், இதனால் முடியின் அடர்த்தி நிச்சயம் அதிகரிக்கும்.