முகப்பருக்கள் மறைந்தாலும் அது உண்டாக்கிய வடுக்கள் மறையவில்லையா? 2 மாதம் இதை தடவை பாருங்க, முகத்தில் ஒரு வடு கூட இல்லாமல் பளிங்கு போல் ஜொலிக்கும்!

pimple-oil
- Advertisement -

முகத்திலிருக்கும் முகப்பருக்கள் மறைந்தாலும், அது உண்டாக்கி விட்டு சென்ற வடுக்கள் மட்டும் ஒருபோதும் அவ்வளவு எளிதாக மறைந்து விடுவதில்லை. பருக்களும், அதன் வடுக்களும் நாளடைவில் கரும்புள்ளிகளாக நீங்காமல் நம் சருமத்தில் பதிந்து விடும். சிலருக்கு பருக்கள் மறைந்து வடுக்களாக, குழிகளாக மாறிவிடும். அப்படியான சருமம் கொண்டவர்கள் 2 மாதம் இதை தடவினால் போதும், ஒரு வடு கூட இல்லாமல் முகம் பளிங்கு போல ஜொலிக்க ஆரம்பிக்கும். சாதாரணமாக நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே இதனை செய்து விடலாம். அதற்கு நாம் செய்ய வேண்டியது என்ன? என்பதை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

சுற்றுச்சூழல் மற்றும் மாசு காரணமாக ஏற்படும் முகப்பருக்கள் நாளடைவில் நம் பராமரிப்பின் காரணமாக மறைந்தாலும், அவை விட்டுச் சென்ற வடுக்களிலிருந்து நம்மால் மீள முடியாமல் போய்விடும் ஆபத்து உண்டு. இதற்கு ரொம்பவே எளிதாக நம் வீட்டுப் பொருட்களை வைத்து விரட்டி அடிக்கப் போகிறோம். முதலில் பாதாம் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் பயன்படுத்த இருக்கிறோம்.

- Advertisement -

பாதாம் எண்ணெய் இருப்பவர்கள் அதனை பயன்படுத்திக் கொள்ளலாம், இல்லை என்றால் வீட்டில் இருக்கும் சாதாரண தேங்காய் எண்ணெய் போதுமானது. ஒரு பெரிய பவுல் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு டீஸ்பூன் அளவிற்கு பாதாம் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். இதனுடன் ஒரு டீஸ்பூன் அளவிற்கு காய்ச்சாத பால் சேர்க்க வேண்டும். பாக்கெட் பால், பசும்பால் எதுவாக இருந்தாலும் பரவாயில்லை ஒரு டீஸ்பூன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். பின்னர் ஒரு டீஸ்பூன் அளவிற்கு சுத்தமான தேன் சேர்க்க வேண்டும். தேனில் இருக்கும் மருத்துவ குணங்கள் நம் சருமத்தை பொலிவுடன் வைத்துக் கொள்ளும்.

இந்த மூன்று பொருட்களை நன்கு கலந்த பின்பு நான்காவது பொருளாக அரை டீஸ்பூன் அளவிற்கு எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளுங்கள். எலுமிச்சை சாறு நுண்ணுயிரிகளுக்கு எதிராக செயல்படும் என்பதால் சருமத் துளைகளில் இருக்கும் கெட்ட கழிவுகளை நீக்கி சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். இந்த நான்கு பொருட்களையும் நன்கு கலந்த பின்பு முகம் முழுவதும் தடவிக் கொள்ள வேண்டும். 20 நிமிடம் நன்கு காயவிட்டு உலர்ந்த பின்பு கழுவி கொள்ளுங்கள். இதனை நீங்கள் குளிக்கப் போவதற்கு முன்பு காலை வேளையில் செய்ய வேண்டும்.

- Advertisement -

ஒரு மணி நேரம் கழித்து நீங்கள் குளித்துக் கொள்ளலாம். தூங்குவதற்கு முன்பாக கொஞ்சம் கற்றாழை ஜெல்லை பரித்து பிரஷ்ஷாக பயன்படுத்துங்கள். கற்றாழை ஜெல்லை பறிக்கும் பொழுது ஒரு விதமான கசப்புத்தன்மை அதில் இருக்கும். எனவே தோல் நீக்கிவிட்டு உள்ளே இருக்கும் ஜெல்லை நன்கு ஐந்தாறு முறை அலச வேண்டும். அதன் பின்பு தான் அதனை குழைத்து பயன்படுத்த வேண்டும். நீங்கள் ஆண்களாக இருந்தால் கற்றாழை ஜெல்லை மட்டும் பயன்படுத்துங்கள்.

பெண்களாக இருந்தால் அதனுடன் கால் டீஸ்பூன் அளவிற்கு கஸ்தூரி மஞ்சள் சேர்த்து நன்கு கலந்து முகம் முழுவதும் தடவிக் கொள்ளுங்கள். 10 நிமிடம் கழித்து நன்கு முகத்தை துடைத்து விட்டு பின்னர் உறங்கச் செல்லலாம். இரவு முழுவதும் அப்படியே ஊற விட்டு விடக்கூடாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். இது போல் தொடர்ந்து காலையிலும், இரவிலும் வாரமிருமுறை நீங்கள் செய்து வர இரண்டே மாதத்தில் முகத்தில் இருக்கும் ஒரு வடுக்கள் கூட காணாமல் போயிருக்கும்.

- Advertisement -